நாள் 19-05-2022 – தேவ செய்தி
பரலோக நாணயம்
பரலோகத்தின் பொக்கீஷங்களை நாம் எப்படி சம்பாதிக்கலாம்?

ஒவ்வொரு நாட்டிலும்/ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. நம்முடைய பிதாவின் பரலோக ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. அது என்ன என்று உங்களால் கணிக்க முடியுமா? பரலோகத்தின் நாணயம் ‘அன்பு’. பரலோகத்தில் வசிப்பவர்கள் அன்பு என்னும் நாணயத்தின் மூலமாகத்தான் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டனர் மேலும் இரட்சிப்பு என்னும் பரிபூரண அன்பளிப்பை பெற்றனர். பரலோகத்தில் கொடுக்கல், வாங்கல் அன்பினால் நிறைவேற்றப்படுகிறது.
ஒரு விசுவாசி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு பரலோக பொக்கீஷத்தை சம்பாதிக்க முடியும்?
பூமியின் இருக்கும் ராஜ்யத்தில் கூட உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தின் பொருட்செல்வம் பயனற்றது.
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத் 6:24.
பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது மடக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டனர், “இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா இல்லையா? அவர்களுடைய கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட இயேசு அவர்களுக்கு பதில் சொன்னார்,
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
மத் 22:21.
இவ்வுலகில் வசிக்கும் ஒரு நல்ல விசுவாசிக்கு எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளாக பணம் இருக்கது. கர்த்தர் என்ன கொடுத்திருக்கிறாரோ அதில் திருப்தியாய் இருக்க அவன் அறிந்திருப்பான். உலகபிரகாரமாக செல்வந்தர்களாக இருப்பவர்களைப் பார்த்து அவன் பொறாமைபடுவதும் இல்லை.
கர்த்தர் தங்களுக்கு நியமித்ததை நிறைவேற்றுவது மற்றும் ஆத்தும ஆதாயம் செய்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
சங் 37:16.
அழிந்து போகும் இந்த உலகத்தின் செல்வங்களை சம்பாதிப்பது எப்படி என்று இவ்வுலகத்தார் கவலைப் பட்ட்டுகொண்டிருக்கிறார்கள். சாத்தான் அவர்களுடைய கண்களை குருடாக்கிவிட்டான், மேலும் இவ்வுலக செல்வத்தை அடைவதுதான் மகிழ்ச்சியின் மந்திரம் என அவர்களை ஏமாற்றியும் இருக்கிறான்.
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
1திமோ 6:17.
உண்மையான விசுவாசிகள் வேதத்தை வாசிப்பது அதன்படி நடப்பது இதுவே அவர்கள் சேர்த்து வைக்கும் பரலோக பொக்கீஷம். அன்பிலும் ஒற்றுமையிலும் ஒருமித்து அவர்கள் வாழ்கிறார்கள், மேலும் தங்களுடைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பரலோக பொக்கீஷத்தின் மீது அவர்கள் கண்கள் நிலைத்திருக்கிறது.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்,
1திமோ 6:10.
பரலோக ராஜ்ய பணத்தின் மதிப்பு
அன்பின் வல்லமை அதிகம் அதை தெரிந்தவர்களுக்கே அதன் உண்மை தெரியும். அதன் மூலம் உங்களுடைய குழந்தைகளின் கீழ்படிதலை வாங்க முடியும், கணவருடைய நம்பகத்தன்மையை வாங்க முடியும், உனது மனைவியின் கரிசனையை வாங்க முடியும், உன்னுடைய பெற்றோர்களின் அமைதி, எஜமானனின் கிருபை, உங்களுடைய வேலைகாரனின் விசுவாசம், ஒரு புதிய மனிதனின் நம்பிக்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும் இந்த அன்பால்.
அன்புக்கு ஒரு காந்த சக்தி உள்ளது, அது அவர்களின் ஆவி மற்றும் அதன் விளைவாக அவர்களின் மனசாட்சியை உயிருடன் வைத்திருப்பவர்களிடம் மட்டுமெ அது செயல்படும்.அதனால் தான் கர்த்தரின் சித்தத்தின்படி அழைக்கப்பட்டவர்களை அவருடைய அன்பு ஈர்க்கிறது. உலக பிரகாரமாக வாழ்ந்து தங்கள் மனசாட்சியை சாகடித்துவிட்ட மக்களின் மீது அன்பு வேலை செய்யாது.
அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
மத் 19:21.
ஆனால் விசுவாசிகளாகய நாம் கர்த்தருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் வேளையிலே அன்பின் நாணயத்தை கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வோம், இந்த உலக செல்வத்தால் அல்ல.
ஜெபம்
பரலோக பிதாவே, நாங்கள் எப்போதும் பரலோக நாணயத்தைக் கொண்டு பரிவர்த்தனை செய்ய எங்கள் வாழ்வை மாற்றும். பரிசுத்த ஆவியின் வல்லமையை எங்களுக்குள் பொழிந்தருளும். துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுடைய ஆத்துமாவை கர்த்தருக்காக ஆதாயம் செய்ய கிருபைத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.
–Sol. Neelam Sharma
