‘எங்கள் கைகளினாலே வேலை செய்து, பாடுபடுகிறோம்.”
1கொரி 4:12
என்னிடம் நல்ல வேலையிருந்தது நான் நன்றாக பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அதே வேளையில் நான் ஊழியம் செய்யவும் ஆசைப்பட்டேன். என்னுடைய வேலையை ராஜனாமா செய்துவிட்டு ஊழியம் செய்து கொண்டே அதன் மூலமாக வருவாயும் வரும் என்று நினைத்தேன்.
BFF – என்னும் “உருவாகு உருவாக்கு” என்னும் சீடராகும் பயிற்சியில் பங்குகொள்ளும் கிருபையை தேவன் எனக்கு கொடுத்தார். வேலைதளத்தில் இயேசுவை அறிவிக்கலாம் என்னும் ஒரு புதிய வழியை நான் கற்றுக்கொண்டேன். நாம் வேலை செய்யும் இடத்திலே வேலை செய்து கொண்டே நற்செய்தியை அறிவிப்பது பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். இப்போது என்னிடம் கைவசம் நல்ல தொழில் உள்ளது மேலும் நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். முடிந்தவரை தேவைபடுபவர்களுக்கு உதவி செய்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் சீடரான பவுலைப்பற்றி நாம் நன்கு அறிவோம், அவர் உண்மையான சீடர்களுக்கும் கர்த்தருடைய ராஜ்யத்தில் ஊழியத்திற்கும் முன்மாதிரியாக இருந்தார். பவுலினுடைய நடைமுறையான ஊழிய வாழ்வைப் பற்றி நாம் தியானிப்போம்.
பிலி 3:17 மற்றும் 1கொரி 11:1 இல் பவுல் அவருடைய மாதிரியைப் பின்பற்றுமாறு கேட்கிறார். பவுல் ஊழியத்தின் மூலம் தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்க முடியும் என்றாலும் அவர் ஒருபோதும் அதை பயன்படுத்த வில்லை. அதற்கு பதிலாக விசுவாசிகளை தங்களுடைய கைகளினால் உழைக்க ஊக்குவித்தார். அப்போஸ் 20:34-35, 1தெச 2:9, எபே 4:28 – மற்றவர்களுக்கு பாரமாக நாம் இருக்க கூடாது என்கிறார். நாம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் மற்றவர்களை ஆசீர்வதிக்க் அது ஏதுவாக இருக்கும்.
நற்செய்தி அறிவிக்கப்படுவதை அவர் ஒருபோதும் தடை செய்ய விரும்பவில்லை. 2கொரி 2:17, “அநேகரைப் போல நாங்கள் தேவ வசனத்தைக் கலப்பாய்ப் பேசவில்லை.” மேலும் 1திமோ 6:5 – “..தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிற்வர்களுமாய் இருக்கிற மனுஷர்கள்.” அநேக ஊழியகாரர்கள் இன்று சுயநலத்திற்காகவும், பண ஆதாயத்திற்காகவும்தான் ஊழியம் செய்கிறார்கள். நற்செய்தி அறிவிப்பதில் நாம் ஒருபோதும் சுயநலமாக இருக்க கூடாது.ஜெபித்தல், சுகமளித்தல், விடுதலை செய்தல், ஆலோசனை வழங்குதல் அல்லது பயிற்சி கொடுத்தல் போன்ற எந்த ஊழியத்திற்கும் நாம் பணம் வாங்க கூடாது. மத் 10:8 – இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்.” என்று பவுல் சொல்லுகிறார் – கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்கு பலன்.” 1கொரி 9:18).
விடாமுயற்சியின் உதாரணத்தை பவுல் நமக்கு முன் வைக்கிறார். 2 தெச 3:7-9 – “உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்..” நாம் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு பாரமாக இராதபடிக்கு நாம் நம்முடைய கைகளினால் வேலை செய்ய வேண்டும். முடிந்தவரை நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
அதனால்தான் அவர் தைரியமாக சொன்னார் 2தெச 3:10 –“ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.”
அன்பு வீரர்களே பவுலின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றுவோம்.
வீரர். கிரிஷ்மா க. பட்டேல்
