நாள் – 29-03-2022 – தேவ செய்தி
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவாநித்திய கன்மலையாயிருக்கிறார். (ஏசா 26:3-4).
கழுகின் சண்டையை கவனித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி கவனித்திருந்தால், கழுகுக்கு அதிகமான நேரங்களில் சறுக்கிச் செல்வது பிடிக்கும் மேலும் பறப்பதில் அதற்கு அலாதி பிரியம். அனைத்து உயிரினங்களும் புயலுக்கு பயப்படும், ஆனால் கழுகு புயலின் எதிர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும், உண்மையில் சொன்னப்போனால் புயல்கள் கழுகு பற்ப்பதை இன்னும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றன.
நாமும் நம்முடைய வாழ்வில் மிக கடினமான புயல் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். பிரச்சனையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. வாழ்வில் வரும் முட்டுகட்டைகளால் பாதிக்கப்படாமல் கழுகுகளைப் போல அவற்றை எவ்வாறு நம்முடைய நலனுக்காக மாற்றவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பரலோக பிதாவின் உதவியை நாடினால், நம் வாழ்வின் ஒவ்வொரு எதிர்ப்பும் நம்முடைய உயர்வுக்கான உதவியாக மாறும்.
ரோமர் 8:28 – அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மன அமைதியை தேடுகிறோம். இயேசு கிறிஸ்து அமைதியின் இளவரசர் மேலும் அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அமைதியை அவர் கொடுக்கிறார்.
யோவா 14:27 – சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இயேசு கொடுக்கும் இந்த மன அமைதியை பெற, சூழ்நிலையின் பாரம் நம்மை பாரப்படுத்தாமல் இருக்க ஆன்மீக ரீதியில் நம்முடைய உள்ளார்ந்த மனிதனை மாற்ற வேண்டும். தண்ணீர் உள்ளே புகாத வரையில் படகு தண்ணீர்மேல் அழகாக மிதக்கிறது. அதேபோல தண்ணீரை அதாவது, சூழ்நிலைகள் நம்மைப் பாதகமாகப் பாதிக்கவோ, வேறுவிதமாக சொன்னால் நமக்குள் நுழையவோ அனுமதிக்காவிட்டால் நம்முடைய வாழ்க்கைப் படகு பாதுகாப்பாக மிதக்கும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,
யோவான் 16:33 – என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவள். என்னுடைய திருமணத்திற்கு முன், கிறிஸ்துவ மதத்தையும் சேர்த்து எல்லா மதத்திலும் நம்பிக்கை வைத்தேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு தெரிந்த கடவுள்களில் ஒருவராகவே பார்த்தேன். நான் ஒரு மிஷனெரி பள்ளியில் படித்துகொண்டிருந்த போது நான் இயேசுவை நெருக்கமாக அறிந்து கொண்டேன். என் திருமணத்திற்குப் பின் நான் நிராகரிப்பு, வெறுப்பு, சதி தனிமைபடுத்துதலுக்கு ஆளானேன். மனிதர்களுடைய உதவியை நாடுவதற்கு பதிலாக நான் கர்த்தருடைய வேதத்தை நாடினேன்.
சங் 119:28 – சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்..
என்னுடைய புயல்சூழ்ந்த வாழ்விலே, அமைதியின் இளவரசர் எனக்கு சொல்லிகொடுத்தது என்னவென்றால், அவர் பல வழிகளில் ஒரு வழி அல்ல மாறாக பரலோக பிதாவிடம் சென்று சேர ஒரே வழி அவர்தான் என்று புரிய வைத்தார்.
யோவா 14:6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
என்னுடைய சூழ்நிலை எவ்வளாவு மாறாக இருந்தாலும் மன ரம்மியாக இருக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு கற்றுகொடுத்தார். இதை உடனடியாக பெற முடியாதுதான். நம்முடைய உள்ளத்தை மாற்ற பரிசுத்த ஆவியானவருக்கு நாம் அனுமதி கொடுக்க வேண்டும். எதிராக இருக்கும் சூழலை எதிர்ப்பது பின்னர் அதையே தனது நன்மைக்காக மாற்றிக்கொள்வது எப்படி என்று அவர் சொல்லி தருவார்.
என்னுடைய பாலைவன வாழ்க்கை பயணத்தில் மன அமைதியைப் பெற அநேக ஆன்மீக யுத்திகளை தேவன் எனக்கு கற்றுக்கொடுத்தார்.
முதலாவதாக நான் கற்றுக்கொண்டது, கர்த்தருடைய வேதத்தில் நிலைத்து நிற்பது. கர்த்தருடைய வசனத்தை நாம் படிக்கும்போது தேவ பிரசன்னம் நம்முடைய முழுவதுமாக ஆட்கொள்கிறது. இது மற்ற புத்தகங்களைப்போல அல்ல. கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது.
எபி 4:12 – தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்க்கையை வழி நடத்த நாம் அனுமதிக்க வேண்டும்.
இரண்டாவதாக நான் கற்றது, நம்முடைய ஆன்மீக யுத்தத்தை, இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கழுகுகள் தங்கள் எதிரியுடன் சண்டையிடுவதில் அற்புதமான குணம் கொண்டவை. அவை பாம்புபோல தனது இரையுடன் தரையில் சண்டையிடுவதில்லை, ஏனென்றால் தரை பாம்பின் பகுதி, அங்கு அதுதான் வல்லமை கொண்டது. கழுகு பாம்பை அதன் வலிமையான பகுதியான தரையிலிருந்து எடுத்து வானத்தில் தூக்கிச் செல்கிறது. அந்த நொடியே பாம்பு சக்தி அற்றுப்போகிறது, கழுகு எந்தப் போராட்டமும் இல்லாமல் அதை இறையாக பெறுகிறது. அதேபோல நாமும் நம்முடைய எதிரியுடன் தரையில் – அதாவது வாய்ச் சண்டை, கவலைப்படுவது போல யுத்தம் செய்யக்கூடாது,
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலி 4:6-7).
நம்முடைய யுத்தம் முழங்கால் யுத்தமாக இருக்க வேண்டும், அதாவது ஜெபம் மற்றும் விண்ணப்பங்கள் மூலமாக. இப்படி செய்வது தானாகவே நம்முடைய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றும் மேலும் கர்த்தர் இடைபடுவதால் நமக்கு நிச்சயம் வெற்றி உண்டு. என்னுடைய ஆவிக்குறிய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்ட பகுதியில் எடுத்துச் செல்ல பல ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். கர்த்தருடைய வார்த்தை ஆன்மீக யுத்தத்திற்கு நம்மை தயார் செய்கிறது.
ஏசா 40:31 – கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
நம்முடைய ஜெபத்தையும், விண்ணப்பங்களையும் கர்த்தருக்கு முன்பாக வைத்து நம்மை வழி நடத்த கர்த்தரிடம் கேட்க வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கை வண்டியை ஓட்டும் பொறுப்பை கர்த்தரிடம் கொடுங்கள், நீங்கள் அமைதியாக இருந்து வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக கழியுங்கள்.
ஜெபம்
இயேசுவே, நீரே எங்கள் ஆத்ம மேய்ப்பன், எங்கள் ஆத்துமாவை காக்கின்றவர். எங்களுடைய எல்லா கஷ்டங்கள் மற்றும் கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அமைதியாக இருக்க உம்மீது நம்பிக்கை வைக்க எங்களுக்கு கற்றுத்தாரும். ஆமேன்.
Sol. Neelam Sharma ,AOJ

