நாள் : 26-05-2022 – தேவ செய்தி
“ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்”.
2நாளா 14:11-12.

பத்து இலட்ச்சம் மக்களோடும், 300 இரதங்களோடும் எத்தியோப்பியர் ஆசாவுக்கு எதிராக் யுத்தம் செய்ய வந்தபோது அவன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம் என்று ஆசா தன் நாவினால் அறிக்கையிட்டான். கர்த்தாவே எங்களுக்கு துணைநில்லும், இந்த ஏராளமான் கூட்டத்திற்கு எதிராக நாங்கள் போரிட வந்துள்ளோம். நாங்கள் உம்மீதும் உம்முடைய இரக்கத்தையும் சார்ந்துள்ளோம்.
கர்த்தர் எத்தியோப்பியர்களுக்கு எதிராக ஆசாவுக்கு வெற்றி தந்தார், எத்தியோப்பியர்கள் ஆசாவுக்கு முன்பாக ஓடிப்போனார்கள். ஆசாவோடு இருந்த இராணுவ வீரர்கள் 5,80,000 பேர் ஆகும். சேராவோடு 10 இலட்ச்சம் போர் வீரர்கள் மற்றும் 300 இரதங்களோடு இருந்தனர். எனவே எத்தியோப்பியர்களிடம் இருந்த இராணுவமே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஆனாலும் ஆசா கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தான். கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட்டான். எத்தியோப்பியரிடம் ஆசா செய்த யுத்தத்தில் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், எதிரி பலமுள்ளவனாகிலும், பலனற்றவனாகிலும் கர்த்தர் மீது நாம் நம்பிக்கை வைத்தால் நாம் வெற்றிபெறலாம் என்பதே.
நமக்கு எதிராக வருபவர்களை வெல்வது நம்முடைய பலத்திற்கு அப்பாற்பட்டு இருக்கலாம். அவர்களை எதிர்த்துநிற்க கூட திராணி இல்லாமல் இருக்காலாம். ஆனால் கர்த்தரை மட்டுமே நம்பி அவரை மட்டுமே சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு வெற்றியை தருவார்.
சாட்சி
தாவீது ஆராதனை பயிற்சி பள்ளியின் மூலம் நான் அநேக காரியங்களை கற்றுக்கொண்டேன். அளவில்லாத அபிஷேகத்தை கர்த்தர் என் மீது ஊற்றினார் மேலும் என்னுடைய நாவில் புதுபாடலை வைத்தார்.
பாடல்
- அதிகாலையில் எழுந்து நாம் கர்த்தரை துதிப்போம்.
- இருளில் வாழும் மக்களை இயேசுவின் வியத்தகு ஒளிக்குள் கொண்டுவருவோம்.
- தேசங்களுக்காக ஜெபித்து, அதை கர்த்தருக்கு சொந்தமாக்குவோம். ஆனந்த சத்தத்தோடு நாம் கர்த்தரில் களிகூறுவோம்.
நாம் அவருடைய சேனையின் வீரர்கள்
நாம் அவருடைய சேனையின் வீரர்கள்
எல்லா மகிமையும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவுக்கே.
ஜெபம்
பரிசுத்த தேவனே, எங்களுடைய எதிரிகளிடமிருந்தும் அவர்களுடைய தந்திரங்களிலிருந்தும் எங்களை காப்பாற்றும். நாங்கள் எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மையே சார்ந்திருக்கிறோம்.
ஆமேன்.
Sol.Manimegalai
