என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
(1கொரி 9:27).
2020 ஆம் ஆண்டு கர்த்தர் தேசங்களை சுதந்தரிக்கும் திட்டத்தை நமக்கு கொடுத்தார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள தொகுதிகளை சுதந்தரிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவில் நானும் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தேன். திட்டத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று அவைகளை கர்த்தருக்காக சுதந்தரிக்க வேண்டும். கர்த்தருடைய இந்த திட்டம் மிகவும் நேர்த்தியான ஒன்று ஆனால் அப்பொழுது நான் நோய்வாய் பட்டிருததால் பலவீனமாக இருந்தேன்.
கர்த்தருடைய திட்டத்தை செயல்படுத்த போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் மனதில் தோன்றியது. அதே நேரத்தில் முழந்தாள் படியிட்டு ஜெபித்தேன், பரிசுத்த ஆவியானவரிடம் உதவி கேட்டேன் நல்ல முடிவு எடுக்க. உடனடியாக கர்த்தருடைய குரலை கேட்டேன் மேலும் கர்த்தர் ஒரு அழைப்பை எனக்கு கொடுத்தார். “ஆந்திர மாநிலத்தின் தொகுதிகளை சுதந்தரிக்க நான் உன்னை தெரிந்து கொண்டேன்.” என்றார். இந்த வார்த்தைகளை கேட்டப்பிறகு என்னுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தில் ஒரு புது தெம்பு வந்தது.
அதற்குபின் என்னுடைய பையை எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டேன். கர்த்தருடைய அளவற்ற கிருபையினாலும், அவர் எங்களுக்கு கொடுத்த பலத்தாலும் திடப்பட்டு மூன்று நாட்களில் 19 தொகுதிகளை கர்த்தருக்காக சுதந்தரித்தோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
கொலோ 1:9 -…; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
மேலே உள்ள வேதவசனங்களில் உள்ள அப்போஸ்தலர் பவுலின் ஜெபம், கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திட்டத்தை செய்துமுடிக்க உதவுகிறது. கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நம்முடைய எண்ணங்களை கர்த்தருடைய சித்தத்தின் அறிவினால் நிறப்பும்படி கேட்போம். நாம் ஒவ்வொரு நற்செயலிலும் பலனை தருவோம், அவருடைய சித்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தால் பலப்படுத்தப்படுகிறோம்.
கர்த்தருடைய சித்தத்தைப் பற்றிய புரிதல் நம் ஆவியில் பெறும்போது மட்டுமே அதை நிறைவேற்ற நம் உடல் உடனடியாக செயல்படுவதை காணமுடியும்.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, ஆமேன்.
வீரர் வாணி சந்தோஷ்
