தானியேல் – II 31-01-2022

உன்சகோதரனாகியஇவனோமரித்தான், திரும்பவும்உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும்காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம்சந்தோஷப்பட்டுமகிழ்ச்சியாயிருக்கவேண்டுமேஎன்றுசொன்னான்என்றார்.

(லூக் 15:32)

இந்த வசனம் என்னுடைய கடந்த வாழ்வில் உண்மையானது. இந்த வசனத்தை நான் படித்த நேரத்தில் என் கடந்த கால வாழ்க்கை நினைவுக்கு வந்தது. 

என் வாழ்க்கையின் கடந்த 2 வருடங்கள் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நான் பாரமான இருதயத்துடன் எழுந்தேன். கடைசியாக நான் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது என்று கூட எனக்கு நினைவு இல்லை. மனதளவில் நான் மிகவும் சோர்ந்துபோனேன். என்னை அன்புசெய்த அனைவரிடமும் என்னை விலக்கி கொண்டேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன் மற்றும் உள்ளுக்குள் உடைந்துபோனேன். என்னை அன்பு செய்தவர்கள் முன்பு நான் மகிழ்ச்சியாய் இருப்பதாக நடித்த பல நாட்களும் உண்டு. என்னுடைய துக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  நான் ஆதரவற்றும், பலனற்றும் தரையில் விழுந்து அழுது புலம்பினேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல. வேதம் சொல்லுவது போல நான் மரித்துப்போய் இருந்தேன், ஆம் உள்ளுக்குள் நான் மரித்துப்போய் இருந்தேன்.

ஆனாலும் 99 ஆடுகளை விட்டு காணாமல் போன  ஒரு ஆட்டை தேடிப்போன அவருடை அன்பு என்னை மிகவும் ஈர்த்தது. (மத் 18:12). ஒரு மேய்ப்பன் ஒரு காணாமற்போன ஆட்டைக் குறித்து மலைகளில் தேடிச் செல்லும் அளவுக்கு அக்கறை காட்டுவது போல கர்த்தர் தான் படைத்த ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் அக்கறைகொள்கிறார்.

நான் திரும்பி பிதாவிடம் செல்ல அவருடைய கரங்கள் விரிந்து இருக்கின்றன. (லூக் 15:20). இந்த உவமையில் தகப்பன் தன்னுடைய மகன் மனம் வருந்தி அவரிடம் திரும்பி வரும்போது அவர் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அதே போல நாமும் நம்முடைய பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு அவரிடம் திரும்பி வரும்போது அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

ஊதாரிமகன் உவமையின் முக்கிய செய்தி என்ன வென்றால் நம்முடைய பரலோகத் தகப்பனிடமிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் அல்லது அவர் நமக்கு வழங்கிய திறமைகளை  நாம் எவ்வளவுதான் வீணடித்தோம் என்பது முக்கியமல்ல நாம் அவரிடம் திரும்பும்போது அவர் எப்போதும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறார். அவரது நிபந்தனையற்ற அன்பு நாம் வீடுதிரும்புவதற்காக காத்திருக்கிறது, மேலும் அவருடைய கரங்கள் நம்மை அரவணைக்க திறந்திருக்கிறது. நாம் மனிதர்களிடம் பாவங்களை அறிக்கையிடுவதைவிட கர்த்தரிடம் அறிக்கையிடுவது மிகவும் சுலபம். கர்த்தர் இரக்கமும், பொறுமையும், தயவும் உடையவர். அங்கி  மரியாதைக்கும், மோதிரம் அதிகாரத்தையும், காலணிகள் விடுதலையையும், ஊதாரி மைந்தனுக்காக வைக்கப்பட்டிருந்த விருந்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

துன்பத்திற்குள் என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்று கர்த்தர் எனக்கு பதில் தந்தார். “மக்களுடைய காயங்களில் எண்ணெய் மற்றும் திராட்சை ரசத்தை ஊற்றவும், நொருங்குண்ட இதயங்களை கட்டவும் அவர் என்னை அழைத்தார். (லூக் 10:34, சங் 147:3) எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றி நல்ல சமாரியன் செய்ததைப் போல காயப்பட்டவர்களை இயேசு தனது, இரத்ததாலும், காயங்களாலும் குணப்படுத்துகிறார். இயேசு உடைந்த இருதயங்களை கட்டுகிறார், காயமடைந்தவர்களை குணமாக்குகிறார், துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்; இது எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றுவதன் மூலம் செய்யப்படுகிறது.

எண்ணெய் கர்த்தரின் ஆவியின் கிருபையைக் குறிக்கிறது, எண்ணெயின் நல்ல மணம், அதன் உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியூட்டுஃப்ம் குணங்கள், அதன் செயல் திறன் மற்றும் குளிர்ச்சி மேலும் குணப்படுத்தும் தன்மை ஆகியவற்றிற்காக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. திராட்சரசம் நற்செய்தியின் கொள்கைகளாகிய – கிறிஸ்துவினுடைய நீதியால் நமக்கு கிடைக்கும் இலவச நீதி, அவருடைய இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பு போன்றவைகளை குறிக்கிறது.

கர்த்தர் என்னை அதிகமான வலியின் வழியே என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்றால், இருதயம் நொருங்குண்டவர்களோடு பழகவும் அவர்களை புர்ந்துகொள்ளவும்தான்.

என்னை கர்த்தர் அக்னியிலிருந்து எவ்வாறு காப்பாற்றினார் என்பதை சாட்சியாக சொல்லுவேன்.

நம்பிக்கையோடு நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை காப்பாற்றிய தேவன் உங்களையும் காப்பார்.

கர்த்தர் என்னோடு பேசியதை நினைத்து நான் அளவில்லா சந்தோஷமடைகிறேன்.

“இப்பொழுது நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய நேரம்.” ஏனென்றால் என்னுடைய அழுகையை சிரிப்பாக மாற்றியிருக்கிறார். என்னுடைய துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது ஏனென்றால் நான் கண்டுபிடிக்கப்பட்டேன்.

2022 இல் அடி எடுத்து வைப்பதற்கு முன்  கர்த்தர் நிறைவேற்றிய இந்த வாக்குறுதிகளைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

Sol. Alicia Mathew

தானியேல் – II 30-01-2022

கிறிஸ்துவின் சிந்தை

எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

(லூக் 18:32)

மேற்கண்ட வசனத்தை தியானிக்கும் போது இந்தியாவின் ஒரிசாவில் தொழு நோயாளிகள் மத்தியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகளும் அவரால் சேவை செய்யப்பட்டவர்கள் மூலம் வேனில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட ஒரு காட்சி என் நினைவுக்கு வந்தது. அவரது மனைவி கிளாடிஸ் மிகுந்த வேதனையில் இருந்தாலும் கொலையாளிகளை மன்னித்து அவர்கள் மத்தியில் எந்த புகாரும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பவுல் பிலிப்பியர் 3:7 இல் சொன்னது போல, “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.”

இதுதான் கிறிஸ்துவின் சிந்தை.

லூக் 18:32 இல் இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி சொன்னது இங்கு நிறைவேறி இருக்கிறது. இது மத் 20:18-19 ல் உள்ளது, அவர் ஏற்கனவே சீடர்களுக்கு அவர் அனுபவிக்கப்போகும் துன்பங்களிப்பற்றி சொல்லியிருந்தார். ஆனால் இந்த வசனத்தில் உள்ளதைப்போல ஒருபோதும் தெளிவாக  சொல்லவில்லை. அவர் தான் எப்படி மரிக்கபோகிறோம் என்பதைப் பற்றிகூட சொல்லியிருந்தார். எவ்வாறு அவருடைய மக்களே அவரை புறஜாதியினரிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவர்கள் அவரை கொல்ல எல்லா தீய வழிகளையும் செய்வார்கள் என்றும் ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார், எதிரியை தோர்க்கடிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசு நம்முடன் இருந்தால் நாம் எந்த துன்பங்களை அனுபவித்தாலும் இறுதி வெற்றி நமக்கே என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. அவர் நமக்காக பலியானது போல நாமும் உயிருள்ள ஜீவபலியாக கிறிஸ்துவுக்காக மாற வேண்டும். (ரோம 12:1).  மத் 20:22 இல் அவர் சொன்னது போல, நம்முடைய அர்பணிப்பு, ஒப்புகொடுத்தல் மற்றும் பக்தி முழுமையானதாக இருக்க வேண்டும்,   அவருக்காக துன்பகலத்தை நாமாக முன்வந்து குடிக்க தயாராக இருக்க வேண்டும்.  அவருக்காக துன்பப்படுவதற்கு நமக்கு கர்த்தருடைய சிந்தை இருக்க வேண்டும், பிலி 2:5.

என் கணவரின் இதயக் கோளாறுகளாலும் பக்கவாதத்தாலும் இருபது வருடங்கள்    நான் துன்பத்தை சந்தித்தேன். ஆனால் எபே 3:16 வசனத்தால் நான் பலப்படுத்தப்பட்டதால் நான் சோர்வடையவும் இல்லை, குறை கூறவும் இல்லை. கீழ்காணும் பல்வேறு வசனங்களால் நான் என்னை திடப்படுத்திக்கொண்டேன். 

எபி 13:5 –  நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை

ஏசா41:10 – நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;

ஏசா 43:2 – நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்….

இப்பொழுதும் இது எனக்கு ஒரு மிகப் பெரிய சாட்சி. சங் 119:71 – நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

ரோமி 5:3-4 பிரச்சனைகள் மற்றும் சோதனைகளை சந்திக்கும் போது நாம் மகிழ்ச்சியடையலாம் ஏனென்றால் அவை நமக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறது, பொருமை நல்ல குணத்தையும், நல்ல குணம் இரட்சிப்பின் நம்பிக்கையும் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றாது.

ஜெபம்: உம்முடைய மகிமைக்காக துன்பத்தை தாங்கும் வரத்தை எங்களுக்கு தாரும் பிதாவே. ஆமேன்.,

Sol Gigi Jacob

தானியேல் – II 29-01-2022 – தேவ செய்தி

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். –

லூக் 14:33

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்ஞானம் பெறும்வரை எருசலேமை வீட்டு போகவேண்டாம் என்று தன்னுடைய சீடர்களுக்கு இயேசு கட்டளை கொடுத்தார். (அப்போ 1:4,5).

நாம் உலகபிரகாரமாக வாழாமல் ஆவியின் வழிநடத்துதலால் வாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். (2கொரி 10:3,4, ரோம 8).

பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுதல் என்றால் என்ன?

இயற்கைக்கும், எல்லா விதிகளுக்கும், அதிகாரத்திற்கும்   அப்பாற்பட்டு,  சுகமாதல், அமைதி, விடுதலை, அற்புதங்கள், முற்றிலும் புதிய வாழ்க்கையை பெறுதல் மேலும் நாம் அதற்கு என்ன தலைப்பு கொடுத்தாலும் அதற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்கையை வாழ்வது.

இது அற்புதங்களின் வாழ்க்கை – நாள்தோறும் நடைமுறையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மூட்டுவலி, ஆஸ்துமா, ஒவ்வாமை, காய்ச்சல், வலிப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து மக்களை குணமாக்குவது, பலரை உலக சிக்கலில் இருந்து அவர் நாமத்தால் விடுவிக்கப்பது.

வேலைதளத்தில் நான் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டேன் என்பதற்கான ஒரு உதாரணத்தை உங்களுக்கு முன் வைக்கிறேன். ஒரு முறை  என்னை பிரசவத்திற்காக அழைத்தார்கள்.  நான் அன்று ஒபிடி யில் இருந்தேன் மேலும் எனக்கு அழைப்புவிடுத்த மருத்துவமனை 3 கிமீ தூரத்திலிருந்தது. நான் அவசர அவசரமாக எனது மருத்துவமனையிலிருந்து கிளம்பிகொண்டிருக்கையில் என்னை முன்பு அழைத்த அதே மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. குழந்தை பிறந்துவிட்டதாகவும், பிறந்தவுடன் குழந்தை அழவில்லை என்றும் சொல்லினர். பத்து நிமிடத்தில் நான் குழந்தை இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தையின்  மூச்சு விடவில்லை மேலும் உடல்  இரத்தம் இன்றி வெள்ளையாமாறியிருந்தது. ஒரு மருத்துவராக நான் அந்த இடத்தில்  Resuscitation அதாவது குழந்தையை உயிர்பிக்க முதலுதவியை தர வேண்டும். இதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் பை மற்றும் வெண்டிலேட்டர் மூலம் அதன் நிலை மேம்பட்டது ஆனாலும் குழந்தை தன்னிச்சையாக சுவாசிக்கவில்லை. ஒரு மணிநேரபோரட்டத்திற்கு பின்னும் குழந்தை குணமடையவில்லை மேலும் இதய துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. குழந்தையின் கண்களில் எந்த அசைவும் இல்லை. குழந்தையின் தந்தையை அழைத்து குழந்தை மூச்சு இழுப்பதற்கு வெண்டிலேட்டரை சார்ந்திருக்கிறது என்றும் அதன் மூளை எவ்வாறு இறந்துவிட்டது என்பதையும் கூறினேன். தந்தை நிலைகுலைந்து போனார். எல்லா உதவியாளர்களையும் நான் வெளியே அனுப்பினேன். திடீரென்று ஒரு சிசிடிவி கேமராவின் பார்வையில் அறையைப் பார்த்தேன். கர்த்தர் எதையோ செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். உடனே நான் தேவனிடம், “ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டேன்.

உடனடியாக வேதத்தின் இரண்டு நிகழ்வுகள் என் ஞாபகத்திற்கு வந்தது. முதலாவது நிகழ்வில், இயேசு மரித்துபோன பெண் அருகே இருந்த அனைவரையும் வெளியே அனுப்புகிறார் மேலும் அந்த பெண்ணுக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார் என்றும், இரண்டாவது நிகழ்வில் எலியா தீர்க்கதரிசி குழந்தையை மேல் அறைக்கு கொண்டுச் சென்று ஜெபித்து அதை உயிர்பித்தது. நான் தேவனைப் பார்த்து, “கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்?” என்றேன்.

“உயிர்பெற வேண்டி குழந்தை மீது தீர்க்கதரிசனம் உரை!” என்றார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உயிர் பெற நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்.  உடனடியாக குழந்தை தன்னுடைய முதல் மூச்சை இழுத்தது, மேலும் அழ ஆரம்பித்தது.   “அசைந்திடு” என்று நான் மீண்டும் தீர்க்கதரிசனம் உரைத்தேன். உடனடியாக குழந்தை அசைந்தது, காலை உதைத்தது. குழந்தை இப்போது தானாக சுவாசித்தது. நான் resuscitate செய்வதை தொடர்ந்தேன்.

இதை குழந்தையின் தகப்பனுக்கு எடுத்துச் சொன்னேன், அவரோ மிகவும் கோபப்பட்டார், “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்னுடைய குழந்தை மறித்துபோனது என்றீர்கள் இப்போதோ உயிருடன் இருக்கிறது என்கிறீர்கள். என்ன இது, நீங்கள் எங்களோடு விளையாடுகிறீர்களா? என்று கோபமாக கேட்டார்.

நான் அவரிடம் சொன்னேன், என்னுடைய எந்த செயலாலும் அல்ல மாறாக உயிருள்ள ஒரே தேவனாகிய இயேசு கிறிஸ்து வின் வல்லமை தான்  மரித்துபோன இந்த குழந்தைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது. குழந்தையை மேல் நிலை பராமரிப்புக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து போகும்படி சொன்னேன், அப்படியே அந்த குழந்தை உயிருடன் உயர் மையத்திற்கு மாற்றப்பட்டது.

பெயரளவில்  (உலகபிறகாரமாக) வாழும் கிறிஸ்தவ வாழ்வை விட்டு விட்டு, நமக்காக தேவன் நியமித்திருக்கிற திட்டத்தின்படி (பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுதல்) வாழும்போதுதான் இது நடக்கும். உலக வாழ்க்கை என்பது அசுத்த ஆவியின் ஆட்சி, அதிகாரம், மற்றும் ஆதிக்கத்திற்கு அடிமையாக இருப்பது. இவைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் அற்புதங்களை காண விடுவதில்லை.

ஆனால் நாம் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும்போது (பிலேமோன் 1:6) கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கர்த்தருடைய வார்த்தை நம்மை ஆட்கொள்ளகூடிய ஒரு நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.

அவருடைய வெற்றியிலிருந்தும், அவருடைய ஒப்பற்ற வல்லமையின் மகா மேன்மையான மகத்துவத்திலிருந்தும் விசுவசிக்கிறவர்களாகிய நாம் வேலை செய்ய துவங்குவோம்.

உலகம் நமக்கு கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு, அவர் நமக்கு சொல்லி கொடுப்பதை பிடித்துக்கொள்வோம். நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். (லூக் 8:31)

Dr. Albert Jones AOJ

தானியேல் – II 28.01.2022 தேவ செய்தி

……. அவர்உங்களுக்குமுன்னேகலிலேயாவுக்குப்போகிறார்; அங்கேஅவரைக்காண்பீர்கள்;

மத் 28:7

இந்த செய்தியை விண்ணிலிருந்து வந்த கர்த்தரின் தூதன், மகதலேனா மரியாளுக்கும், மற்றொரு மரியாளுக்கும் இயேசு வைக்கப்பட்ட கல்லறையைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு தெரிவித்தான். இயேசு கலிலேயாவுக்கு போவார் அங்கே தன்னுடைய சீடர்களை அவர் சந்திப்பார் என்று. மரணத்திற்கு பிறகு உயிர்ப்பு உள்ளது என்பதை இயேசு தன் உயிர்ப்பின் மூலம்  நம் எல்லோருக்கு முன்பாக நிரூபித்துள்ளார். மரணத்திற்குப் பின் சரீரத்தின் உயிர்த்தெழுதலைத் தவிர நாம் இந்த பூமியில் இருக்கும் போது நம் ஆவியும் உயிர்த்தெழுதலை பெற முடியும்.

சவுல் – அப்போ 9:3-20 : இயேசுவை சந்தித்த பிறகு ஆன்மீக மரணத்திலிருந்து (பாவம், வெறுப்பு மற்றும் கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துவது)  உயிர்பிக்கப் பட்டான் மேலும் அதன் பின் அவன் தமிஷ்க்கு சென்றான். அங்கு அவனுக்கு பார்வை திரும்ப கிடைத்தது, அவன் ஞானஸ்ஞானம் பெற்றான் அதற்குபின் “கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று தேவாலயங்களில் பிரசங்கித்தான். அநேக நிரூபங்களை அவர் புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.

சகேயு – லூக் 19:2-10 – காட்டத்தி மரத்தில் சகேயுவை கண்டு இயேசு அவனோடு பேசினார். அதன்பின்னர் அவனும் மரணத்திலிருந்து (பாவம், மக்களை ஏமாற்றி வரி வசூலிப்பது, செல்வத்தை சேர்த்துவைப்பது) உயிர்பிக்கப்பட்டான், இரட்சிக்கப்பட்டான், மேலும் தன்னுடைய செல்வத்தில் ஏழைகளுக்கு உதவும் ஒரு சாதாரண வாழ்வை நடத்தினான்.

லாசர் – யோவா 11:1-45 – தன்னுடைய நண்பன் லாசர் வியாதிப்பட்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்க இயேசு பெத்தானியா சென்றார். அவர் அங்கு சென்றபின், லாசர் மரித்துவிட்டதாகவும், கல்லறையில் அவனை வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றும் அவருக்கு சொல்லப்பட்டது. இயேசு லாசரின் கல்லறைக்கு எதிரே நின்றார், கல்லை அகற்றுமாறு கூறினார், பின்னர் லாசரை வெளியே வருமாறு கட்டளையிட்டார். தன்னுடைய கால்களும் கைகளும் பிரேத சீலையால் கட்டப்பட்டவனாகவும், முகம் சீலையால் சுற்றப்பட்டவனாகவும் லாசர் வெளியே வந்தான்.

2005 ஆம் ஆண்டில்  எனது 52வது வயதில் நான் கூட ஆன்மீக மரணத்திலிருந்து உயிர்பிக்கப்பட்டேன். நான் ஒரு பாவம் நிறைந்த உலகபிரகாரமான வாழ்வை பணத்திற்கு பின்னால் ஓடி வாழ்ந்து கொண்டிருந்தேன். மனந்திரும்புவதற்கு எனக்கு கர்த்தர் கிருபைகொடுத்தார் அதன்பின் நான் ஒரு புதிய வாழ்வை துவங்கினேன். அன்று முதல் கர்த்தருடைய பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபட்டு வருகிறேன் மேலும் கர்த்தருக்காக நிற்கிறேன். இன்று முதல் என்னால் முடிந்தவற்றை அவருடைய ராஜ்யம் இந்த உலகில் வருவதற்காக நான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வாறு செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.

ஜெபம்: கர்த்தாவே பாவத்திற்கு மரிக்க எங்களுக்கு கிருபைதாரும் அதனால் எங்களுடைய அன்றாட வாழ்வில் நாங்கள் உயிர்தெழுதலை அனுபவித்து உம்முடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய எங்களை திடப்படுத்தும். ஆமேன்.

Sol. Leslie AOJ

தானியேல் –  II 27-01-2022 – தேவ செய்தி

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.

லூக்கா 17:3

நாம் திருத்தத்திற்கு விரோதமான யுகத்தில் வாழ்கிறோம். ‘முடியாது’ என்கிற நான்கெழுத்து வார்த்தை தற்கால மொழியாகிவிட்டது.  உங்கள் நம்பிக்கையின்மை கர்த்தருடைய நியாய தீர்ப்பை நிச்சயமாக கொண்டுவரும் என்று கிறிஸ்தவரல்லாத நண்பர்களுக்கு சொன்னால் அதை கேட்க அவர்கள் விரும்புவதில்லை. நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும் ‘திருத்தம்’ செய்வதை விரும்புவதில்லை. இது மிகவும் வருத்தத்தை தருகிறது ஏனென்றால் திருத்தம் ஆத்துமாவுக்கு நன்மைதரும். இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; (நீதி 10:8) என்று சாலொமோன் சொல்லுகிறான்.

நம்முடைய சகோதரர்களை நாம் எப்பொழுது திருத்தலாம்?

சகோதர சகோதரிகளுடைய இரட்ச்சிப்பு கேள்விகுறியாக இருக்கும் போது நாம் அவர்களை திருத்தலாம்.

சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபி 3:12). இந்த வசனம் சகோதரர்களுக்கு சொல்லப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைக்கும் நாம் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இது தனிப்பட்ட முறையில் மட்டும் அல்ல சபையாகவும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு சகோதரன் அல்லது சகோதரி அவிசுவாச  வாழ்க்கை வாழும்போதோ அல்லது  அவருடைய விசுவாசத்தின் உண்மைத் தன்மை கேள்விகுறியாக இருக்கும்போதோ நாம் அவரை விசாரிக்கலாம்.

அவர்களுடைய இருதயங்களை மென்மையாக்கவும், மனந்திரும்புதலுக்கு அழைத்துச் செல்லவும், கர்த்தருடைய கோபத்திலிருந்து அவர்களை காப்பாற்றவும் ஆவியானவர் பயன்படுத்துவது உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளைத்தான்.

மனந்திரும்பாத பாவத்தின் ஆபத்தை உணர்ந்த இயேசு நம் ஒருவரை ஒருவர் திருத்தச் சொல்லியிருக்கிறார். மத் 18:15-16 இல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எதிராக பாவம் செய்யும் பொழுது அவனை திருத்துவதற்கான வழிமுறைகளை இங்கு சொல்லுகிறார். பாவத்தின் இயல்பை பற்றி இயேசு இங்கு வெளிப்படுத்த வில்லை. ஆனால் பாவம் செய்தவர் அந்த பாவத்திற்காக மனந்திரும்பாவிட்டால் அந்த நபரை கிறிஸ்துவில் ஒரு சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ கருதக்கூடாது என்பதை தெளிவாக கூறுகிறார்.  பின்னர் பாவம் செய்தவர் எப்படி தன்னுடைய குற்றத்தை உணருவார்? அவனை திருத்தக்கூடிய ஒரு வார்த்தை தேவை. தனிபட்ட முறையில் அவரைடைய குற்றத்தை நாம் உணர்த்த வேண்டும். (15), கேட்காத பட்சத்தில் இரண்டொரு மனிதர்களோடு அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்தலாம். (16).

நமக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்படுகிறது. சில வேளைகளில் பதில் கிடைக்காததுதான் ஆனால் அதுதான் சிறந்தபதிலாகவும் இருக்கிறது. கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்.

மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. – நீதி 19:11

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். – நீதி 10:12

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 1பேது 4:8

ஜெபம்:

கிருபையும் மகா இரக்கமும் நிறைந்த பரலோக பிதாவே, உமக்கு எதிராக சகோதரர்கள் பாவம் செய்யும்பொழுது அவர்களை திருத்துவதற்கான இருதயத்தை எங்களுக்கு அளித்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தேவனே, எங்களுக்கு ஞானத்தை தாரும் அதனால் சோர்வடைந்த பரிசுத்தவான்களின் நம்பிக்கையைப் புதுபிக்க நாங்கள் பயன்படுத்தும் திருத்ததின் வார்த்தைகள் அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக, சில வேளைகளில் எங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு உதவி செய்யாமல், துன்பத்தை தரகூடியதாக கூட இருக்கலாம். எனவே எப்போது அவர்களை உணரவைக்க வேண்டும் எப்போது காணாமல் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ள உம்முடைய ஞானத்தை தாரும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.

Sol.Olivia Capitola J AOJ

தானியேல் – II 26-01-2022 – தேவசெய்தி

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், 

(லூக் 16:10).

மத் 25:21-25 இல் வரும் தாலந்து பற்றிய உவமை மற்றும் அதில் வரும் மூன்று சேவர்களுடைய கண்ணோட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாளி முதல் சேவனகனுக்கு ஐந்து தாலந்துகளையும், இரண்டு தாலந்துகள் இரண்டாவது சேவகனுக்கும் மற்றும் ஒரு தலந்து மூன்றாவது சேவகனுக்கும் கொடுத்தார். ஐந்து தாலந்துகள் கிடைத்த சேவகன் உடனே ஒரு தொழில் துவங்கினான் தன்னிடமிருந்த ஐந்துடன் இன்னும் ஐந்து தாலந்துகளை சேர்த்தான். இரண்டாவது சேவகனும் இரண்டை நான்காக்கினான். ஒரு தாலந்தைப் பெற்றவன் ஒன்றும் செய்ய வில்லை. தன்னுடைய நேரத்தையும் அவன் வீணடித்தான். பயணத்திலிருந்து வீடுதிரும்பிய முதலாளி தன்னுடைய சேவகர்களை அழைத்தான், தான் அவர்களிடம் கொடுத்த தாலந்துகளைப் பற்றி அவர்களிடம் கேட்டான். முதலாவது மற்றும் இரண்டாவது சேவர்களின் பதிலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் இருவரையும் பொறுப்புள்ள மேல் பதவிகளில் வைத்தான். மூன்றாவது சேவகனோ தன்னுடைய தாலந்தை ஞானமாக பயன்படுத்த வில்லை எனவே அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டான். அவன் சோம்பேரியாக இருந்ததற்காக அவனை தண்டித்தான். இந்த உவமையின்படி நேர்மையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் வாழ்வில் முன்னேறுவார்கள். நம்பகமான சேவகர்களை இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.

மத் 24:45-51 – ஒரு ஞானவானை பார்க்கிறோம், லூக் 12:42-48 நாம் ஒரு விவேகமான மற்றும் உண்மையுள்ள காரியதரிசியை பார்கிறோம்.

இந்த மூன்று உவமைகள் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றும் மேலும் இவைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்றும் பார்ப்போம். இந்த மூன்று உவமைகளும் நம் ஆண்டவரக்கிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். இவைகள் மூலம் நமது எஜமானரான இயேசு நம் நித்திய வாழ்வு, வாழ்வில் நம்பகத்தன்மை, நேர்மை, விவேகமாக வேலைசெய்தல் போன்றவைகளைப்பற்றி பேசுகிறார்.  இந்த வாழ்வில் நாம் தோற்றுப்போனால் அழுகையும் பற்கடிப்பும்தான் முடிவில் இருக்கும்.  இவ்வுலகில் நாம் சம்பாதிக்க கூடிய அல்லது வைத்திருக்கும் எல்லா செல்வத்தையும் விட நித்திய வாழ்வு மிகவும் மதிப்புமிக்கது என்பதை உண்ர்கிறேன்.

நாம் இரகசிய வருகைக்கு தயாராக இருக்கிறோமா? இல்லையென்றால் நம் வாழ்வில் தேவையான திருத்தங்களைச் செய்வோம்.

நான் ஒரு தொழில் செய்துகொண்டிருந்தேன். லாபம் ஈட்டுவதற்கு நிலையான சட்டமோ விதிமுறைகளோ கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய லாப பங்கை மிகக் குறைந்த விகிதத்தில் சேகரித்தேன். சில நேரங்களில் என்னையே நான் ஒரு பெரிய முட்டாள் என்று நினைத்துக்கொள்வேன். அதனால்தான் என் துறையில் இருந்த மற்றவரகளைப்போல என்னால் அதிக லாப்ம் எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் எடுப்பதில் நான் நேர்மையாக இருந்தேன். இப்படி கொள்கைகளை பின்பற்றி வாழ தூண்டியது எது என்று நினைத்து ஆச்சரியபடுகிறேன். நான் செய்துவரும் தொழில், 1980 இல் ஒரு இலாபகரமான தொழிலாகும். நான் அங்கீகரிக்கப்பட்ட பயண நிறுவனமான IATA ஐ நடத்திக்கொண்டிருந்தேன். சர்வதேச உரிமம் பெற்ற ஏஜென்சிகள் மட்டுமே டிக்கட்டுகளை வழங்க முடியும். அந்த நேரத்தில் உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்ளுக்கும் டிக்கெட்டுகளை வழங்க IATA நபர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டனர். என்னுடைய 65ஆவது வயதில் , 2017 இல் என்னுடைய தொழிலை  நல்ல விலைக்கு விற்றேன். இதை ஏன் என்னால் செய்ய முடிந்தது என்றால் நான் கர்த்தருடைய வேலையில் இருக்க ஆசைப்பட்டேன். 2018 மற்றும் 2019 இல் கேரளாவில் வெள்ளம் வந்தது. 2019 முடிவில் கொரோனா தொடங்கியது. இதனால் இந்தியாவிலும் உலகிலும் சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிகம் முற்றிலும் முடங்கியது. 2900 IATA ஏஜென்டுகள் இந்தியாவிலும் அதில் 275 ஏஜென்டுகள் கேரளாவில் மட்டுமே உள்ளனர். இவர்கள் எல்லாரிலும் நஷ்டம் இல்லாமல் தப்பியது நான்மட்டுமே. நான் சிறியவற்றில் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த காரணத்தால் கர்த்தர் என்னை பாதுகாத்தார். நான் ஒரே ஒரு ஊழியருடன் எனது அலுவலகத்தை கேரளத்தில் துவங்கினேன். பின்னர் வெவ்வேறு நகரங்களில் 21 ஊழியர்களுடன் மூன்று அலுவலகங்களை உருவாக்கினேன்.

2018 ஆம் ஆண்டில் வர இருந்த மோசமான நிலையை 2017 இல் என்னால் யூகிக்க முடியவில்லை.  ஆனாலும் மற்றவர்கள் துன்பப்படும் பெரிய இழப்பை நான் அனுபவிக்க முடியாதவாறு கர்த்தர் என்னைக் காப்பாற்றினார், என்று நான் இப்போது முழுமையாக ந்ம்புகிறேன். கர்த்தர் எப்படி தன் குழந்தைகளை நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை நான் கண்டு வியக்கிறேன். அல்லேலூயா! ஆமேன்!

Sol John Philip          

தானியேல் – II 25-01-2022 – தேவ செய்தி

அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்

(லூக் 17:5).

ரோம 1:17 – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் மேலும் எபி 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்றும் வாசிக்கிறோம்.  ரோம 12:3 ன் படி, அவனவனுக்கு பகிர்ந்ததளித்த விசுவாசத்தின்படி நாம் அதை பாதுகாக்கலாம், இழக்கலாம் அல்லது அதிகப்படுத்தலாம். நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்த நாம் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது.

நம் அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அற்புதங்களை பட்டியலிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக, நமது நம்பிக்கையை சோதனை செய்ய வரும் எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்பதற்கு போதுமான அவருடைய சர்வ  வல்லமையை நாம் நினைவுபடுத்திக்கொள்ள முடியும்.

நான் 1989 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, என் வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்திருந்தேன். என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல கர்த்தருடைய மனிதனுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறந்தான் தெரிந்தது என் கணவர் கர்த்தரில் நம்பிக்கையில்லாதவர் ,என்றும் கர்த்தரைப் பற்றிய காரியங்களில் எந்த ஈர்ப்பும் இல்லையென்றும் அறிந்தேன். என்னுடைய உள்ளம் உடைந்தது ஆனால் கர்த்தர் தன்னுடைய வார்த்தையினால் என்னை பெலப்படுத்தினார்,  மேலும் கைவிடாமல் விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு கூறினார்.

நான் ஒருபோதும் என்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தவில்லை, மாறாக பாசமுள்ள மற்றும் புரிந்துகொள்ளும் மனைவியாக இருக்க முயற்சித்தேன், எல்லா நேரங்களிலும் கணவருடைய இரட்சிப்புக்காக ஜெபித்து விசுவாசித்தேன். 25 ஆண்டுகளுக்கு பின் கர்த்தர் அவரை தொட்டார் மேலும் அவருடைய வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுது நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக் கர்த்தருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம். என்  விசுவாசத்தை தக்கவைத்துக்கொள்ள தேவன் எனக்கு உதவினார் மேலும் அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்தார்.

நம்முடைய சூழ்நிலையை நாம் பார்க்கும்போது நமது விசுவாசம் நம்மை தோல்வி அடையச் செய்யலாம. இயேசுவின் மீது தன்னுடைய பார்வை இருந்த வரையில் பேதுரு கடல் மீது நடந்தார். ஆனால் ஒருமுறை கடல் கொந்தளிப்பைப் பார்த்தபோது அவன் மூழ்க ஆரம்பித்தான். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நம் விசுவாசத்தை தக்க வைத்துக்கொள்ள கர்த்தர் நம்க்கு எல்லாவற்றையும் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.

கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது நிச்சயம் நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கும். கர்த்தருடைய வசனத்தை நாம் தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும் முடிந்தால் சில வசனங்களை மனப்படம் கூட செய்துவைத்துக்கொள்ளலாம். நம்முடைய விசுவாசத்தை நிறப்ப வேதம் ஒரு பெரிய ஆதாரம்.

ஆவியிலும் உண்மையிலும் கர்த்தரை துதித்து ஆராதிப்பது ஒரு உறுதியான, தடுமாறாத விசுவாசத்தை கட்ட உதவும். நாம் விசுவசிக்கும் போது கர்த்தருடைய மகிமையை காண்போம். நமது நம்பிக்கை நிச்சயமாக உலகை வெல்லும்.

ஜெபம்:  எங்களுடைய விசுவாசத்தை துவக்குபவரும், அதை முடிவுக்கு கொண்டுவருபவருமான எங்கள் அன்பின் பரலோக பிதாவே, உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்,  உம்மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உமது வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த காலத்தில்  நீர் எங்களுக்குச் செய்த மாபெரும் அறிபுதங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு நம்பிக்கையில் வலுவாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே. ஆமேன்.

Sol. Jeslyn Jeyakumar

தானியேல் – II 24-01-2022 – தேவ செய்தி

மரணத்தின் போது ஆத்துமாவை எடுத்துச்செல்ல தேவதூதர்கள் வருவார்கள்.
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்..

(லூக் 16:22).


ஆம் நாம் இறக்கும் போது தனியாக இருக்க மாட்டோம் என்று பைபிள் குறிப்பிடுகிறது. நாம் தகுதியுடையவராக இருந்தால் தேவதூதர்கள் நம்முடன் பரலோகத்திற்கு செல்லும் பயணத்தில் வருவார்கள். இந்த உவமையில் இயேசு மிகவும் துன்பப்பட்ட தரித்திரனைப் பற்றி சொல்லுகிறார். அவன் மரித்தப்பின் தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் நிறைந்த ஒரு நிலை, அங்கு அவன் தேற்றப்பட்டான்.
இதுதான் தேவதூதர்களின் சேவை, ஒரு விசுவாசி மரிக்கும் போது இவ்வாறுதான் செய்வார்கள்.
யோவான் 11:25-26 – இயேசு சொன்னார், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
அவர் நம்முடைய மரணதருவாய் வரை நம்மோடு இருக்கிறார்.


நம்முடைய பாவத்தின் காரணமாக நரகத்திற்கு செல்ல தகுதியுடையவர்கள் ஆனால் இயேசு நம்முடைய நீதிதீர்ப்பையும், நாம் அனுபவிக்க வேண்டிய நரகதண்டனையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் நமக்கு நித்திய வாழ்வை பரிசாக அளிக்கிறார, நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் அதை பெற்றுக்கொள்ள வேண்டும்.


யோவா 5:29 – அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.


லூக் 16:22 இல் இரண்டுவகையான அனுபவங்களை பார்க்கிறோம், ஒரு நேரத்தில் தரித்திரனாகிய லாசர் செல்வந்தரின் கதவுக்கு அறுகில் மயக்கம் போட்டு விழுகிறான், அடுத்த நிமிடமே தேவ தூதர்கள் அவனை ஏந்திக் கொண்டு பரலோகத்திர்கு செல்கிறார்கள். இவ்வுலக வாழ்வில் அவனுடைய புண்ணை நக்கிய நாய்கள் மட்டுமே அவனுடைய நண்பர்களாக இருந்தன, ஆனால் அவன் மரித்தவுடன் தூதர்கள் அவனை வாரி அணைத்துக்கொண்டு பரலோகத்தில் அபிரகாமினிடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்
செல்வந்தனும் மரித்தான் ஆனால் தேவ தூதர்கள் அல்ல, கெட்ட தூதர்கள் அபிரகாமின் பக்கத்தில் அல்ல மாறாக நரகத்திற்கு அவனை கொண்டு சென்றார்கள்.
தேவதூதர்கள் நமக்கு உதவி செய்ய நமக்குகொடுக்கப்பட்ட பணிவிடை ஆவிகள். சில மாதங்களுக்கு முன் மோசே எனக்கூடிய ஒரு வாலிப விசுவாசி விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் உயிர்பிழைப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்தது ஆனால் ஒரு அற்புதம் நடந்தது. இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்பின் வல்லமையை மோசேவின் மீது ஊற்றினார், 10 நாட்களுக்குள் அவனுக்கு புது வாழ்வு கிடைத்தது. இது பரத்திலிருந்து அவனுக்காக கொடுக்கப்பட்ட வார்த்தையாகும், அதே நாளில் அநேக நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். கர்த்தர்தான் மனித உருவில் தம்முடைய தூதர்களை அனுப்பி மோசேவை மருத்துவமனையில் சேர்த்தது, மருத்துவம் பார்த்தது, பணம் செலுத்தியது எல்லாம் என்று நம்புகிறேன். மோசேவோடு இருந்த இரண்டு விசுவாசிகளும் அவனை அட்மிட் செய்த மருத்துவமனையில் விடாமல் கர்த்தருடைய வார்த்தையை (வெளி 2:10) வெளியிட்டனர்.


மத் 25:46 -அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
நம்முடைய வாழ்க்கை ஒரு ரோஜக்களின் படுக்கை அல்ல, ஆனால் நமக்கு முன்னால் பரலோகம் உள்ளது, அங்கு நாம் எப்போதும் கர்த்தரின் முன்னிலையில் பாதுகாப்பாக இருப்போம் என்கிற இந்த பெரிய உண்மை நம்மை ஒவ்வொருநாளும் ஊக்கப்படுத்தி, திடப்படுத்துவதாக.


Sol. Poonam Batra, AOJ

தானியேல் – II 23-01-2022 – தேவ செய்தி

எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்எல்லாம்தகுதியாயிராது; எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்நான்ஒன்றிற்கும்அடிமைப்படமாட்டேன்

1 கொரி 6:12

சிலர் சொல்லுகின்றனர் – எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாயிராது.

எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் என்னை அடிமையாக்கும் எதையும் நான் அனுமதிக்க போவதில்லை. நான் வெற்றியாளராக இருக்க வேண்டும்.

கர்த்தரின் கிருபையைப் பற்றிய கிறிஸ்தவ போதனைகள் விசுவாசிகளுக்கு எதை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற நிச்சயமற்ற தன்மை இருக்கலாம்.

ஒருபுறம் கிறிஸ்துவில் இருப்பவர்கள் மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று வேதம் வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கையில் தடைசெய்யப்பட்ட விலங்குகளை உண்ணலாம் ஆனால் யுதர்களுக்கென இருக்கும் சிறப்பான விடுமுறைகளில் பங்கேற்க கூடாது.

மேலும்   1கொரி 6:11 இல் –  ஆயினும்கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

அந்த பரிவர்த்தனை முடிந்துவிட்டது. நாம் இரட்சிக்கப்பட்டோம். அப்படியெனில் நாம் விரும்புவதை ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது?

நாம் வேசிதனத்தில் ஏன் பங்குகொள்ளக் கூடாது? இயற்கையாக வரும் அனைத்தையும் ஏன் செய்யக்கூடாது? நம்முடைய சரீரம் விரும்புவதை ஏன் செய்யக்கூடாது?

இந்த கேள்விக்குத்தான் பவுல் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு என்று சொல்லுகிறார். ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது என்கிறார். எல்லாம் நமக்கு உதவிசெய்யக்கூடியவை அல்ல. கொரிந்து சபை விசுவாசிகள் ‘சுதந்திரத்தை’ பாவம் செய்வதற்கு உரிமமாக பயன்படுத்தினர்.

1கொரிந்தியர் 6:15 இல் வேசியை பற்றிய குறிப்பை காணமுடிகிறது. “உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. நிச்சயமாக முடியாது.

கொரிந்து சபை கிறிஸ்தவர்கள் விபச்சார சேவையை பயன்படுத்த தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தார்கள். இது கொரிந்து நகரில் கலாச்சார ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது உண்மைதான், பாவமோ மற்ற எதுவுமே  இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமுடியாது.

ரோமர் 8:38,39 – மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

எனவே இது நம்முடைய பாவ செயல்களை நியாயபடுத்துகிறதா?

இது விசுவாசிகளுக்கு ஒரு தவறான தரநிலை என்று பவுல் எழுதுகிறார்.

கிறிஸ்தவ சுதந்திரம் என்பது எந்தவொரு நடத்தைக்கும் அல்லது அணுகுமுறைக்கும் ஒரு சாக்கு போக்கு அல்ல.

கிறிஸ்துவில் நாம் இப்பொழுது என்னவாக இருக்கிறோமோ அதற்கு தகுந்தபடி வாழ, பவுல் நம்மிடம் கேட்கிறார். கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இதை ஏற்றுக்கொள்வார்களாக.

கிறிஸ்தவ வாழ்வின் தரத்தை நிர்ணயிக்க நாம் பார்க்க வேண்டியது – ஒரு பழக்கம் நமக்கு உதவிகரமாக உள்ளதா அல்லது அது நம்மை அடிமைப்படுத்துகிறதா என்பதைதான் என்று பவுல் வலியுறுத்துகிறார்.

செக்ஸ் என்பது உடலின் ஒரு செயல் மாத்திரம் அல்ல அதற்கும் மேலானது. திருமணத்தில் இரு நபர்களை ஒரே உடலாக இணைக்க கர்த்தர் இதை வடிவமைத்தார். மற்றொரு நபருடனான அந்த ஐக்கியம் கிறிஸ்துவை உள்ளடக்கியது. நாமும் அவருடைய ஐக்கியத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய சரீரம் உயிர்த்தெழ செய்யப்படும், நம்முடைய சரீரத்தின் மூலமாக நாம் கர்த்தருக்கு மகிமை சேர்க்க வேண்டும்.

“நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன்” – என்ற இந்த வசனத்தில்  பவுல் சொல்லுகிறார் நான் யாருடைய அதிகாரத்திற்கு கீழும் இருக்க மாட்டேன். (விபச்சாரியின் சரீரத்தில் நடப்பது போல).

எனவே, கிறிஸ்தவர்களிடையே, உணவுக்கான ஒரு சட்டத்தை பாலியல் தூய்மைக்காக பயன்படுத்த முடியாது.  

சிலர் கேட்கலாம், என்னுடைய சரீரத்திற்கு உணவு வேண்டும், நான் சாப்பிடுகிறேன், அதேபோல என்னுடைய சரீரத்திற்கு செக்ஸ் வேண்டும் எனவே நான் விபச்சாரியிடம் செல்கிறேன்.  இதில் என்ன தவறு இருக்கிறது?

சரீரமானது விபச்சாரத்திற்கு அல்ல . கர்த்தருக்காக, கர்த்தர் சரீரத்திற்காக.

பொருத்தமற்ற உணவுக் கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் அந்த சட்டத்தை பாலியல் ஒழுக்க கேட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று பவுல் எச்சரிக்கிறார்.

நம்முடைய அதிகமான காம பசியின் காரணமாக நம் உடலை பாலியியல் ஒழுக்கக் கேட்டிற்காகத்தான் கர்த்தர் படைத்திருக்கிறார் என்று நாம் எண்ணலாம், ஆனால் கர்த்தர் நமது உடலை பாவம் செய்வதற்காக உருவாக்கவில்லை, ஆதாம்தான் பாவம் செய்தான். நம்முடைய உடல் விபச்சாரபாவத்திற்காக கர்த்தர் படைக்க வில்லை.

உயிர்த்தெழுதலின் போது நம்முடைய உடல் உயிர்த்தெழுப்பப்படும். எனவே உணவிற்காக  உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுவல்ல மாறாக பாலியல் சம்பந்தமாக நம் உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மை பாதிக்கும்.

வீரர். கீதா, தில்லி

தானியேல் – II 22-01-2022 – தேவ செய்தி

அதற்குஅவன்: அவர்கள்மோசேக்கும்தீர்க்கதரிசிகளுக்கும்செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்துஒருவன்எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்றுசொன்னான்என்றார்.

(லூக் 16:31)

லாசர் மற்றும் ஐசுவரியவான் உவமை மூலம் நியாயபிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் பரலோக ராஜ்யத்தைப் பற்றி பேசுகையில் இந்த வார்த்தைகளை இயேசு பரிசேயர்களிடமும் அவருடைய சீடர்களிடமும் கூறுகிறார். இந்த வசனங்களின் மூலமாக ஏழை மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அநேகர் நம்மிடம் சொல்ல நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இயேசு இன்னொறு முக்கியமான ஒரு கருத்தை முன்வைக்கிறார், ஒருவன், நியாயபிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மூலமாக கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் நம்ப வில்லை என்றால் மேன்மையான அற்புதங்கள், அடையாளங்கள்  மற்றும் சாட்சிகள் வீணாக போகும்.

அற்புதங்களை கண்டு மக்கள் அவர் மீது விசுவாசம் வைத்தார்கள், (யோவா 2:23). ஆனால் அவரை குறித்து தீர்க்கதரிசிகள் சொன்ன வாக்கைப்பற்றி அவர் பேசுகையில் அவருடைய அற்புதங்களை கண்டு அவரை பின்பற்றிய சீடர்களில் பலர் அவரை விட்டு பின்வாங்கி போனார்கள் (யோவா 6:60,66). நோயிலிருந்து குணமாக வேண்டும், விடுதலை பெற வேண்டும், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம், குடும்பம், தேசம் இவைகளைக்கு விடைதேடி அலைபவர்களுக்கு வெளிப்படையான அடையாளங்கள் கிடைக்காவிட்டாலோ அல்லது அவர்கள் நினைத்ததற்கு எதிராக நடந்தாலோ அவர்கள் விசுவாசத்தில் பின்வாங்கி போகிறார்கள்.  இன்னும் சிலர் அநேக அற்புதங்கள் அடையாளங்களை கண்டாலும் நம்பிக்கையில்லாமலும், கர்த்தருடைய வசனத்தை விசுவசிக்காமலும் இருக்கிறார்கள். ரோமர் 10:17 இல் கர்த்தருடைய வார்த்தையை கேட்பது இரட்சிப்புக்கான சத்தியத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் மேலும் இதில் ஒரு அடையாளத்தின் பங்கு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்றும் பார்கிறோம்.

என்னுடைய மாமாவின் மறைவுக்குப் பிறகு  என் அத்தை மிகவும் தனிமையாக இருந்தார்.  அவருடைய மகனும் மருமகளும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தது அவருக்கு இன்னும் வேதனையையும் சுமையையும் சேர்த்தது. அந்த வேளையில் அவருடைய இரண்டாவது பேரக்குழந்தை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என கேள்விபட்டு மிகவும் துடித்துப்போனாள். இயேசுவின் படை அணியின் மூலம் நடத்தப்படும் “பவுல் விடுதலைப் பள்ளி” இல் பயின்றபடி கர்த்தருடைய வார்த்தையின் மூலம் அவர் உதவி தேடினார். அதன் பலனாக அவருடைய மகனும் மருமகளும் ஒன்று சேர்ந்தனர் மேலும் பேரக்குழந்தை புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்றது. இந்த அடையாளங்கள் அவருடைய விசுவாசத்தை ஊக்குவித்தது ஆனால் வேத வார்த்தைதான் அவரை நம்பவைத்தது. இப்போது அவரது நோயிலும் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை என்றாலும் அறிகுறிகளை தேடுவதற்கு பதிலாக, விடுதலைதரக்கூடிய சத்தியத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.

ஒரு அனுபவத்தின் விளைவாகவோ, ஒரு தேவதூதர் தோன்றியதன் விளைவாகவோ, மரித்தோரிலிருந்து யாராவது திரும்பிவந்ததன் விளைவாகவோ அல்லாமல் கர்த்தருடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். லூக் 16:17 – வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாய் இருக்கும். கர்த்தருடைய சேனையின் வீரர்களாகிய நாம் அவருடைய வார்த்தையில் கவனம் செலுத்துவோம், மேலும் நாம் யாரோடு வேதத்தை பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களிடம் அக்கறையாக இருப்போம், தரிசித்து நடவாமல் விசுவசித்து நடக்க நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.

Sol. Aphirancy