தானியேல் – II 07-01-2022 – தேவ செய்தி

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

நீதி 23:2

இங்கே ஆட்சியாளர் ஒரு மனிதனுகு சிறந்த உணவைக் கொண்டு வருகிறார், ஆனால் உங்க்ளுக்கு முன்னால் இருப்பதைப் பற்றி கவனமாக இருங்கள். ஆட்சியாளரால் வழங்கப்படும் சிறந்த உணவு ஆட்சியாளரின் விருப்பத்தைச் செய்ய உங்களைத் தூண்டிவிடும். ஆகையால் உங்கள் இதயத்தை காத்துக்கொள்ளுங்கள், மாம்சத்தின் இச்சை உங்களை ஆள அனுமதிக்காதீர்கள், அதற்குப் பதிலாக அதை எதிர்த்து நில்லுங்கள்.

தானியல் (1-8) இல் ஒரு நல்ல உதாரணத்தை நாம் காணலாம். உணவு சோதனைகள் பற்றி கருத்தில் கொள்ளும்போது ராஜாவின் அரண்மனைக்கு சேவை செய்ய நல்ல புத்திசாலி மற்றும் முழு ஞானமும் அறிவும் கொண்ட நபர்களை நியமிக்க ராஜா விரும்பினான்.என்வே தானியலுக்கு அனைத்து வகையான சுவையான உணவுகளையும், மதுவையும் வழங்கினார். ஆனால் தானியலோ அதை நிராகரித்தார் மேலும் கர்த்த்டருடைய ஞானத்துடன் அவர் சாப்பிடுவதற்கு காய்கறிகளையும் குடிப்பதற்கு தண்ணீரையும் விரும்பினார் ஏனென்றால் கர்த்தரை கவுரவிக்க விரும்பினார் மேலும் தன்னைத்தானே தீட்டுப்படுத்த விரும்பவில்லை.

எனது குழந்தைபருவ நாட்களின் நினைவுகள்: எனது தந்தை கடல்சார் பயிற்றுவிப்பாளராக இருந்தவர்,  விசை படகு மற்றும் இழுவை பட்கு, அதாவது நீர் போக்குவரத்தைப் பற்றி கற்பித்தார். அந்நாட்களில் பட்கு குழாம் உறுப்பினர்கள் படிக்காததால், படகின் மாதிரியை உருவாக்கி நடைமுறையில் கற்றுக்கொடுத்து, குறைந்த பட்ச கல்வி கட்டணத்தை அதுவும் பணம் கட்டக் கூடியவர்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டார். வசதியில்லாதவர்களுக்கு தாராளமாக கற்பித்து வந்தார். ஒரு நாள் அவருடைய மாணவர்களில் ஒருவர் கரன்சி நோட்டுக் கட்டுகளுடன் வந்து அவருக்கு கொடுக்க முயன்றார்; ஆனால் என் தந்தை மறுத்து “நான் எனது கட்டணத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடினமான நேரங்களிலும் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அவர் கர்த்தருக்கு பயந்ததால் தனது இருதயம் கெட்டுப்போகாமல் பாதுகாத்தார்.

வேத வசனத்தின் படி;

  1. ரோம 13:14 – துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  2. 1கொரி 9:27 – மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
  3. சங் 101:3 – தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது
  4. ஒரு நல்ல மனிதன், மூடர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ள மாட்டான்.

எனவே நாம் நமது பசியை உணர்ந்து நம் பாவங்களை அறிந்து கொள்ள வேண்டும், அதனால் அந்த பசியின் மீது கத்தியை வைத்து வாய்ப்புகளை துண்டித்து அவற்றை மறுக்க முடியும். அதனால் வரக்கூடிய இழப்பு ஒரு கண்ணையோ அல்லது விரலையோ இழக்கும் அளவுக்கு வலியை கொடுத்தாலும் கூட அவைகளை மறுக்க வேண்டும்.

லூக் 9:23 – பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

எனவே நமது சிலுவையை சுமந்து கொண்டு அவர் பின் செல்ல வேண்டும், அவரது சீடராக இருக்க இது மிக முக்கியமாகும்.

Sol  Geeta B. Muslekar AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *