தானியேல் – II
27-02-2022 – தேவ செய்தி

அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்

(லூக் 19:4).

இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு சகேயு மிகவும் ஆசைப்பட்டான். “தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” என்று இயேசு சொன்னார். ஆவலுடன், ஏக்கத்துடன், மன்றாடுதல், விசுவாசம், மரக்கிளையிலிருந்து கீழே இயேசு கிறிஸ்துவின் பார்வையை சந்தித்தல் போன்வற்றை நாம் காட்சிப்படுத்தி பார்க்கலாம்.

இயேசு கிறிஸ்து தாமாகவே சகேயுவின் வீட்டிற்கு செல்கிறார் அங்கு அவனுடைய இதயத்தை திறந்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான். கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு எவனுக்கு சித்தம் இருக்கிறதோ, அவன் கிறிஸ்துவை அறிவான்.
யாரை இயேசு அழைக்கிறாரோ அவர்கள் தங்களை தாழ்த்தி அவரிடம் வர வேண்டும். சகேயு எல்லாருக்கும் முன்பாக தன்னை தாழ்த்தி காட்டினார். உண்மையில் அவர் மனம் மாறினார் மேலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். ஒரு பரிசேயனாக தன்னுடைய வேலையின் நிமித்தம் நீதிமானாக்கப்படுவோம் என்று அவன் எதிர்பார்க்க வில்லை. ஆனால் வேலையும் நம்பிக்கையுமே அவனை நீதிமானாக்கியது. இது உண்மையான விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் காட்டுகிறது. இப்பொழுது அவன் சந்தோஷமாக இருக்கிறான் மேலும் பாவத்தை விட்டு விலகி கர்த்தர் பக்கம் திரும்பினான். இரட்சிப்போடு கிறிஸ்து அவனுடைய வீட்டிற்குச் சென்றார், நாம் இயேசுவை அனுபவிக்க உண்மையான முழுமையான முயற்சி எடுக்கும்போது அதற்கு தக்க பரிசு அவர் கொடுக்கிறார் என்பதை சகேயுவின் இந்த கதைமூலம் அறிகிறோம். சுவிசேஷமான நற்செய்திக்காக சகேயு ஆர்வமாக இருந்ததால் அவனுடைய வாழ்வில் இந்த மாற்றம் ஏற்ப்பட்டது. தன்னுடைய மனந்திரும்புதலின் மூலம் அவன் ஒரு புதியா வாழ்விற்கு தயாராகி இருந்தான். நம்முடைய வாழ்வின் அநேக காரியங்கள் நம்மை பின்னோக்கி இழுக்கின்றன உதாரணமாக நம்முடைய அணுகுமுறை, பெருமை, கோபம், மனச்சோர்வு, பொறாமை, கவலைகள் மற்றும் பல. இவைகள் நாம் கர்த்தரிடம் செல்வதை தடை செய்கிறது. ஆனால் லூக் 19:4 சொல்லுகிறது, அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, இயேசுவை பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

நாம் குறையற்றவர்கள் அல்ல என்பது நமக்குத்தெரியும். ஆனால்,

நாம் இயேசுவிடம் நெருங்கி வரும்போது அவரும் நமக்கு நெருக்கமாக வருகிறார்.


சகேயுவின் வாழ்வைப்போலவே என்னுடைய வாழ்வும் உலகபிரகாரமான காரியங்களில் சிக்கி தவித்தது. சிறையிருப்பிலிருந்தும், பிணைப்புகளின் சங்கிலிகலிருந்தும் என்னால் விடுபடமுடியவில்லை. ஆனால் இயேசுவின் பிரசன்னத்தால் தொடபட்டதுமுதல் எவையெல்லாம் நான் அவரிடம் செல்வதை தடுத்ததோ அவை அனைத்தையும் உதறிபோட்டேன். அவருடைய பிரசன்னம் என்னுடைய பாவங்களை அறிக்கையிடச் செய்தது, நான் விடுதலை அடைந்தேன்.
நம்மை வெறுத்து கர்த்தருக்கு கீழ்படிய நாம் முயற்சி செய்ய வேண்டும். யாத் 19:20 – மக்கள் விரைவாக தங்களை பரிசுத்தப்படுத்தினார்கள் மேலும் கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினார் தன்னுடைய மக்களை சந்திப்பதர்காக. இயேசுவை நான் சந்தித்தபின் என்னுடைய வாழ்வு முற்றிலுமாக மாறிவிட்டது.


பிதாவே, என்னுடைய பாவத்தை சிலுவையில் சுமப்பதற்கு உம்முடைய குமாரனை அனுப்பியதற்காக நான் நன்றி கூறுகிறேன். இது என்னைப்போல பாவிகளின் இரட்சிப்புக்கு வழி திறந்துள்ளது. ஏனென்றால் ஒரு காலத்தில் நான் தொலைந்து போனேன் ஆனால் இப்போது என்னால் பார்க்க முடிகிறது. எவ்வாறு இயேசுவை தன் வீட்டில் வரவேற்றதர்காக சகேயுவின் வாழ்க்கை மாறியது மேலும் இரட்சிப்புப் அவன் வீட்டில் வந்ததோ அதேபோல ஒவ்வொரு மனிதனும் இயேசுவை தங்களுடைய இருதயங்களில் வரவேற்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

ஆமேன்.

SOL.CLARA BENEDICT AOJ

தானியேல் – II 26.02.2022– தேவ செய்தி

ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.
உபா 7:9,10

கர்த்தருடைய இரண்டு குணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்த்தரில் அன்புகூர்ந்து அவரது கற்பனைகளை கைகொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் தயவையும் உடன்படிக்கையையும் காக்கிற உண்மையுள்ள தேவன் அவர்.
அவரை பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.


பத்தாவது வசனத்தில் யகோவா தேவனின் இரண்டாவது குணம் மூன்றுமுறை சொல்லப்பட்டிருக்கிறது.


ஒருவர் ஏன் யகோவா தேவனை வெறுக்க வேண்டும்?

எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய தாயையும் தகப்பனையும் அன்பு செய்யும். தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு செய்யும் எல்லா காரியங்களாகிய– உணவளிப்பது, உடை அணிவிப்பது, குளிக்க வைப்பது, அன்பு செய்வது, கைபிடித்து நடத்திச் செல்வது, கூட விளையாடுவது, குழந்தை நன்கு வளரவேண்டும், மேலும் எப்பொழுதும் குழந்தையின் நலன் கருதுவது, போன்ற எல்லாவற்றையும் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக மாறியபின் தன்னுடைய பெற்றோர்களில் பெரிய குறை கண்டுபிடி அவர்களைக்கும்வரை தனது தந்தை அல்லது தாயை வெறுக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு மனிதனும் கர்த்தரிடமிருந்துதான் ஜீவனை பெறுகிறான். வாழ்வை கொடுப்பதற்கும் அதை எடுப்பதற்கும் யகோவா தேவனுக்குத்தான் வல்லமை உண்டு. இந்த அதிகாரத்தை அவர் இயேசு கிறிஸ்துவிடமும் கொடுத்திருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

(யோவா 10:18).


ஜீவன் கொடுப்பவரை எப்படி மனிதனால் வெறுக்க முடியும்? நிச்சயமாக அவனால் முடியாது. வஞ்சகத்தால் அவனால் அப்படி செய்ய முடியும், அவனால் தன்னுடைய உண்மையான தகப்பனை காணமுடியாது. அவனுடைய இதயமும் மனமும் குருடாக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தை தனது தந்தை அல்லது தாயை அடையாளம் காண முடியாததுபோல, இந்த உலகில் பிறக்கும் எந்த குழந்தையும் கடத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

2கொரி 4:4 – தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
மனிதனுடைய குருடாக்கப்பட்ட கண்களால் சிருஷ்டி கர்த்தாவை பார்க்க, மீண்டும் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டும். கர்த்தருடைய வேதத்தை அறிவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையை அறிந்துகொள்ள முடியும். கர்த்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் மீது இரக்கம் காட்டுவார்.

  1. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.

பிரட்தியட்சமாய் அவர்களுக்கு பதிலளிப்பார்.
பூமியிலும், மனித குலத்திலும் நாம் காணும் அனைத்து அழிவுகளும் இந்தக் காரணத்தால் கண்டறியப்படலாம்.
யகோவா தேவனை வெறுப்பது;
கர்த்தரை எப்படி ஒருவரால் வெறுக்க முடியும் அல்லது தங்களது வெறுப்பை யகோவா தேவனை நோக்கி வெளிப்படுத்தமுடியும்?
இயேசுவில் நம்பிக்கை வைக்காததன் மூலம்.
பிதாவானவர் குமாரனில் (இயேசு) அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் (இயேசு) விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்;

குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.

யோவா 3:35,36

இயேசுவில் நம்பிக்கை வைக்காதது யகோவா தேவனை வெறுப்பதாகும்.
இயேசுவில் நம்பிக்கை வைக்காதவர்கள் மீது கர்த்தருடைய கோபம் வெளிப்படும். இன்றைய வசனம் சொல்லுகிறது. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.
உலகபிரகாரமான மனிதனுக்கு உயிரை கொல்லுவது, உயிரை எடுப்பது இதுதான் மிகப்பெரிய அழிவாக கருதப்படும், ஆனால் வேதம் இன்னும் அதிகமாக சொல்லுகிறது. அப்படிப்பட்டவர்கள் இரண்டாவது மரணத்திற்கு ஆளாவார்கள்.


பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8


இரண்டாவது மரணம் என்பது ஒரு மனிதன் மரித்தப்பின் அக்கினி கடலில் அனாதி காலத்திற்கு போடப்படுவது.
நரகம் என்பது அக்கினியும் கந்தகமுமான நிறைந்த கடல் என்று இயேசு சொல்லுகிறார். (வெளி 20:10,15). அங்கு நெருப்பினால் மக்கள் வாதிக்கப்படுவார்கள். வெளி 14:10-11 – நித்திய நெருப்பு, அந்தகாரம், புழுக்கள், அழுமை மற்றும் பற்கடிப்பு.
மத் 8:12, 22:12, 25:30, லூக் 13:28, மத் 9:44,46,48, எசா 33:14

லூக் 12:5 – நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்..
இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒருவித பயம் என்னை சூழ்ந்தது. நம்முடைய தொகுதியில் இயேசுவை அறியாமல் நித்திய அழிவிற்கு போகும் மக்கள் எத்தனை பேர் என்று கணக்கிட்டு பார்ப்போமா? அவர்களுக்கு பரலோகத்தை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

Sol. Ann Rose AOJ

தானியேல் – II
25-02-2022 – தேவ செய்தி

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

(எரே 33:6).

08-12-2019 அன்று இந்திய சபையில் மேற்கண்ட வசனத்தை பேசினார்.


இந்திய சபை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை பரவியுள்ளது. கர்த்தருடைய கிருபை மற்றும் நன்மைக்காக நன்றி. கடந்த 25 ஆண்டுகளாக கர்த்தர் பல்வேறு பாஸ்டர்களையும், நற்செய்தி அறிவிப்பாளர்களையும் எழுப்பி இருக்கிறார். அவர்கள் கடினமாக உழைத்தார்கள்,, தலையிலிருந்து கால்வரை, தெற்கிலிருந்து வடக்கு வரை கிழக்கிலிருந்து மேற்குவரை இந்தியா முழுவதும் சபைகள் நிறுவப்பட்டிருக்கிறது.
இப்பொழுது இருக்கும் இந்திய சபையின் நிலையை இரண்டு உதாரணங்கள் மூலம் காட்டப்பட்டது.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

ஏசா 1:6


இந்திய சபை மனித உடலோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் உடல் ஆனால் காயமும் வீக்கமும் நிறைந்துள்ளது. கர்த்தர் அதை ஆராய்ந்து பார்த்தார், அதை குணமாக்கினார்.


இந்திய சபை ஒரு கட்டிடத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.கி.மு. 0 வில் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் அஸ்த்திவாரத்தின் மீது கட்ட ஆரம்பித்தார். கடந்த 2019 ஆண்டுகளாக அப்போஸ்தலர்களும், பவுலும் மற்றவர்களும் அதை கட்டினார்கள். எண்ணமுடியாத மக்கள் இதற்காக வேலை செய்திருக்கிறார்கள். இந்த காலத்தில் இதற்காக நாம் பணிஅமர்த்தப்பட்டிருக்கிறோம்.
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்..

1கொரி 3:10


ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும் (1கொரி 3:12,13).


இந்திய திருச்சபைக்கு 2014 முதல் “அக்கினி பரிட்சையின் நாட்கள்”. ஒவ்வொருவரும் கட்டிய பொருள் அக்கினி பரிட்சைக்கு ஆளகிறது. பயனற்ற பொருட்களால் கட்டப்பட்ட அந்த பகுதிகளை இடித்து கட்டிடத்திலிருந்து அகற்ற வேண்டும். காய்ந்தபுல் மற்றும் வைக்கோல் கொண்டு கட்டப்பட்ட அந்த பகுதிகள் அக்கினியால் எரிக்கப்படும். செல்வ செழிப்புக்கான நற்செய்தி மற்றும் மேலோட்டமான படிப்பினைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட சபைகள் சோதிக்கப்படும், பயனற்றவை என்று கண்டறியப்பட்டால் அகற்றப்படும்.


ஒரு போதகர் தன்னுடைய அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்.
நான் கடந்த 23 ஆண்டுகளாக சபையை நடத்திக்கொண்டு வருகிறேன். என்னுடைய விசுவாசியினுடைய மகள் ஒரு இந்து பையனோடு ஓடிவிட்டாள். இந்த சபையின் முதல் விசுவாசி அவர்தான் மேலும் 23 ஆண்டுகளாக அவர் எங்களோடு இந்த சபையில் இருக்கிறார்.

நான் அந்த குடும்பத்தினரை சமாதானப்படுத்தவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் சென்றிருந்த போது, தன் மகள் செய்தது நியாயம்தான் என்று அவர்கள் சொல்வதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.


நான் எப்படிப்பட்ட ஊழியம் செய்கிறேன் என்று ஆராய்ந்துபார்க்க வேண்டும். நம்மை தாழ்த்தி இந்திய சபைக்காக ஜெபிப்போம்.


அனைத்து காயங்களுடன் சபையை நாம் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புகொடுப்போம்.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. ஏசா 1:5.
கர்த்தர் இரண்டு காரியங்களை சபைக்கு வாக்களிக்கிறார்.
சுகமாக்குதல்
எல்லா நோய்களிலிருந்தும் சபை சுகமாக்கப்படும்.
ஆரோக்கியம்
சபைக்கு போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருக்கும்படியாக கர்த்தரே பார்த்துக்கொள்வார்.


ஜெபம்


அப்பா பிதாவே முழு சபையும் அதில் இருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் நீர் வாக்களிக்கும் அமைதி மற்றும் உண்மையை மகிழ்வுடன் அனுபவிப்பார்களாக. ஆமேன்.

Sr. Angelica AOJ

தானியேல் – II
24-02-2022 – தேவ செய்தி

அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

லூக் 19:14.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்பவர் 58 வயதான ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரி ஆவார்..இவர் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தியில் தன்னலமற்ற பணியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்து வந்தார். ஜனவரி 22 ஆம் தேதி இரவு கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் – 10 வயது பிலிப் மேலும் 7 வயது திமோதியுடன் – அவர் பணியாற்றிய மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
அவரை வெறுத்தனர்: அவருடைய ஏழ்மையான பிறப்பிற்காகவும், சிலுவையில் அறையப்பட்டதற்காகவும், அவருடைய கற்பனைகளுக்காகவும், பரிசுத்ததிற்காகவும் அவரை இகழ்ந்தனர்.

அவருக்கு ஒரு செய்தியை அனுப்பினர்:
அதிருப்தியடைந்த குடிமக்கள்அவருடைய ஆட்சி என்னவாக இருக்குமோ என்று பயந்து, அவர் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதை எதிர்த்து அவருக்கு எதிராக ஒரு ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.


மத் 2:22ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,


இந்த உண்மை யூதர்களின் நினைவில் “புதியதாக” இருந்ததால், இந்த உவமையை நம்மை மிகவும் வியக்க வைக்கிறது.

யோவா 1:11 - 
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள், அவருடைய ஆட்யின் கீழ் இருக்க மனத்தில்லாமல் இருந்தனர், சற்று நேரத்திற்குப் பின் ஒரு கொலையாளியை ஏற்றுக்கொள்ளவும் தயாரானார்கள். மகிமையின் தேவனை கொன்றவர்கள், தங்கள் ஆத்துமாவை மீட்பவரை விட தங்கள் கோபத்தில் ஒரு கொலைகாரனை விரும்புவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

பிரபுவாக இருந்த ஒருவன் இயேசுவின் பிரதிநிதி மற்றும் இறுதி தீர்ப்பு மரணத்தைவிட மிக மோசமானது – இது நரகத்திற்கும், நெருப்பு ஏரிக்குமான நித்திய தீர்ப்பாகும். இயேசுவை நிராகரிப்பதால் இயேசு யார் என்றும் அவர் என்ன என்பதிலும் எந்த மாற்றமும் வரபோவதில்லை. அவரை நிராகரிப்பவர்களுக்கு நித்திய நரக தண்டனை உண்டு.

கிருபை இழந்தவர்களுக்கு கிறிஸ்துவின் நுகம் தாங்கமுடியாதது ஆனால் இரட்சிக்கப்பட்ட பாவிக்கு அது எளிதானது மற்றும் இலகுவானது. நம்மையே நாம் நியாயம் தீர்ப்போம்….. இந்த சுமையை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோமா அல்லது இதை எடுத்துப்போட நினைக்கிறோமா?
ஜெபம்: அன்பு தகப்பனே உம்மிடம் எங்களை ஒப்படைக்கின்றோம். நான் தீர்ப்பளிக்காமல் உமது னபின் ஆழத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.

ஆமேன்.

Sol. Pratibha AOJ

தானியேல் – II
23-02-2022 – தேவ செய்தி

அதைக் கண்ட யாவரும் இவர் பாவியான மனுஷன் இடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்

லுக்கா 19:7

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தது பாவிகளை இரட்சிக்கவே என வேத வசனம் கூறுகிறது.


1Timothy 1:15

யூதர்களைப் பொறுத்தவரை அவர்களை பார்க்கப்போகும் மேசியா வானவர் ராஜாவாக தன்னை ரோமர்கள் இருந்து பிடியிலிருந்து மீட்பார் எனவும் மாம்ச பிரகாரமாக நம்பினர்.


இன்னும் சொல்லப்போனால் யோவான் ஸ்நானகன் கூட இயேசுவை அவ்வாறாகவே கருதினார்.
Mat 11:3

தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனின் திட்டத்தை புரிந்துகொள்ள முடியும் என வசனம் கூறுகிறது.


Rome 8:5

இன்று தேவனுடைய பிள்ளைகள் திட்டத்தையும் அவருடைய எண்ணத்தையும் அறிந்து கொள்ளாமல் செயல்படுகிறது.


தேவனுடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம் இருப்பதனாலேயே இன்னும் தேவனுடைய வார்த்தை அனேக இடங்களில் பிரஸ்தாபிக்க படவில்லை.
நான் இயேசுவின் படையணி மூலமாக தேவன் வெளிப்படுத்தின் பிரகாரமாய்
குடி போதை மறுவாழ்வு மையத்தில் (Redemption Recovery Care) ல் ஒரு பயிற்சியை தொடங்க வேண்டும் என வெளிப்படுத்தினார்.


அநேகர் இதை எதிர்த்தனர் ஏனெனில் வேதத்தின் அத்தியாயங்கள் அவரால் புரிந்துகொள்ள முடியாது ,அனேக படிப்பறிவில்லாதவர்கள் , அவர்களின் மன நிலைமை தொடர்ந்து வகுப்புகளை கேட்பதற்கும் வேதத்தின் ஆழமான சத்தியங்களை அறிந்து கொள்வதற்கும் ஏற்றதாகவே இராது என கூறி அப்பயிற்சி நடத்துவதில் பயனில்லை எனக் கூறி.

இருப்பினும் தேவனுடைய திட்டத்தின் பிரகாரமாய் நான் அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
தேவன் அற்புதமாக அதில் செயல்பட்டார் அனேகர் மனம் திரும்பினர் இந்த வகுப்புகள் காலை ஐந்தரை மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும்.


ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ள எல்லா காரியங்களும் அதில் கற்றுக் கொடுக்கப்படும் தேவனை அறியாத அனேகர் அப்பாவ பழக்கத்திலிருந்து வெளிவந்தன. மேலும் அநேக மற்றவர்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களாக மாறினர்.

John 4:1-14 வசனத்தில் நாம் வாசித்த பிரகாசமாய் இயேசு கிறிஸ்து பாரம்பரிய ஒரு கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் அவர் திட்டத்தின் பிரகாரம் அவர் சந்தித்த அந்த சமாரியா ஸ்திரீ அனேகன் ஒதுக்கி வைக்கப்பட்டு தள்ளப்பட்ட நிலைமையில் இருந்தவள் மூலமாக கிராமம் ரசிக்கப்பட்டது. தேவன் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மனித மூளைக்கு எட்டாத அவர்கள். தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்ள முடியும்.


இக் கடைசி காலத்தில் அநேகர் ஒதுக்கப்பட்டு தள்ளப்பட்டவர்கள் மூலமாகவே
தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்
.

Sol. Paul Vasanthan AOJ

தானியேல் – II 22-02-2022 – தேவ செய்தி

“முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய  கர்த்தரைநியாயமானபடியே தேடாதே போனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்..

1 நாள் 15:13

தேவன் இங்கு தனது பிள்ளைகள் மீது 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

  1. உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் சுமக்கவில்லை (1 நாளா 15:12)
  2. அவர்கள் கர்த்தரைத் தேடவில்லை
  3. அவர்கள் நியாயமான படி தேடவில்லை.

வேதத்தின் இன்னொறு பதிப்பு இவ்வாறு சொல்லுகிறது “அவர் நம்மை தாக்கினார் “
அன்பான நமது பரலோகத் தகப்பன் நம்மை தாக்குவாரா?


நாம் கடமை தவறும்போது “ஆம்’ என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. மனிதர்களின் 3 கடமைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்து நம்மில் வாழ்கிறார், நாம் இயேசுவை தாங்கிச்செல்பவர்கள்.
இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, ​​ஒரு கழுதை அவரைச் சுமந்து சென்றதுபோல, நாம் செல்லும் இடமெல்லாம் இயேசுவை சுமந்து செல்கிறோம்.
பின்வரும் வார்த்தைகளில் சமாரியன் பெண்ணிடம் இயேசு இவ்வாறு கூறினார்
. “அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது……… தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்”. யோவான் 4:21,24
இது தான் “அந்த காலம்” இதை அறியாமல், நான் அவரை சிலைகள், புனித ஸ்தலங்கள், புனித பொருட்கள், புனித மனிதர்கள், புனித நதி, புனித யாத்திரை, புனித பூமி போன்றவற்றில் நம்பி வழிபட்டுக் கொண்டிருந்தேன்.
‘புனிதம்’ அல்லது “பரிசுத்தம்” என்ற வார்த்தை இயேசுசுகிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வரை பரலோகத்துடனும் சர்வவல்லமையுள்ள தேவனுடனும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது.
வெளிப்படுத்தல் 5:10 முதல், “பரிசுத்தம்” என்ற வார்த்தை, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் தொடர்புடையதாக மாறிவிட்டது.
இவ்வுலகில் வேறு எஙகும் “பரிசுத்தம்” இல்லை. மனிதர்களில் யாரும் பரிசுத்தவான்கள் இல்லை.
நாம் எங்கு சென்றாலும் இந்தப் பரிசுத்த தேவனையும், குமாரனையும் நமக்குள் சுமந்து செல்கிறோம் (யோவான் 14:23). உங்கள் தொகுதிகளுக்குச் செல்லுங்கள், நீங்கள் இயேசுவையும் பிதாவையும் சுமந்து செல்லும்போது, ​​அவர்களின் சிந்தனை, நுண்ணறிவு, கண்ணோட்டம், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், விருப்பு வெறுப்புகள் உங்கள் மூலம் வெளிப்படும். அவர்கள் உங்கள் கண்களைப் பார்க்கவும், உங்கள் காதுகளைக் கேட்கவும், உங்கள் மனதையும் இதயத்தையும் உணரவும் பயன்படுத்துவார்கள். உங்கள் தொகுதி பற்றிய உண்மைகள் மற்றும் உண்மைகள் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

தேவனை தேடாததற்கு தண்டனை உண்டா? ஆம். ஏனெனில் தனது சிருஷ்டிகர்த்தராகிய அவரைத் தேடுவது தான் மனிதர்களின் முதன்மையான கடமை. எல்லாவற்றிலும், ஒவ்வொரு நிமிடமும் அவரைத் தேடுவது, அவருடைய கருத்து, விருப்பங்கள், முடிவுகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள், வழிகள், கட்டளைகள், லட்சியங்கள் போன்றவற்றைத் தேடுவது, நமது முதல் கடமை.
பலருக்கு இயேசு மருந்தாக இருக்கிறார். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அல்லது ஆபத்தை சந்திக்கும் போது, ​​அவர்கள் அவரைத் தேடுகிறார்கள். 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வகுப்பில் என்னிடம் கேட்டான், “நான் ஏன் இயேசுவை மட்டும் ஆராதிக்கவேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்? இக்கேள்விக்கு திருப்திகரமாக பதில் கொடுக்க என்னால் முடியவில்லை. ஆனால் அன்று இரவு இயேசு அவனிடம் பேசினார். அதை ஒரு உதாரணம் மூலம் அவனுக்கு விளக்கினார். கிச்சனில் நாம் பயன்படுத்தும் Mixy, கருவி சரியாக வேலை செய்யவில்லை என்றால் நாம் அதை கொடுத்துவிட்டு புதியதைப் வாங்கிக்கொள்கிறோம். ஒரு மிக்சி அரைக்க பயன்படுவது போல, மனிதர்கள் தேவனை ஆராதிப்பதற்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், சிருஷ்டிகர்த்தராகிய அவருக்கு அவர்களால் எந்தப் பயனும் இல்லை. அவர்களை தூக்கி எறிய முழு உரிமையும் உண்டு.

நமது ஆலயங்களில் அல்லது ஜெப அறைகளில் செய்யப்படும் பல ஜெபங்களுக்கு பதில் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், விசுவாசிகள் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்கு பதில் கிடைக்கிறதோ, இல்லையோ, அவர்கள் தொடர்ந்து ஜெபித்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு குழந்தை தனது தந்தையுடன் பேசுவதைப் போல, தந்தை

நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஒவ்வொன்றுக்கும் பதிலளிப்பதுபோல், நமது பரலோகபிதாவும் ஒவ்வொரு ஜெபத்துக்கும் பதிலளிப்பார்.

ஆனால், நம்முடைய சில ஜெபங்கள் பதிலைக்கொண்டு வருவதில்லை.

ஏனெனில் அவை தேவனுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

இதைக்குறித்து, மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும்,……..

நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்.” மாற்கு 7:7,8


அப்பா. இந்த 3 விஷயங்களை எங்களுக்குக் கற்றுக் கொடும். இயேசுவை இந்தியா முழுவதும், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும். அவரைத் தேடி, அவர் விரும்பும் வழியில் நாங்கள் நடக்கவேண்டும்.

Sol. Teena AOJ

தானியேல் – II
21-02-2022 – தேவ செய்தி

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

லூக் 19:9

சகேயு இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தான் மேலும் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தினான். ஏழைகளுக்கு தன்னுடைய உடமையில் பாதியை கொடுப்பேன் என்றும் யாரையாவது ஏமாற்றி இருந்தால் நான்கு மடங்கு அவர்களிடம் திருப்பி கொடுப்பேன் என்றும் தன்னுடைய மனந்திரும்புதலுக்கான காரியங்களை அவன் வெளிப்படுத்தினான்.

இயேசு சகேயுவிடம் சொன்னார் இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது?

கர்த்தராகிய இயேசுவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.

அப்போ 16:31

எபே 2:8 – கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

பிலி 2:12 – அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
நாம் இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் இருப்பினும் அந்த இரட்சிப்பைத் தொடர நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும்.


யாக் 2:26 – கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

விசுவாசம் = இயேசுவில் நம்பிக்கை +வேலை


யாக் 2:19 – தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.


பிசாசின் நம்பிக்கை மற்றும் கர்த்தருடைய பிள்ளையின் நம்பிக்கை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?


பிசாசு இயேசுதான் ஆண்டவர் என்று நம்புகின்றன ஆனால் விசுவாசத்திற்கு ஏற்ற எந்த கிரியையும் நம்மால் காண முடியாது.
ஆனால் கர்த்தருடைய குழந்தை அவருடைய/அவளுடைய நம்பிக்கையுடன் கூடிய செயல்களை வெளிப்படுத்துகிறது.


நாம் என்ன வேலைகளை செய்ய வேண்டும்?

  1. இயேசுவின் பாதத்தில் அமர்வது மேலும் அவரிடம் கற்பது
  2. பெரிய கட்டளை – நற்செய்தியை அறிவிப்பது- அணிசபையை பெருக்குவது – மக்களை பரிசுத்த ஆவியின் வரங்களில் பயிற்சி அளிப்பது.
  3. ஒருவர் மற்றவரை அன்பு செய்வது
  4. ஏழைகளுக்கு உதவுவது

ழைகளிடம் தாராளமாக உதவிசெய்தல், பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் உறுதியான முடிவு எடுத்து தனது இரட்சிப்பின் செயல்களை சகேயு வெளிப்படுத்தினார். அதனால்தான் அவனுக்கு இரட்சிப்பு கிடைத்தது என்றும் அவன் அபிரகாமின் மகன் என்றும் இயேசு சொன்னார். ஆபிரகாமும் கர்த்தருக்கு கீழ்படிந்து அவர் சொன்ன அனைத்தையும் பின்பற்றினார், அதனால்தான் அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன் நாங்கள் பாரம்பரிய சபைகளில் இருந்தோம், இயேசு கிறிஸ்துவை விசுவசித்தோம் ஆனால் அவருடைய ராஜ்யத்திற்காக எந்த வேலையையும் செய்தது இல்லை. ஞாயிற்று கிழமைகளில் ஒரு மணி நேரம் சபைக்குச் செல்லுவோம் மற்ற நேரங்களில் உலக பிரகாரமாக வாழ்ந்து வந்தோம்.


2016 ஆம் ஆண்டு இயேசுவின் படை அணி (AOJ) இணைந்தோம். அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளிகள் போன்றவைகளின் மூலமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்தோம். இப்பொழுது உண்மையான இரட்சிப்பை எங்கள் வாழ்வில் காணமுடிகிறது.

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்மில் விசுவாசம் வைக்கமட்டும் அல்ல மேலும் இரட்சிப்பின் காரியத்தில் ஈடுபடவும் எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.


Sol. Theodore AOJ

தானியேல் – II
20-02-2022 – தேவ செய்தி

அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.

(லூக் 19:15)


இங்கு சொல்லப்பட்டிருக்கும் ஊழியகாரர்கள் சீடர்களை குறிக்கிறது அவர்கள் கர்த்தருடைய நியாயசனத்திற்கு முன்பாக தோன்றி தங்களைப் பற்றிய கணக்கை கொடுக்க வேண்டும்.
திரவியம் என்பது கர்த்தரால் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் திறமை அல்லது பரிசு ஆகும். நாம்

1கொரி 12:8-11, கலா 5:22-23

ஐ நாம் வாசிக்கும்போது அவர் விருப்பம்போல நம் அனைவருக்கும் பரிசு/திறமையை கொடுக்கிறார். எல்லா மக்களையும் அவரிடம் ஒன்று சேர்பதற்கு தேவதூதர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழியகாரர்களாகிய நம்முடைய வேலையோ நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதகும்.

மத் 28:19

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ,…..


மத் 28:20

அவர் சொன்னது போல அவர் நமக்கு இந்த வேலையில் உதவி செய்வார்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்

நான் முழுவது இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவித்து விட்டேன் என்று பவுல் அப்போஸ்தலர் சாட்சி சொல்கிறார். அவர்காலத்தில் இப்பொழுது இருப்பது போல வாகனங்கள் இல்லை. நம்மைப் பற்றி நினைப்போம். நாமோ உலகத்தின் கடைசி நாட்களில் நின்று கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். ஊழியகாரர்களை எஜமானன் ஏன் அழைத்தார்? அவர்கள் எவ்வளவு சம்பாத்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தானே.


லூக் 19:15

இல் தன்னுடைய பணத்தை வைத்து வியாபாரம் செய்ய மூன்று ஊழிய காரர்களை அவன் நியமித்தான். 19:13 சொல்லுகிறது அதில் இரண்டு ஊழியக்காரர்கள் எஜமானனின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்கள் இருவரும் கனிசமான பணத்தை சம்பாதித்தார்கள். இவர்கள் இருவருக்கும் எஜமானன் பரிசளித்தான். அவர்களுடைய பதவியை உயர்த்தினான்.

அதே போல நம்முடைய தேவனும் உண்மையுள்ள சீடர்களுக்கு பரலோகத்தில் பரிசளிப்பார். மூன்றாவது சேவகன் பயத்தினால் எந்த ரிஸ்க்கும் எடுக்க வில்லை. எனவே பணத்தை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்தான். பணத்தை பத்திரமாக ஆனால் பயனில்லாமல் வைத்திருந்த சேவகனை எஜமானன் தண்டித்தார். அதேபோல பொய்யான சீடர்களையும், பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபடாதவர்களையும் கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார். பரலோக ராஜ்யத்தைப் பற்றி கவலைப்படாத சீடர்கள்தான் இவர்கள். இவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள திறமை மற்றும் பரிசுகள் இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு உண்மையான சீடர்களுக்கு கொடுக்கப்படும்.

லூக் 19:24.
நாம் ஒரு மரத்தை நட்டால் தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் அப்போதுதான் அது கனிகளை கொடுக்கும். அதே போல நீங்களும் இயேசுவுக்காகவும் அவருடைய நற்செய்திக்காகவும் வாழ்ந்தால் நீங்கள் சென்ற பிறகும் உங்கள் குடும்பமும் சமுதாயமும் வளரும். இயேசுவோடு வாழ்வதற்கு நம்முடைய மனம் நல்ல சிந்தனைகளால் நிறைந்திருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளால் நிறைந்திருக்க வேண்டும். ஜெப ஆவியால் நிறைந்திருக்க வேண்டும்,, எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்திருக்க வேண்டும்.


ஜெபம்


அப்பா பிதாவே எங்களை உம்முடைய நல்ல சேவகர்களாக மாற்றும். உலகபிரகாரமான பொருட்களுக்கு பின்னால் நாங்கள் ஓடக்கூடாது. நித்தியமான பரலோக வாழ்விற்கு பின்னால் மட்டுமே எங்களை ஓடுமாறு செய்யும். எங்களுடைய பரிசுகள்/திறமைகளுக்கான கணக்கை ஒரு நாள் நாங்கள் உமக்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்பொழுதும் எங்களுக்கு நினைவூட்டும்.


Sol. ANU (AOJ)

தானியேல் – II
19-02-2022 – தேவ செய்தி

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

லூகா 19:10


சகேயுவினுடைய வீட்டில் மேற்கண்ட வசனத்தை இயேசு பேசினார். இயேசுவை சகேயு தன்னுடைய வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தான். இயேசுவை காண்பதற்கு அவர் பேராவலுடன் இருந்தான் மேலும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
இயேசுவோடு சகேயு பேசிக்கொண்டிருக்கையில் அவனில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது, அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறான் மேலும் அவன் மற்றவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் சேர்த்த பணத்திஅ திரும்ப கொடுத்துவிட தயாராக இருக்கிறான்.


நான்கு மடங்கு நான் திருப்பி கொடுப்பேன் என்று இயேசுவுக்கு முன் அவன் வாக்குகொடுத்தான்.

தன் அவன் பாவத்திற்காக மனந்திரும்புவதும், அதற்காக பரிகாரம் செய்ய தயாராக இருப்பதும் அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகும்.

எவ்வாறு ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை முழுமையாக நம்பி தனது தந்தை மற்றும் உறவினர்களின் வீட்டை விட்டு வெளியேற தயாரானதுபோல சகேயுவும் செய்தான். கர்த்தரை நம்பி அவரை பின்பற்ற முன்வந்ததால் இயேசு அவனை அபிரகாமுன் மகன் என்று சொல்லுகிறார். இது அவனுக்கு அவனுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாகும். இயேசு இவ்வுலகிற்கு வந்த நோக்கம் இந்த மனிதனில் நிறைவேறியது. – அவர் தொலைந்தவர்களை தேடவும் அவர்களை காப்பாற்றவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார்.

அதுதான் அவருடைய ஊழியமும் கூட.
99 ஆடுகள உடன் மேய்ப்பவரிகளிடம் விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை எப்படித் தேடிச் செல்கிறார் என்பதையும் காணாமற்போன ஆட்டைக் கண்டு சந்தோஷப்படுவதைப்பற்றியும் இயேசு சொல்லுகிறார்.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக் 15:7


காணாமல் போன நாணயத்தைத் தேடும் பெண் அதைத் தேடி கண்டுபிடித்தாள். அதைக் கண்டு தன் தோழிகளுடன் மகிழ்ச்சி அடைகிறாள். காணமற்போன தன்னுடைய மகனை திரும்ப கண்டு ஒரு பெரிய விருந்தோடு அவன் வருகையை கொண்டாடுகிறார். இந்த எல்லா உவமைகளும் இயேசு இந்த உலகிற்கு வந்ததின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

(யோவா 3:17).


அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். (மத் 20:28). நம்முடைய இரட்சகர் எவ்வளவு மேன்மையானவெ. அவருடைய நாமம் மகிமைப்படுவதாக.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (லூக் 5:32).
பவுல் அப்போஸ்தலர் சொல்லுகிறார்
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1திமோ 1:15 இயேசு தன்னுடைய மகிமையான பரலோகத்தை விட்டுவிட்டு நம்முடைய இரட்சிப்புக்காக இவ்வுலகிற்கு வந்தார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். தேவன் அவரை மூன்றாம் நாள் எல்லாரும் காணும்படி உயிர்பித்தார். நமக்காக, அவருடைய சபைக்காக, மற்றும் அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்காகவும் அவர் மீண்டும் வருவார். நாம் கிருபையின் யுகத்தில் இருக்கிறோம். நாம் அவரிடம் வருவோம், அவருடைய குடும்பத்தின் அங்கதினர் ஆவோம்.
ஒரு மனிதன் கர்த்தருடைய வார்த்தையாலும் பரிசுத்த ஆவியாலும் மீண்டும் பிறக்கும்போது அவனுக்குள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவனுடைய வாழ்க்கை கண்ணோட்டம் மாறுபடுவதோடு அது அவனுடைய நடத்தையிலும் தெரிகிறது. பழைய வாழ்வில் எதையெல்லாம் மதிப்புமிக்கதாக கருதப்பட்ட அனைத்து விஷயங்களும் புதியவாழ்வில் விரும்பப்பட வில்லை. நம்மை காப்பாற்றும் இயேசு கிறிஸ்துவின் கிருபையை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருடைய சாட்சியும் இதுதான். என்னோடும் இப்படித்தான் நடந்தது. கர்த்தருடைய வார்த்தையை அதிகமான உற்சாகம் மற்றும் அன்புடன் தியானிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என்னைப்பயன்படுத்தி அநேகருக்கு தம்முடைய வார்த்தையை கொடுக்கிறார். நான் இதற்காக கர்த்தருக்கு நன்றிசொல்கிறேன். அவருடைய நாமம் உயர்த்தப்படுவதாக.

அப்போ 10:36,38,40


அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

அப்போ 10:42-43


எப்பொழுது வேண்டுமானாலும் நடக்க விருக்கும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்ப்டுவதற்கு நாம் தயாராவோம்.

Sol. Salomi Kurian

தானியேல் – II
18-02-2022 – தேவ செய்தி

அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்,

( லூக் 19:7).

லூக் 19:7 – சகேயுவினுடைய வீட்டில் அவனுடைய உபசரிப்பை இயேசு ஏற்றுக்கொண்டபோது நடந்ததாகும். அவன் ஒரு வரிவசூலிப்பவன் எனவே அனைவரும் அவனை வெறுத்தனர். இவர்களால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே ஏன் இயேசு வரிவசூலிப்பவன் வீட்டிற்கு சென்றார் என்று கேட்டார்கள். மத்தேயு என்ற இன்னொறு வரிவசூலிப்பவனை இயேசு அழைத்தார்.

லூக் 5:27-32 இந்த நிகழ்வு வர்ணிக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
இயேசு பாவிகளுக்காகவே வந்தார் என்பதை இந்த வேத பகுதி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

மத் 9:11. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

லூக் 15:2. பரிசேயர்களும் சதுசேயர்களும் அக்காலத்தின் மத தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேதத்தை சமுதாயத்தில் போதித்தார்கள் மேலும் மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கு மரியாதை இருந்தது. அவர்கள் வேதத்தில் தங்களுடைய சொந்த விளக்கங்களை சேர்த்தனர் மேலும் யூத சமுதாயத்தை தங்கள் கீழ் வைத்திருப்பதற்காக மத சடங்குகளை அமைத்தனர். யூதர்கள் தங்களுடைய இரட்சகரும் ராஜாவுமாகிய மேசியாவிற்காக காத்திருந்தனர். ஒரு ஊழியகார தலைவரை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. இயேசு தேவாலயத்தில் எழுந்து நின்று புத்தகத்தை பிரித்து படித்தார்; கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்.  

லூக் 4:18 இயேசு கிறிஸ்துவின் இந்த கொள்கைகளை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு இயேசுவினுடைய ஊழியத்தால் பயனடைந்தார்கள். ஆனால் ஓய்வு நாளில் இயேசு தம்முடைய பல அற்புதங்களை செய்து ஓய்வுநாளை தீட்டுபத்தியதால் மதத் தலைவர்கள் இந்த பணியை வெறுத்தார்கள். இயேசுவின் இந்த அடாவடித்தனத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. வரிவசூலிப்பவர்கள் மற்றும் பாவிகளுடன் இயேசு அமர்ந்தது அவர்களுடைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

அதுமட்டும் அல்ல, இயேசு எப்பொழுதும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களோடு இருந்தார். அநேக மக்கள் இயேசுவினுடைய கிருபை நிறைந்த வார்த்தைகளை கேட்டு வியாதி மற்றும் சாத்தானுடைய பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காக வந்தனர். யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் சுகமானார்கள், இயேசு பிரபலமானதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயேசு அவர்களிடம் கேட்டார் அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

லூகா 6:9-11 இதுவே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. பாவிகளையும் வரிவசூலிப்பவர்களையும் யூத சமூகத்தின் சமூக விரோதிகளாக கருத வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ரோமர்கள் அவர்களை ஆட்சி செய்ததால் மக்கள் மீது தங்களுடைய அதிகாரத்தை செலுத்தமுடியாமல் விரக்தியடைந்தனர். ஆனால் பாவிகளுக்கும் வரி வசூலிப்பவர்களுக்கும் நண்பராக இருப்பவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய சட்டத்திற்கு எதிராக சென்றதால் இயேசு அவர்களின் தலைவர்கள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க அடிககடி முயற்சி செய்தார்கள்.

இயேசு இந்த பூமியில் வந்து பாவிகள் மீது தன்னுடைய இரக்கத்தையும் தயவையும் காட்டாவிட்டால் நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது.

நம்முடைய தேவன் எவ்வளவு கிருபை நிறைந்தவர், எனக்காக தன்னையே கொடுத்தார் மேலும் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவதற்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

லூக் 16:8

Sol. Antony Kurian AOJ

,