தானியல் II- 03-01-2022 தேவ செய்தி

தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்

லூக் 14:11.

இதுதான் வேதத்தின் அடிப்படை சத்தியம். இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது நமக்கு கற்பித்த மற்றும் நமக்கு முன்மாதிரியாக இருந்த அனைத்தையும் இந்த வசனம் உள்ளடக்கியுள்ளது. கர்த்தருக்கு முன்பாக நாம் ஒன்றும் இல்லை என்பதை இது காட்டுகிறது.

லூக்கா 18:14 இல் ஆயக்காரன் தன்னை கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினான் மேலும் நான் பாவி, தேவனே என்மேல் கிருபையாயிரும் என்று கேட்டதனால் இவன் நீதிமானக்கப்பட்டு வீடு திரும்பினான். ஆனால்  இதற்கு எதிரக பரிசேயன் கர்த்தருக்கு முன்பாக தான் நீதிமான் என்று பிரகடனம் செய்தான்.

தானியல் 4:1,2 அதன் பிறகு வரும் வசனங்களும் என்னை வெகுவாக கவர்ந்தது. 34 ஆம் வசனத்தில் அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த கூடிய பரலோகத்தின் ராஜாவை,  நெபுகாத்நேச்சார், புகழ்ந்து, உயர்த்தி மகிமைப் படுத்தினான்.

எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை சொப்பனத்தின் மூலமாக ராஜாவுக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார். அந்த சொப்பனத்தை வியாக்கியானம் பண்ணகூடிய கிருபை தானியலுக்கு  கொடுக்கப்பட்டது. ராஜாவை நோக்கி தானியேல் தெளிவாகச் சொன்னான், “மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லை மேந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். ..உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்து போக வேண்டும். தானி 4:22-25).

ராஜா இதையெல்லாம் மறந்துவிட்டான். பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு சொன்னான், “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துகென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.” இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி ராஜாவாகிய நேப்புகாத் நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று…..

அவனுக்குச் சொன்னபடியே அனைத்தும் நடந்தது, அவன் காட்டு விலங்குகளோடே சஞ்சரித்தான் , மாடுகளைப்போல புல்லை மேய்ந்தான்; அவனுடைய  சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய புத்தி தெளிந்தது. தன்னுடைய கண்களை உயர்த்தி பரத்தை பார்த்தான்.உன்னதமானவரை ஸ்தோத்தரித்து என்றென்றும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைபடுத்தி அவன் சொன்னான், “அவருடைய கையை தடுத்து, அவரை நோக்கி என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றான். அகந்தையாய் நடக்கிறவர்களைத் கர்த்தர்  தாழ்த்துகிறார் என்று அவன் புரிந்து கொண்டான்.

லூசிபர் கூட தன்னை உயர்த்தினான், பரலோகத்திலிருந்து அவன் கீழே தள்ளப்பட்டான். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தம்மை வெறுமையாக்கினார், பரத்திலிருந்து பூமிக்கு வந்தார். தன்னுடைய தாழ்ச்சியின் மூலம் அகந்த்தையாய் நடக்கிறவர்கள் அதைவிட்டு வெளிவர செய்தார். அடிமையின் ரூபமெடுத்து கடைசிவரை பிதாவுக்கு கீழ்படிந்திருந்தார். பிதா அவரை உயர்த்தினார் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவருக்கு கொடுத்தார்..

நம்முடைய சொல், செயல் மற்றும் எண்ணங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம். எல்லா புகழும் கர்த்தர் ஒருவருக்கே உரியது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? மற்றவர்கள் நம்மை புகழும்போது, இது கர்த்தருடைய கிருபையால்தான் நடந்தது என்று கர்த்தருக்கு மகிமையை கொடுக்கிறோமா? மக்கள் நம்மை புகழ்ந்து பேசவில்லை என்று கவலைப் படுகிறோமா? மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கிறோமா? நம்மை தாழ்த்தி கர்த்தரை எப்போதும் மகிமைப் படுத்துவோம்.

Sr. Anitta AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *