நாள்: 16-03-2023
இயேசு மார்த்தாவையும் மரியாவையும் சந்திக்கிறார்
லூக்கா 10 : 38 – 42
” பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து:
ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.”
மார்த்தா இயேசுவிடம் முறையிட்டபோது , அவருடைய பதில் அவள் உலக காரியங்களைக் குறித்து கவலைப்படுவதாகவும், அவள் இயேசுவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
மத்தேயு 6 : 25
” ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவர்கள் அல்லவா?
உங்களில் யாராவது கவலைப்படுவதால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மணி நேரத்தைக் கூட்ட முடியுமா? கவலையும் துன்பமும் நமக்கு உதவி செய்ய முடியாது . அவை நமது பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கும். நம்முடைய வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும் போது நம்முடைய இருதயத்துக்கு அது அமைதியை கொண்டுவரும்.
மரியா, தன்னுடைய வாழ்க்கையில் இயேசுவுக்கு முதலிடம் கொடுத்ததால் அவர் அவளை மதிப்புமிகுந்தவளாக கருதினார். இயேசுவின் பார்வையில் மரியாள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாள். அவள் எல்லாவற்றையும் அவருக்கு கொடுத்தாள். அவள் தேர்ந்தெடுத்ததை யாராலும் பறிக்க முடியாது.
ஜெபம்
பரலோகத் தந்தையே, உமது நம்பிக்கையுள்ள மகன்களாகவும் , மகள்களாகவும் எங்களைத் தெரிந்தெடுத்ததற்காக நன்றி. மரியா உமக்காக செய்த அதே விருப்பத்தை, எங்களுக்குத் தாரும் . உமது பாதத்தில் அமரவும் உம்முடைய பரலோக சத்தத்தைக் கேட்கவும் உமது கட்டளைகளுக்கு கீழ்படியவும் கிருபை தாரும். நன்றி அப்பா. உம்மை துதிக்கிறோம்.
Sol. ஹெலன் பெரைரா.
