தானீயேல் – II 02-02-2022

லூக் 19:9 இல் பரிசேயன் மற்றும் ஆயக்காரனை பற்றி இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது. பரிசேயன் சுய நீதிக்காரன் மேலும் அவன் ஆயக்காரனை துச்சமாக எண்ணுகிறான். ஆனால் ஆயக்காரனோ தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து கர்த்தருடைய கிருபைக்காக மனறாடுகிறான், அதனால் அவன் உயர்த்தவும் படுகிறான்.

கர்த்தருடைய வார்த்தை இருபக்கமும் கருக்குள்ள பட்டயம். சுய நீதி மற்றும் பெருமை அல்ல மாறாக கர்த்தர் தாழ்ச்சியையே விரும்புகிறார். விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய கிருபையை இழக்காதபடிக்கு மற்றவரை இகழ்ந்து பேசக்கூடாது. ரோம 12:3 – “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” – கர்த்தரைப் பற்றிய பெரும்பாலான மனிதர்களின் புரிதல் உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. வேதம் இதற்கு நிறைய உதாரணங்களை தருகிறது. அவைகளில் சிலவற்றை நாம் தியானிக்கலாம்.

ஆதி 29 – யாக்கோபு எவ்வாறு ராகேலுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்றும் தன்னுடைய அன்புக்கு அவளை பாத்திரமாக கருதினான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 31 வது வசனம் சொல்லுகிறது, “லேயால் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்பதை கர்த்தர் கண்டார்.” லேயால் தன் கணவன் மீதான அன்பிலும், கர்த்தர் மீதான விசுவாசத்திலும் உறுதியாக இருந்தாள். அதனால் கர்த்தர் லேயாளுக்கு 6 பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார் மேலும் ராகேலையோ நீண்ட காலமாக மலடியாக வைத்திருந்தார். லேயால் தன் கணவனால் அற்பமாக எண்ணப்பட்டால் ஆனால் கர்த்தருடைய கண்களில் அவளுக்கு கிருபை கிடைத்தது.

1சாமுவேல் 16:11 எவ்வாறு தாவீது, ஈசாயின் மறக்கப்பட்ட ஒரு மகனாக இருந்தான்.  இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் பண்ணும்போது சாமுவேல் ஈசாயை கேட்கிறார், “உன் பிள்ளைகள் இவ்வளவுதானா?..இன்னும்  எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றான்.” கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதை சாமுவேல் அபிஷேகம் செய்கிறார்.

நியாயாதிபதிகள் 6:15 – கிதியோன் தன்னுடைய தகப்பன் வீட்டில் “நான் எல்லாரிலும் சிறியவன் “ என்று கருதினான் ஆனால் கர்த்தரோ அவனை பராக்கிரமசாலியாக கருதுகிறார். நியா 6:12.

யோவான் 4 –சமாரியப் பெண் யூதர்களாலும், கிராமத்தில் இருக்கும் மற்றவர்களாலும் துச்சமாக எண்ணப்பட்டாள் அதனால் தான் யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க யாரும் வராத நேரத்தில் வந்தாள். அவள் இயேசுவை சந்தித்த பின் நற்செய்தியை அறிவிப்பவளாக மாற்றப்படுகிறாள், அதுமட்டுமல்ல அவள் அநேகரை கர்த்தரிடத்தில் கொண்டுவருகிறாள்.

ஒரு முறை நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  அந்த நாட்களி என்னிடம்  Ph.D பட்டமோ தேவையான அனுபவமோ இல்லை. நேர்காணலுக்கு வந்திருந்த மற்றவர்களுடைய அதிகமான படிப்பையும் அனுபவத்தையும் பார்த்தபோது எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாமல் போனது. ஆனால் நான் ஜெபித்தேன், கர்த்தரை சார்ந்திருந்தேன். இன்றும் கூட என்னால் சாட்சியாக சொல்ல முடியும், தகுதியின் அடிப்படையில் கர்த்தரே என்னை தேர்ந்தெடுத்தார்.

ஒருவர் தன்னை எப்படி பார்த்தாலும், அவருடைய குடும்பத்தினரோ அல்லது சமுதாயமோ எப்படி பார்த்தாலும், கர்த்தர் நம்மை எவ்வாறு பார்கிறார் என்பதை பைபிள் நமக்கு கற்பிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மற்றவர்களை கர்த்தர் பார்கிறபடி பார்க்க அவருடைய கிருபையை நாட வேண்டும். அதே சமயம் நாம் இகழ்ந்து அற்பமாக நடத்தப்படும்போது மனிதனுடையதை விட சிறந்த தயவை கர்த்தரிடமிருந்து பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்க முடியும். வாழ்வில் நம்முடைய எதிர்பார்புகளுக்கு மேலாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்த சூழ்நிலைகளை நாம் சந்தித்திருக்கலாம். அவருடைய கிருபை என்றும் உள்ளது, அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

அன்பு தேவனே,

நாங்கள் வெறுக்கப்படும்போது உம்மைச் சார்ந்திருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களை இகழ்வோருக்கு முன்பாக எங்களை உயர்த்த உமது கண்கள் எங்கள் மீது இருக்கிறது என்று நம்புவதற்கு எங்களுக்கு உதவும். மற்றவர்களில் சிறந்ததையே காணவும், உம்முடைய சிருஷ்டியில் ஒருவரை கூட இகழாமல் இருக்கவும் எங்களுக்கு கிருபைதாரும். ஆமேன்.

Sol G.S. Angelin AOJ Trichy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *