தானியேல் – II 21-01-2022 – தேவ செய்தி

என்பிரியமானசகோதரரே, கேளுங்கள்; தேவன்இவ்வுலகத்தின்தரித்திரரைவிசுவாசத்தில்ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில்அன்புகூருகிறவர்களுக்குத்தாம்வாக்குத்தத்தம்பண்ணினராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும்தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 2:5

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. – மத் 5:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. (2கொரி 8:9).

இயேசு கிறிஸ்து அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார் மேலும் அவரிடம் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை என்பதை இந்த வசனங்களின் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.  தன்னுடைய பிள்ளைகள் ஏழை பணக்காரர்கள் இடையில் பாகுபாடு அல்லது பாரபட்ச்சம் காட்டுவதை அவர் விரும்பவில்லை. ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பரலோக சிங்காசனத்தை விட்டு இந்த பூமிக்கு வந்து அவருடைய வறுமையிலிருந்து நாம் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்பதற்காக அவர் ஏழைஆனார்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று அவர் மலைபிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார்.

 நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் மேலும் தன்னைத் தாழ்த்துபவர்களை அவர் முன் உயர்த்த விரும்புகிறார்.

நம்முடைய இருதயங்கள் மீது அவர் விருப்பமாய் இருக்கிறார். நம்முடைய இதயத்தின் மூலமாக அவர் பார்கிறார், நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் நன்கறிவார். எப்போதெல்லாம் பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் வேத வல்லுனர்களும்  தங்களுடைய தந்திரமான வழிகளால் அவரில் குறைகாண வந்தபோது அவர்களது இருதயங்கள் மூலமாக அவர்கள் என்ன நினைத்தார்களோ அதையும் அவரால் பார்க்க முடிந்தது.

தேவன் அவர்களை நம்பவில்லை, ஆனால் அவர்கள் ஆச்சரியபடும்படி அவர்களுக்கு பதில் தந்தார்.

இன்றும் கூட தேவன் மனிதர்களின் இருதயங்களை நன்கறிவார் மேலும் அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

இயேசுவைப் பற்றி தெரிந்த பின்பும் அவரை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்பொழுதுமே ஏழையாகவே இருப்பர் மேலும் இந்த ஆன்மீக ஏழ்மையில் யாரும் அவருக்கு உதவ இயலாது.

தேவன் ஆர்வமாக இருப்பது நமது நம்பிக்கையே. விசுவாசத்திலும் அவருடைய வார்த்தையிலும் நாம் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் விசுவாசத்தில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஒருபோது ஏழையாக இருக்க மாட்டார்கள், ஏனென்றால் மிகப்பெரிய பொக்கீஷமாகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் கண்டுகொண்டார்கள்.

ஆனால் கர்த்தருடைய வார்த்தையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், எல்லா காலத்திலும் மேலான செல்வத்தை பெறுவார்கள்.

கோவாவில் உள்ள எங்களது அணிசபையில் ஒரு விசுவாசி இருந்தார். கர்த்தருடைய வசனத்தை கேட்பதிலும், விசுவாசத்திலும் உண்மையாக அவர் இருந்தார். அவர் கர்த்தருடைய வார்த்தையை விசுவசித்து ஏற்றுக்கொண்டார். அவருடைய நிலத்தை பயிர்ச்செய்ய அவரிடம் போதுமான பணம் இல்லை. சென்ற வருடம் அவரிம் இருந்த நெல்லை விற்கும்படியாக இன்னொறு அணிசபையின் உறுப்பினர் மூலமாக தேவன் பேசினார்.  அவர் அவ்வாறு செய்தபோது இரண்டுமடங்கு விலை கிடைத்தது. தன்னுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இருந்தது. நம்முடைய தேவனும் இரடசகருமான இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.

Sol. Luiza Kudchadkar AOJ

தானியேல் – II 20-01-2022 – தேவ செய்தி

,அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை;

 (ஏசாயா 9:7)

இவ்வுலகில் ஒரு அரசை நிறுவ இயேசு கிறிஸ்து வந்தார். அவர் காலத்தில் வாழ்ந்த  லூசிஃப்ரை தவிர வேறுயாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் தங்களுடைய உண்மை நிலையிலிருந்து விழுந்த பிறகு அதன் மதிப்பையோ, பொருளையோ புரிந்துகொள்ள வில்லை. ஆனால் கர்த்தருடன் இருந்த லூசிபர் கர்த்தரின் மகத்துவத்தையும், குண நலன்களையும் அறிந்திருந்தான், அவனுடைய அபார ஞானத்தில் இயேசுவை சோத்தித்து, இயேசுதான் தன் தலையை நசுக்கி பூமியில் தன் ராஜ்யத்தை நிறுவ வந்த ராஜா என்று கண்டுபிடித்தான். இயேசு அதை நிறைவேற்றினார். அவர் பூமியில் ஆதாம் மற்றும் அவரது சந்ததியினரின் ஆதிக்கத்தை மீடெடுத்தார், மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆள்வதற்கான தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவினார்.

தன்னுடைய ராஜ்ஜியத்தை இந்த பூமியில் நிறுவ விரும்பும் எந்த அரசனும் முதலில் செல்வம், சொத்துக்கள், பொன், அரண்மனைகள் , இராணுவப் படைகள் போன்றவற்றைக் குவித்து தன்னை வலிமையாக்குவான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்த துவங்குவான்.

ஆனால் இயேசுவின் இராஜ்யம் முற்றிலும் மாறானது.

அது மனிதர்களுடைய இருதயங்களில் நிறுவப்படுகிறது.  அவர் மனிதனை சாத்தானின் பொய், வஞ்சகத்திலிருந்து காப்பாற்றுகிறார், அவர்களுடைய மனதில் சாத்தானால் கட்டப்பட்ட அரண்களை உடைத்தெறிந்து அவர்களை இருளிலிருந்து விடுவிக்கிறார். சத்தியத்தை அறிய அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பயம், தடைகள், கவலைகள், ஏமாற்றங்கள், நிராகரிப்புகள் அனைத்தும் மறைந்துபோயிற்று, இப்போது இந்த பூமியை அரசாள்பவர்களாக தங்களை கருதுகிறார்கள். அவர்கள் பூமி, வானம் மற்றும் கடல் ஆகியவற்றை ஆளத்தொடங்குகிறார்கள். (ஆதி 1:28).

இயேசுவினுடைய அரசின் தலைநகர் மக்களின் இருதயமே. ஒரு நபர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படியவும் தனது வாழ்க்கையை ஒழுங்கமைக்க தன்னை ஒப்புகொடுப்பதன் மூலமும் அவருக்கு விடுதலை கிடைக்கும். மனிதனால் உறுவாக்கப்பட்ட பாரம்பரியம், (பாரம்பரிய சபைகள்) மதம், ஜாதி, இனம் அனைத்து நுகத்தடிகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.  அவர்கள் ஒரு புதிய  ஒழுங்கு ஒரு புதிய உலகில் நுழைந்து புதிய இயல்பு மற்றும் பண்புகளுடன் புதிய சிருஷ்டியாக மாறுகிறார்கள்.  இது தொற்றக்கூடியது. இதயத்திலிருந்து இதயத்திற்கு, ஒரு வாழ்வில் இருந்து இன்னொறு வாழ்விற்கு தொற்றுகிறது. இதை அனுபவித்தவர்களால் இதைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கவே முடியாது.

இதுபோல இயேசுவின் அரசை மனித இருதயங்களில் நிறுவுவதற்கான பணி 2022 ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பெந்தகோஸ்தே நாளன்றே துவங்கிவிட்டது. அது எருசலேமிலிருந்து அந்தியோக்கியா, ரோமாபுரி, கிரிஸு போன்ற பல நாடுகளில் இன்றும் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. லூசிபர் இதை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்தான் ஆனால் எங்கெல்லாம் அவன் முயன்றானோ அங்கெல்லாம் அது இன்னும் அதி வேகமாக பரவியது.  இது நபருக்கு நபர், வீட்டிற்கு வீடு, குடும்பத்திற்கு குடும்பம், நகரத்திற்கு நகரம் நாட்டிற்கு நாடு போன்றவாறு பரவுகிறது. இது எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிற குறைவதில்லை.

இது நிதி, கலாச்சார, மத சமூக மற்றும் அரசியல் தடைகள் அனைத்தையும் கடந்து செல்கிறது.

இயேசுவின் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவர்களில் முதன்மையானவர்கள் ரோமை பேரரசு அன்று இந்த முழு பூமியை உள்ளடக்கிய ஆட்சி அவர்களுடையதாகும்.   கி.பி 3ஆம் நூற்றாண்டில் ரோம பேரரசு பரிதாபமாக வீழ்ச்சி அடைந்து இயேசுவின் அரசுக்கு வழி வகுத்தது. ரோம பேரரசு இயேசுவை தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த அதிகரிப்பின் இரகசியம் என்ன?

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தின் குடிமகனாக இருப்பவர் இருதயத்தில் அமைதி ஆட்சி செய்கிறது. ஜெயன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஒரு பையனின் வாழ்க்கை மிகவும் கவலைகிடமாய் இருந்தது. தன்னுடைய தாயோடு அவன்  தனியாக வாழ்ந்து வந்தான், அவனுடைய தாயும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனாள்.  தாயைபிரிந்த அவன் மன அழுத்தத்ற்கு  தள்ளப்பட்டான். ஆறு மாதங்கள் கழிந்தபின் ஒரு நாள் காலையில் அவனுக்கு கடுமையான மாரடைப்பு வந்தது மருத்துவர் அவனுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே கொடுத்தார். சிகிச்சை துவங்குவதற்க்கு முன்பாக அவனே அனைத்து கோப்புகளிலும் கையொப்பம் இட்டான். நாங்கள் அவனை சந்தித்த வேளையில் அவனால் தூங்க முடியவில்லை, சத்தமாக பேசமுடியவில்லை, கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்தான், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க இயலவில்லை. நாங்கள் அவன் மீது மிகவும் பரிதாபப் பட்டோம், அவனை எங்களோடு தங்க சம்மதித்தோம். நாங்கள் அவனுக்காக ஜெபித்தோம். எட்டு நாட்களுக்கு பிறகு அவன் பேசினான், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன், உடல் சுகத்தைவிட  இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன், என்னால் நன்றாக தூங்க முடிகிறது, எனது கவலைகள் எல்லாம் என்னைவிட்டு நீங்கிவிட்டது.”

இது எவ்வாறு நடந்தது என்றால் இயேசு அவனுடைய இருதயத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார். இயேசுவின் அரசாங்கத்தின் வளர்ச்சிக்கும் அதனுடன் சேர்ந்துவரும் சமாதானத்திற்கும் முடிவே இராது. இந்த அரசு முழு பூமியையும் நிறப்பும்போதும், அனைத்து மக்களையும் (கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்) இந்த இந்த அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும்போது பரலோகமே கீழே பூமிக்கு இறங்கிவரும் மேலும் புதிய வானமும் புதிய பூமியும் நிறுவப்படும். ஆம் அவருடைய அரசுக்கு முடிவே இராது. அது எப்போதுமே பெருகிக்கொண்டே இருக்கும்.

இதுதான் நம்முடைய அழைப்பு. ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் மக்களுடைய இருதயங்களில் இயேசுவின் அரசை கொண்டுவருவது. ஒவ்வொருவரும் சாத்தானின் பொய் மற்றும் வஞ்சகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்க வேண்டும்.

Sr. Angelica AOJ   

தானியேல் – II 19-01-2022 – தேவ செய்தி

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது

லூக் 16:1

கர்த்தர் உலகில் ஒரு சக்திவாய்ந்த உருவம் மட்டுமல்ல, அவர் ஒரு அறிவார்ந்த வடிவமைப்பாளரும் கூட, உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது, உயிருள்ள மற்றும் உயிரற்றப் பொருட்கள், ஒரு சிறிய கூழங்கல் கூட அவருடைய சிருஷ்டிப்பின் வேலைதான். ஆதி அதிகாரம் 1 ஆம் அதிகாரத்தில் உலகின் மீது அதிகாரத்தை பய்னபடுத்தவும், அதை கீழ்படுத்தும்படியாகவும் சொல்லுகிறார். (ஆதி 1:26-28,).

வளங்களை அனுபவிப்பதற்கான கிருபை நமக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அதன் உரிமையானது அவரிடமே உள்ளது. லேவி 25:23-24 இல் நிலங்களை நிரந்தரமாக விற்பதை கர்த்தர் தடை செய்கிறார் ஏனெனில் அது அவருக்கு சொந்தமானது, நாம் சுற்றுச் சூழலின் பொருப்பாளர்கள். மனிதன் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பூமியை கவனித்துக்கொள்ள தவறினால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி ஏசாயாவும் எரேமியா தீர்க்க தரிசனம் சொல்லுகிறார்கள். (ஏசே 24:4-6, எரே 2:7). லூக்கா 16:1 இல் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், மேலதிகாரி தனது உடைமைகளை வீணடித்ததற்காக செல்வந்தர் அதிருப்தி அடைகிறார். இந்த பூமியின் பொக்கீஷங்களை நாம் புத்திசாலித்தனமாக செலவு செய்திருக்கிறோமா என்று இந்த வசனத்தை மனதில் வைத்துக்கொண்டு நாம் நம்மை ஆராய்ந்து பார்ப்போம், .

இயற்க்கையின் பொக்கீஷங்களின் வகைகள் – சூரியன், காடு, மலை, கனிமங்கள், விலங்குகள், காற்று, எண்ணெய், தண்ணீர் மற்றும் நிலம்.

மேலே கொடுக்கப்பட்ட  – சூரியன், காடு, மலை இவைகள் இயற்கை வளங்களை காட்டுகிறது, அதே நேரத்தில் கனிமங்கள், விலங்குகள் மற்று காற்று, எண்ணெய், நீர் மற்றும் மண் – கழிவுகளை பிரித்தெடுக்கும் சுழற்ச்சியை காட்டுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது – தாதுக்கள், மரக்கட்டை, உலோகங்கள், புதைபடிவங்கள் மற்றும்  எரிபொருள் போன்ற 62 மில்லியன் டன் வளங்கள் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன என்றும் உலகின் இயற்கை வளங்களில் 1/5, ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 10 டன்கள் வீணாகின்றன. புள்ளி விவரங்கள் நம்மை  திகைக்க வைக்கின்றன. வளங்களை பயன்படுத்துதல் மற்றும் கழிவு உருவாக்கம் சுற்று சூழலை பாதிக்கின்றன. எனவே தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சரியான தேர்வு செய்ய வேண்டும்.

 யோவான் 6:1-15 (ஐந்தாயிரம் பேருக்கு உணவளிப்பது) இதன் மூலம் இயேசு எவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை அறிந்திருந்தார் என்றும், வளங்களை சரியாகவும் நியாயமாகவும் பகிர்ந்து கொடுத்தார் என்பது தெளிவாகிறது. இந்த கோட்பாடுகள் உலகில் இருக்கும் வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அவை நிலைத்திருக்கும். மனிதனின் அதிகப்படியான சுரண்டல், அதிக செலவு செய்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வளங்களை வீணாக்கும் பண்பாடு, இவை அனைத்தும் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்த விடவில்லை.  வேதம் முழுவதும், மனித வரலாற்றில் கர்த்தரின் தலையீட்டைப் பார்க்கிறோம், கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வளங்களை  நாம் பராமரிக்க வேண்டும் அதை தவறாக பயன்படுத்தும்போது கர்த்தருடைய தீர்ப்பை கொண்டுவருகிறது. பில்லி கிரஹாம் ஒரு தடவை இப்படியாகச் சொன்னார், “அனைத்து மக்களுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள்தான் சுற்றுப்புறசூழலை குறித்து கவலைப்பட வேண்டும்.” அவர் வேததிலிருந்து விளக்கினார், கர்த்தர் உலகை படைத்து அதை காத்துக்கொள்ளுமாறு மனிதர்கள் கையில் ஒப்படைத்துள்ளார். பேராசையை அல்ல நம்முடைய தேவைகளை நிறைவேற்ற கர்த்தர் நமக்கு கொடுத்த  இந்த வளங்ககளை நாம்  எப்படி கையாளுகிறோம் என்று அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு மக்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டியது என்னவென்றால், இயற்கை வளங்களை வீணாக்க கூடாது என்பது தான்.

கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் தலை வணங்கி நாம் இந்த பூமியை எவ்வாறு கையாண்டிருக்கிறோமோ அதற்காக மன்னிப்பு கேட்போம், மேலும் நம்மை ஆசீர்வதிக்குமாறு அவரிடம் ஜெபிப்போம்.

Sol. Nirmala Lazar

தானியேல் – II 18-01-2022 – தேவ செய்தி

உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.

லூக் 16:26

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை  பற்றி தியானித்துக் கொண்டிருக்கையில் இரண்டு காரியங்கள் தெளிவாக தெரிந்தது. முதலாவது “இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும்,” இரண்டாவது,   அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் நரகத்தில் இருப்பவர்கள் பரத்திற்கு வர விரும்புவார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரத்தில் இருப்பவர்கள் நரகதிற்கு செல்ல விரும்புவது ஏன்? இந்த வசனத்தின்படி யாராலும் கடந்துச் செல்ல முடியாது. ஆனால் பரத்திலிருந்து நரகத்திற்குச் செல்ல ஏன் விரும்புவார்கள் என்று சிந்திப்போம். இவ்வுலகில் பல்வேறு சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவித்தப் பிறகு இப்போது சர்வவல்லமையுள்ள தேவனின் முன்னிலையில் பரலோகத்தில் மகிமையான செல்வங்களுடனும் இருப்பவர் ஏன் நரகத்திற்கு செல்ல விரும்ப வேண்டும்? இது உண்மையென்றால் நிச்சயமாக நித்திய வாழ்வை இழந்த தன்னுடைய உறவினர்களை காப்பாற்றுவதற்காகத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறு செய்ய நினைப்பது சாத்தியம் அல்ல.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, (எபி 9:27).

என்னுடைய குடும்ப ஆல்பங்களைப் பார்ப்பது வழக்கம், இந்த உலகை விட்டுச் சென்ற குடும்ப உறுப்பினர்களை பார்த்து, இவர்களுக்கு இரட்சிப்பு கிடைத்ததா என்றும், அவர்கள் எவ்வாறு கர்த்தரை எதிர்கொண்டிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அநேக நண்பர்களும் நமது குடும்பத்தினரும் இரட்சிப்பை பெறவில்லை ஆனாலும் நமக்கு மத்தியில்தான் சாப்பிட்டுக்கொண்டும், குடித்துக்கொண்டும், பயணம் செய்து கொண்டும் இருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவருடைய கிருபையின் மூலம் இரட்சிக்கப்பட்ட நமக்கு மட்டுமே அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்.

வேதம் சொல்லுகிறது, “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். (பிரசங்கி 7:2)

என்னுடைய தூரத்து உறவினர்கள், சில நண்பர்களின் மரணத்தை  கடந்த சில நாட்களாக நான் பார்த்தேன். ஆனால் இவர்களில் பெரும்பாலான நபர்கள் ஆண்டவராகிய இயேசுவை எதிர்கொள்ள தயாராகவே இல்லை.

ஆனால்  எபிரேயர் 10:22 இல் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.”

இரட்சிப்பு இல்லாமலும், இயேசுவோடு உடன்படிக்கை ஏற்படுத்தாமலும் அவர்கள் நித்திய வாழ்வை இழந்து விடுவார்கள்.  கர்த்தரை அறியாதவர்களை நாம் சந்திக்கும் போதும், அவர்களோடு உண்ணும்போதும், பயணம் செய்யும் போதும் ஒவ்வொரு ஆத்துமாவின் மீதும் கர்த்தருக்கு இருக்கும் பாரம் நமக்கும் வரவேண்டும். இப்படியாய் கர்த்தர் உங்கள் மூலம் அவர்களை காப்பாற்றுவாராக.

ஜெபம்: பரலோக பிதாவே உமக்கு இருக்கும் ஆத்தும பாரத்தை எங்கள் இருதயத்தில் ஊற்றுவீராக. இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களைப் பற்றி நாங்கள் கவலைபடவும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் படி எப்போதும் செயல்படவும், நீர் கொடுக்கும் இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படியாயும் நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆமேன்.

Sol.Leo

தானியேல் – II 15-01-2022 – தேவ செய்தி

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

லூக் 16:11

சீடர்களுக்கு இயேசு இந்த வசனத்தைச் சொன்னதின் மெய் பொருள் என்னவென்றால், தன்னுடைய சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைக்கப்போகிறார் என்பதுதான். அவற்றை புத்திசாலிதனமாகப் பயன்படுத்த அவர்கள் பொறுப்பெடுப்பார்கள் எனபதற்காகவே இப்படி சொன்னார். இவ்வாறு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய சொத்தை இயேசு கொடுத்துச் சென்றிருக்கிறார். நம்மிடம் இருப்பதெல்லாம் அவரிடமிருந்து வந்ததே. கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அவரது பணம், திறமை, அதிகாரம், செல்வம், நிலம், வேலை, பதவி போன்றவைகளை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பு. ஒரு நாள் வரும் அப்போது கர்த்தர் நம்மை அழைத்து நாம் எப்படி இவைகளை பயன்படுத்தியிருக்கிறோம் என்று நம்மிடம் கணக்கு கேட்பார்.

பணம் பரலோகத்தின் நாணயம் அல்ல என்று இயேசு கூறுகிறார். உதாரணத்திற்கு உங்களிடம் இந்திய நாட்டின் பணம் அதிகமாக இருந்தும் வெளிநாட்டில் பட்டினி கிடக்கும் விசித்திரமான அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். வெளி நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு வங்கிக்குச் சென்று உங்கள் பணத்தை நீங்கள் இருக்கும் அந்த நாட்டின் பணத்தில் மாற்ற வேண்டும்.

ஆனால் நாம் பரத்திற்கு போகும்போது அங்கு பரிமாற்ற வங்கிகள் எதுவும் இருக்காது.  நம்முடைய பணத்தை பரலோக நாணயமாக மாற்றும் சந்தர்ப்பம் இந்த உலகில்தான் உள்ளது. பரலோக வாசல்வரை நாம் காத்திருந்தோமேயானால், காலம் கடந்து போய்விடும்.

இயேசு கிறிஸ்து ‘உண்மையான செல்வம்’ மற்றும் ‘பொய் செல்வம்’ இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறார்.  பொய்யான செல்வம் இவ்வுலக செல்வமாகும், இதை நம்முடைய வங்கி கணக்கிலும் வங்கியிலும் அளந்து பார்க்கலாம். உண்மையான செல்வம் நித்தியமானது. மத் 6:19-21 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; பொருள்சார்ந்த செல்வம் உண்மையான செல்வம் அல்ல. உண்மையான செல்வம் வங்கிகள் நம்முடைய வங்கி எண்ணில் மதிப்பிடுவது அல்ல, மாறாக பரலோக வங்கியில் நாம் சேர்த்துவைத்திருக்கும் செல்வமே.

லூக் 21:1-4 இல் ஒரு ஏழை விதவை தன் வறுமையிலிருந்து இரண்டு காசுகள் போட்டாள், மற்றவர்களை பார்க்கிலும் இது மிகக் குறைவு ஆனாலும் இயேசு மற்றவர்களை விட இவள் அதிகமாக கொடுத்தாள் என்றும் , மற்றவர்களோ தங்கள் பரிபூரணத்திலிருந்து கொடுத்தார்கள் ஆனால் இவளோ தன்னுடைய ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.  லூக் 12:15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

அவருடைய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்யவும், அவருடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், எல்லைகளை விரிவுபடுத்தவும், அவருடைய ஒளியை அந்தகாரம் நிறைந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லவும், அவருடைய தரிசனம் நிறைவேற  உழைக்கவும் அவர் நம்மை அழைத்துள்ளார் நாம் அவருக்கு இதற்கான கணக்கை கொடுக்க வேண்டும். நம்மிடம் அவர் ஒப்படைத்திருக்கும் அனைத்து தாலந்துகளுக்கும் ஒரு நாள் அவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

Sol. Dr. Mohan Parmar

தானியேல் – II 14-01-2022 – தேவ செய்தி

ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது

(ஏசா 45:1)

கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர் தகுதிபடுத்துகிறார் மேலும் அபிஷேகிக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தமது கிருபையாலும், வல்லமையாலும் நம்மை மேம்படுத்துகிறார். தேசங்களை ஆளவும், அவைகள் மீது அதிகாரம் செய்யவும் அவர் தனது வலது கரத்தை நீட்டி நம்மை பலப்படுத்துகிறார். கர்த்தருடைய அபிஷேகம் அல்லது அதிகாரத்தினால் அந்தகாரத்தின் அரசர்களையும் அனைத்து நாடுகளிலும் உள்ள அவர்களீன் பூமிக்குரிய பிரதிநிதிகளையும் அவர்களின் தற்காப்பு கவசத்தையும் உடைத்தெறிய முடியும்.  அழிவை விளைவிக்க கூடிய் அவர்களின் ஆயுதங்களிலிருந்து நாம் அவர்களை நிராயுதபாணியாக்க முடியும்.

எவராலும் பூட்டமுடியாத கதவுகளை நமக்காக தேவன் திறந்து வைப்பார்.  யாராலும் பறிக்கவோ தடுக்கவோ முடியாத கர்த்தரின் வல்லமையையும் அதிகாரத்தையும் பூமியில் நிரூபிக்க அவர் நமக்கு வாய்ப்புகளை கொடுப்பார். நமக்கு ராஜா கோரேசைப் போல ஒரு மண்புடைய மற்றும் நித்திய இலக்கு உள்ளது. கோரேசு மன்னன் தன்னை ஒரு வேலைகார ராஜாவாக கண்டார் மேலும் உயிருள்ள தேவனை சேவித்தார். அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வழியில் நாம் அனைவரும் ஊழியகார ராஜாக்கள். கோவிலையும் எருசலேமையும் மீண்டும் கட்டுவதற்கு கோரேசு அபிஷேகம் செய்யப்பட்டது போல பூமியில் கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு நாமும் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய அழைத்தலை முழுமையாக்குவதற்கு பரலோகத்தின் வளங்கள் மற்றும் கர்த்தருடைய சேனை நம்மோடு உள்ளது.

தம் மக்களுக்கு முன்னே செல்வதற்கும் மலைகள் போல பெரியதாக கடக்க முடியாத தைடைகள் வந்தாலும் அவைகளை அகற்றுவதற்கு கர்த்தர் உறுதியளிக்கிறார். எவ்வளவு பலமான கதவுகளாக இருந்தாலும் அவருடைய வல்லமையை தாங்க முடியாது. மறைக்கப்பட்ட பொக்கீஷங்களை நம் கைகளுக்கு கொடுக்க வெண்கல கதவுகள் வழியாககூட அவரால் போக முடியும்.  இஸ்ரவேலின் தேவனைப் பற்றி எதுவும் தெரியாதபோதும் கர்த்தர் கோரேசை அழைத்ததுபோல தனிப்பட்ட முறையில் நம்முடைய முதல் பெயரைச் சொல்லி நம்மை அழைக்கிறார். அவர் யார், எப்படிப்பட்டவர், அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் அளவு, அவரை நம்புபவர்கள் மீது அவரின் மிகுந்த அன்பு ஆகியவற்றை மிக விரிவாககூறவும் அவரை அறிந்து கொள்ளவும் கர்த்தருடைய வார்த்தை நமக்கு மிகவும் நன்மையாக உள்ளது.

நமக்கு எதிராக எழும்பக்கூடிய எந்த சாத்தானுடைய தீய சக்தியாக இருந்தாலும் அமைதியின் ராஜகுமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் நம்மால் தோற்கடிக்க முடியும். நம்முடைய உள்ளார்ந்த அரண்களாகிய பயம் மற்றும் சந்தேகத்தால் இந்த சக்திகள் நம்மை கொல்லவும் அழிக்கவும் பலவீனபடுத்தவும் முயற்சிக்கின்றன. சில தீய சக்திகள் நம்மைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது இதனால் நமக்கு உள் காயங்கள் ஏற்படுகின்றன. சில நமக்குத் தெரியாமல் தந்திரமாக நம்மிடம் இருந்து  ஆசீர்வாதங்களை திருட முயல்கின்றன. சாத்தானின் சக்திகளின் வரிசை 666 அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள், நமக்கு எதிரான தீய செயல்கள் என எண்ணிக்கொண்டே போனாலும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இவை ஒன்றுமே இல்லை. கர்த்தரின் பிரசன்னம் ஒரு மேகத்தைப் போல நம்மைச் சூழ்ந்து கொண்டு, நெருப்பைப் போல நம்மை பாதுகாப்பதாலும், அவர் நம் வலகரத்தைப் பிடித்து நம்முடைய வாழ்வின் எல்லா முக்கியமான பகுதிகளிலும், முடிவுகளிலும் நம்மை வழிநடத்துவதால் 666க்கு மேல் நம்முடைய வெற்றியை நாம் உறுதியாக நம்பலாம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் சராசரியாக ஒன்று முதல் இரண்டு அந்தகார ராஜாக்கள் நம்மை தாக்குகிறார்கள். இவ்வுலகில் நாம் இருக்கும் போதே இந்த தீய சக்திகளின் ஆயுதங்களை உரித்துப் போடலாம், நமக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அவைகளின் சக்தியை செயலற்றுப் போகச் செய்ய முடியம்  என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

கர்த்தரால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ராஜாக்களின் அதிகாரத்தை நாம் பயன்படுத்தும் போது சாத்தானின் கோட்டைகள் இடிந்து விழும், நம்முடைய மன அல்லது உணர்வுகளின் அமைதியை திருட அருகில் கூட  அதனால் வர முடியாது, நம்முடைய முழு ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தின் ஆரோக்கியதிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.  நம்முடைய வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது, நம்முடைய நற்பெயர், உள் உணர்வுகள், உறவுகள் நம்முடைய நிகழ்காலத்தையோ, எதிர் காலத்தையோ அல்லது நித்திய காலத்தையோ எந்த பாதிப்பையும் அவைகளால் ஏற்படுத்த முடியாது.

Bro. Prateep Philip IPS, DGP(Rtd) Chennai

தானியேல் – II 11-01-2022 – தேவ செய்தி

மனுஷர்ஒடுக்கப்படும்போதுதிடப்படக்கடவர்கள் என்று நீர்சொல்ல, தாழ்ந்தோர்ரட்சிக்கப்படுவார்கள். –

யோபு 22:29

இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தான் நம்மை வீழ்த்த விரும்பிகிறான். ஆனால் கர்த்தரை ஆராதித்து, அவருக்கு நம்மை ஒப்புகொடுத்து அடிபணியும்போது நம்மை உயர்த்தி நமக்கு உதவும் ஒரே உண்மையான தேவன் அவர் மட்டுமே.

நான் உங்கள் அனைவரோடும் என்னுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த ஆண்டு பெருந்தொற்றின் காரணத்தால் எங்களுடைய பள்ளியில் முழு ஊதியம் எனக்கு கொடுக்கப்பட வில்லை. அக்டோபர் 25, 2021 இல் பள்ளி மீண்டும் திறந்தது. பல நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக மாணவர்கள் அனைத்யையும் மறந்து விட்டனர். நன்றாக திட்டமிட்டு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேலை செய்தேன். ஆசிரியர்களுக்கும் இதற்காக பயிற்சி கொடுத்தேன்.

சம்பள நாள் வந்தது. அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. என் இதயம் பாரமாக இருந்தது, நான் மிகவும் மன்முடைந்து போனேன். சம்பளத்திற்காக மட்டும் அல்ல, என்னுடைய கடின உழைப்பையும் அவர்கள் அங்கீகரிக்க வில்லை. நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். ஆனாலும் கூட ஜெபித்தேன் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். இது டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடந்தது.

என்னுடைய மகளின் உயர்கலிவிக்காக எனது குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர் திட்டமிட்டனர். டிசம்பர் 18 ஆம் தேதி என்னுடைய தோழி என்னை அழைத்தாள், நேர்முக தேர்வு ஒன்று உள்ளது நீ அதில் கட்டாய்ம் பங்குகொள்ள வேண்டும்,, என்றாள். இது உம்முடைய சித்தமானால் தேவனே என்னை அங்கே அனுப்பும் என்று ஜெபித்தேன். கர்த்தர் ஏசாயா 64:4 மூலமாக என்னோடு பேசினார்,  நீ களிமன்; நான் உங்களை உருவாக்குகிறவர்” நாம் இந்த தேர்வில் பங்குகொண்டேன். தேர்வு 6 சுற்றில் நடந்தது. எல்லா சுற்றையும் கடந்து சென்று வெற்றி அடைய எனக்கு புத்திசாலித்தனம் கொடுத்தது கர்த்தர்தான். ஏற்கனவே நேரடி வகுப்பு துவங்கி விட்டதால், நல்ல சம்பளத்தோடு பெங்களூரில் ஒரு மதிப்புமிக்க கலிவி நிறுவனத்தில் சீனியர் அகாடமிக் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். உடனடியாக வேலையில் சேருமாரு என்னை அழைத்தனர். நானும் ஜனவரி 3 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன்.

HR என்னை வரவேற்றார் மேலும் சிறிது நேரம் காத்திருக்குமாறு சொன்னார். இதற்கிடையில் தலைமை ஆசிரியை  என்னை சந்தித்து நான் சேருவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டார். அதற்கு பின் மீண்டும் அவரை சந்தித்த வேளையில், கர்த்தருக்கு நன்றி சொல்லுமாறு அவர் என்னிடம் சொன்னார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். அதிகாலை 3 மணி அளவில் ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும்,அதில், 3ஆம் தேதி அன்று வருபவர்களுக்கு பணி நியமனம் செய்யுமாறும் மற்றவர்களுக்கு 4 மாதம் கழித்து வரும்படியும் சொல்லவும் என்று எழுதியிருந்ததாம்.

நான் தாழ்வில் இருந்தபோது கர்த்தர்தாமே தன்னுடைய நீதியின் கரத்தினால் என்னை தூக்கினார். எல்லா மகிமையும் அவருக்கே. ஆமேன்.

ஏசா 12:2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

Sol. Preethi Bosco

தானியேல் – II 10-01-2022 – தேவ செய்தி

பந்தயத்திற்குப்போராடுகிறயாவரும்எல்லாவற்றிலேயும்இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள்அழிவுள்ளகிரீடத்தைப்பெறும்படிக்குஅப்படிச்செய்கிறார்கள், நாமோஅழிவில்லாதகிரீடத்தைப்பெறும்படிக்குஅப்படிச்செய்கிறோம்.

1கொரி 9:25

எபி 12:1

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் பாவங்கள் மற்றும் சோதனைகளாலும் நிறம்பியுள்ளது.  எனவே ஒவ்வொருநாளும் கர்த்தருடைய  பிரசன்னத்திற்குச் சென்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உங்கள் இருதயங்களை பரிசுத்தமாக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்– லூக் 21:34

நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்த நிறைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை தேவை.  உலகத்தின் மேல் உள்ள இச்சைகளை கட்டுப்படுத்துங்கள்.

லூக் 21:34 – உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த அனுமதியுங்கள், அதனால் உங்கள் மனம் புதிதாகும். உங்கள் எண்ணங்களையும், ஆசைகளையும் திருத்த அவருக்கு இடம் கொடுங்கள்.

கர்த்தருடைய கரங்களின் கீழ் உங்களை ஒப்புகொடுத்து அவரை முழுமையாக நம்புங்கள், அவர் உங்களை திருத்துவார்.

உங்களை தாழ்த்திகொண்டு உங்களை திருத்துவதற்கு கர்த்தரை அனுமதிக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ளும் போது கர்த்தர் உங்களை அவருடைய சொந்த மகனாக/மகளாக கருதுவார், அவரே உங்களை வழிநடத்துவார்.

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எபி 12:11

ஒரு நாள், எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்கவில்லை, அதற்காக நான் கண்டிக்கப்பட்டேன். நான் மிகவும் வேதனைப்பட்டேன் மேலும் அதை குறித்து ஜெபித்தேன், அப்போது கர்த்தர் என்னோடு பேசினார்; “நீ உன் தவறை உணர வேண்டும், நீ உ ன்னுடைய வேலையில் விடாமுயற்சியுடன் வேலை செய்யாதப்போது மற்றவரகள் உன்மீது கருணை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.” பின்னர் என்னுடைய தவறை நான் உணர்ந்தேன் மேலும் மனம் கசந்து மன்னிப்பு கேட்டேன். பதவி உயர்வின் மூலம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். அதேபோல நான் செய்த தவறுக்காக ஒரு தேவ பிள்ளையால் கண்டிக்கப்பட்டேன். நான் என்னை தாழ்த்தி திருத்தங்களை ஏற்றுக்கொண்டபோது கர்த்தர் எனக்கு தலைமைப் பண்புகளை கற்றுக்கொடுத்தார். இயேசுவே உமக்கௌ நன்றி.

Sol. Benjamin Philip

தானியேல் – II 09-01-2022 – தேவ செய்தி

உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

யாத் 15:7

யாத் 15: மீது தியானம் செய்துகொண்டிருக்கையில் கர்த்தருடைய ஆவி என்னை எபே 6:11-13 படிக்க அழத்துச் சென்றார்.

நாம் மனிதர்களோடு யுத்தம் செய்யவில்லை ஆனால் என்னுடைய 13 வருட வாலிப வயதை திருடிய துரைத்தனங்களோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் யு/௺ௐஈத்தம் செய்கிறோம்.

நாம் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன் மேலும் எனது திருமணம் ஒரு ரோமன் கத்தோலிக்கருடன் நடந்தது. கடந்த 45 ஆண்டுகளாக நான் இரட்சகரை அறியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்புதான் கர்த்தர் என்னை அழைத்தார். ஆழமாகிய வேரூன்றிய மன்னிக்க முடியாத மற்றும் கசப்பான காடுகளில் காணாமல் போன ஆடுகளில் நானும் ஒருத்தி. என்னுடைய அறியாமையால் மாமியார் மற்றும் கணவருடைய தங்கையுடன் மனகசப்பில் இருந்து வேதனை நிறைந்த 13 வீணடித்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இயேசுவின் படை அணி (AOJ) வோடு சேர வாய்ப்பு கிடைத்தது. மன்னித்தல் மற்றும் ஒப்புறவாதல் என்னும் வகுப்பின் மூலமாக என்னுள் இருந்த அரணான மன்னியாமை மற்றும் மனகசப்பு என்னைவிட்டு நீங்கியது. 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரி 4:4.

மீண்டும் கர்த்தர் உபாகமாம் 9:3 காணச் செய்தார்,

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர்உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

நாம் வேலையை துவங்குவதற்குமுன் சுத்தமாக்கப்பட்டு ஒரு முன்னோடியாக மாற வேண்டும்.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். – யாத் 14:14

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி -எண் 33:52

என்னுடைய இருதய ஆலயத்தை  24×7 சுத்தம் செய்வதில் கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அதனால் என் வாழ்க்கையில் உள்ள எனது பெருமை, பதவி, அதிகாரம், அந்தஸ்து, சாதனைகள், சுய நீதி, பொறாமை, எரிச்சல் மன்னிக்காதன்மை  விமர்சனம் செய்வது போன்ற அனைத்து சிலைகளையும் கிருபையினால் விரட்டியடித்து அவருடைய அழைப்புக்கு நான் தகுதியானவளாக இருக்கிறேன்.

கர்த்தருடைய இளைப்பாறுதலில் உறுதியாக நிலைத்திருக்க இந்த வழிகாட்டுதல் என் இதயத்தில் உறுதியாக பதிந்தது.  (மத் 11:28-30, யாக்கோ 4:7).

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். மத் 5:35

துதியும் கனமும் இயேசு ஒருவருக்கே.

Sol. Jasmine James

தானியேல் – II 08-01-2022 – தேவ செய்தி

; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.

(லூக் 1:51).

ஒருவர் பரிமாறும்போது எப்போதும் காலியான கோப்பையே, நிரப்புவதற்காக நிரப்புபவரின் கவனத்தை ஈர்க்கும். ஏற்கனவே வேறு ஏதாவது பல்வேறு நிலைகளில் நிரப்பட்ட கோப்பைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அனைத்து கோப்பைகளுக்கு மத்தியில் காலியான கோப்பைக்கே மரியாதை கிடைக்கிறது.

கர்த்தரை பொறுத்தவரை, ஒருவர் ஆணா, பெண்ணா, கன்னிப்பெண்ணா, திருமணமானவரா, பரிசேயரா, அல்லது பொதுநலவாதியா, உயர்ந்தவரா அல்லது அந்தஸ்தில் குறைந்தவரா என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஒருவன் நிரம்பி இருக்கிரானா அல்லது காலியாக இருக்கிறார்னா அதாவது தலைகனம் பிடித்தவனாக அல்ல மாறாக சேவகனைப் போல தாழ்ச்சியுள்ள் இதயம் உடையவனா என்பதை கர்த்தர் பார்க்கிறார்.

எல்லாத்தலைமுறையிலும் மரியாள் ‘பாக்கியவதி’ என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றாள். அவளுடைய” அடிமையின் தாழ்நிலையை” கண்டு கர்த்தர் பரிசளித்தார். கன்னியாக இருப்பது அல்லது இளமையாக இருப்பது, அல்லது பெண்ணாக இருப்பது அல்லது ஒரு ஆணுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது என் எதுவுமே தடையாக இல்லை. அவளுடைய கோப்பை நிறப்பப்பட்டது.

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து “அடிமையின் ரூபம்” எடுத்ததை கனம் பண்ணினார். (பிலி 2:7-11). ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கர்த்தர் இப்படியே கனம் பண்ணுவார்.

‘அடிமைபோல தாழ்ச்சியான நிலையை’ பெறுவதற்கான முறைதான் என்ன? இதை நாம் பவுலிடம் தெரிந்துகொள்கிறோம்.

பவுல் தன்னுடைய மாமிசத்தில் இருந்த நம்பிக்கை  மற்றும் சுயநீதி என எல்லாவற்றையும் இழந்து இரட்சகர் இயேசுவை பற்றிக்கொண்டார். (பிலி 3:8).

(பெயர் மற்றும் பாதுகாப்பு இவை அனைத்தும் பெருமைமிக்க பாபேல் கோபுரத்துக்கு சமானம், இவைகளைத்தான் பவுல் நிராகரித்தார்.)

நாம் எவ்வாறு இருக்கிறோம்?

ஒரு முறை நான் அணி சபையில் பங்கேற்று கொண்டிருந்தேன். முன்பு குடிகாரராக இருந்து குணம் அடைந்த சகோதரர் ஒருவர் செய்தி கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் அழுதுகொண்டே செய்தியை  இவ்வாறு கொடுத்தார், “கர்த்தாவே இந்த பைபிளை தொட கூட நான் அறுகதை அற்றவன், நான் ஒரு பாவி. நான் சபைக்கு செல்லாமல் இருந்தேன். ஆனாலும் நீர் என்னை ஒரு மனிதனாக கருதி இந்த வேதத்தை கையால் தொடவும் உம்மைப் பற்றி போதிக்கவும் கிருபை தந்தீர், கர்த்தருக்கு முன்பாக அந்த சகோதரர் தன்னை தாழ்த்தியதை கண்டு நான் பயந்துபோனேன். நான் அவரை நெருங்ககூட முடியாது.  அந்த நாளில் இருந்து இருதயத்தை காலி செய்ய நான் கற்றுக்கொண்டேன்.

நம்முடைய மாமிசத்தில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சுய நீதியில் நாம் பெருமை கொள்ளும் நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கலாம்; நமக்கு பாதுகாப்பையும் சார்ந்திருக்க நல்ல பெயரையும் வழங்கும் ஒரு  ஆன்மீக சபையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அவைகளையெல்லாம் நாம் எப்படி பார்க்கிறோம்? இலாபமாகவா அல்லது நஷ்டமாகவா?

அவைகளை நாம் நஷ்டமாக கருதினால், நமக்கு அது ஆதாயம்.

அவைகளை இலாபமாக கருதினால் நாம் கர்வத்தோடு இருக்கிறோம்.

கர்த்தர் மேட்டிமை உடையவர்களை சிதறடிக்கிறார்.

ஜெபம்: கர்த்தாவே என் இருதயத்தை காலி செய்ய எனக்கு உதவும். என்னுடைய மாமிசத்தினாலோ அல்லது சுற்றியுள்ள உலகத்தினாலோ எந்த லாபத்தையும் நான் ஏற்கவிடாதேயும். ‘தாழ்ச்சியுள்ள அடிமையின் நிலையை நான் பெற்று என் கோப்பை நிறம்பி வழிய எனக்கு உதவும். ஆமேன்.

Sol. Dr. Sujatha Aacha