நீ அழைக்கப்பட்டிருக்கும் போது போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு;
லூக் 14:10
தாழ்ந்த இடத்தில் உட்கார முடிவு செய்வது இருதயத்தின் தாழ்ச்சியை காட்டுகிறது.
பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பழக்கவழக்கங்களைப் பற்றி இயேசு இங்கு பேசுவதாக தோன்றினாலும், அது ஆழமான உண்மைகளைச் சுட்டிகாட்டுகிறது. இந்த உண்மையை உறுதிபடுத்தும் விவிலிய பகுதிகளை காண்போம்.
1பேதுரு 5:6 – ஆகையால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்..
லூக் 18:14 – …தன்னை உயத்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
உயர்த்தப்படுவது இந்த வாழ்வில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் ஆனால் நிச்சயமாக நியாயத்தீர்ப்பில் நடக்கும். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்னும் சகோதரர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். இவரை எனக்கு நன்றாக தெரியும். கர்த்தருக்கு சேவை செய்ய நினைத்தபோது, தாழ்ந்த சமூகத்திற்கு செல்ல அவர் கர்த்தரால் தூண்டப்பட்டட அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார். நக்ஸ்லைட்டுகள் இருக்கும் இடத்தை அவர் தேர்வு செய்தார். அவர் மூலமாக அநேக நக்ஸலைட்டுகள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள், கர்த்தர் அவரை உயர்த்தினார். அரசு அதிகாரிகளுக்கும் அங்குள்ள நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர்பாளராகவும் அவர் பணியாற்றினார்.
இன்னும் ஒரு சகோதரர், இந்தியாவில் இருக்கும் ஒரு சபையின் தலைவராக தற்போது இருக்கிறார். அவர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“ஜெபத்தில் கர்த்தர் என்னோடு பேசினார். துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லுமாறு கர்த்தர் என்னிடம் சொன்னார். அவர்களுடைய கால்களை கழுவவும் மேலும் கால்களை முத்தமிடும்படியும் சொன்னார். நான் அவ்வாறே செய்தேன். நீங்கள் மனிதகுலதிற்கு செய்யும் மாபெரும் பணிக்காக நன்றி கூறினேன். அதன் பிறகு அநேக முறை அங்கு சென்றிருக்கிறேன், அவர்களுடைய உபசரிப்பை ஏற்றுக்கொண்டேன். இயேசுவின் அன்பை பற்றி அவர்களோடு பகிரும்போது நாங்கள் நண்பர்களானோம். இயேசுவின் அன்பைப் பற்றி கேட்ட அவர்கள் கண்ணீர் விட்டனர். அநத சமூகத்தினர் அனைவருமே இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். “
கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துவதன் விளைவுகளைப் பற்றி வேதம் சில உதாரணங்களைத் தருகிறது.
- தேவனால் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டார் மேலும் எல்லா நமத்திற்கும் மேலான நாமம் அவருக்கு கொடுக்கப்பட்டது. பிலிப் 2:8-9
- தீமையிலிருந்து பாதுகாக்கப்பட்டார் 1இராஜா 21:29
- தீமையை காணாது அமைதியுடன் கல்லறைக்குக் கூட்டிசேர்கப்பட்டார் 2இராஜா 22:19
- கிருபை கிடைக்கும் யாக்கோபு 4:6
- கர்த்தரால் மேலே எடுத்துக்கொள்ளப்படுவது, யாக்கோபு 4:10
ஜெபம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மை கல்வாரி சிலுவைக்கு அழைத்துச் சென்ற பணிவு மற்றும் மனத்தாழ்சியை எனக்கு தாரும். ஆமேன்.
சகோ. ஆஞ்சலிகா AOJ
