நாள்: 24-02-2023
மாற்கு 9 : 50 " உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப் போனால் , அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள் ? உங்களுக்குள்ளே உப்பையுடையவர்களாயிருங்கள், ஒருவரோடு ஒருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார் "
வேதாகமத்தில் உப்பின் பங்கு பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு காலங்களில் எபிரேய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாகும். உப்பு என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது பழங்காலத்திலிருந்தே பல கலாச்சாரங்களில் சுவையூட்டியாகவும் , பாதுகாக்கும் பொருளாகவும் , கிருமிநாசினியாகவும் , சடங்கு சம்பிரதாயங்களின் ஒரு அங்கமாகவும் பரிமாற்றத்தின் அலகாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில் உப்பு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. பல்வேறு சூழல்களில் நிரந்தரம், விசுவாசம், ஆயுள், நம்பகத்தன்மை, பயன், மதிப்பு,மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றைக் குறிக்க உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.
உப்பு நிச்சயமாக அதன் உப்புத்தன்மையை இழக்க முடியாது. ஆனால் உப்பின் தூய்மை வேறுபடும். குறிப்பாக சவக்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு அசுத்தங்களால் அதிக அளவில் பாதிப்படைகிறது. உப்பில் பல தாதுக்கள் கலந்தால் அதன் சுவை நீர்த்துப் போகும். அது பயனற்றதாகிவிடும்.அதுபோலவே சீடர்களும் இதே வழியில் உலகின் மதிப்புகளான அதிகாரம், வல்லமை, பதவி போன்றவைகளை அனுமதிக்கும் போது , கர்த்தரின் விருப்பத்திற்கேற்ப அவைகளை அடக்கி சுத்திகரிக்கப்பட்ட உப்பாக மாறுகிற சவாலை மேற்கொள்கின்றனர்.
மற்றொரு வழியில் பார்த்தோமென்றால்
” உப்புத் தன்மை” என்பது
உப்பின் நோக்கமாகும். அது அந்த கனிமத்தினை வரையறுக்கும் பண்புகளாகும். இது மிக முக்கியமானதென்றால் எப்போதாவது பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படுமா? கர்த்தரின் ராஜ்யத்தில் இயேசுவின் படையணியின் தேவையை முக்கியமானதாகக் கருத வேண்டும். இரண்டாம் நிலையாகக் கருதக்கூடாது.
இதேபோல் இயேசு நம் அனைவரையும் இந்த உலகத்தின் உப்பாக மாற அழைக்கிறார்.
மத்தேயு 5 : 13” உப்பு நல்லது, ஆனால் உப்பு அதன் சாரமற்றுப் போனால் , எதனால் சாரமாக்கப்படும் ? வெளியே கொட்டப்படுவதற்கும் , மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.” நமது சமுதாயம், நமது நாடு, நமது கிராமம், நமது தொகுதிகள் மற்றும் பலவற்றை தூய்மைப்படுத்துவதில் நாம் அவருடைய முகவர்களாக இருக்க வேண்டும். உப்பைப்போல , நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மிகச் சிறந்த இயல்பை வெளிக் கொண்டு வர வேண்டும். இதன் முடிவு இயல்பாகவே மற்றவருடன் சமாதானமாக இருக்கச் செய்யும். இந்த உணர்வு பண்டைய காலத்தில் உப்பைப் பற்றிய ஒரு சபதத்தை நான் நினைக்க வைத்தது. இருவர் உப்பை பகிர்ந்து கொண்டால், அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் , ஒருவரையொருவர் பாதுகாக்கவும் , ஆதரவளிக்கவும் வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் இதேபோன்று உறுதிமொழியைக் கடைபிடிக்க வேண்டும்.
மாற்கு 9 : 33 – 35 இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து” நீங்கள் எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணியதாக கூறினர். அப்பொழுது இயேசு ” எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடையானவனும் , எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக் கடவன் என்று சொன்னார். “
மாற்கு 9 : 36 , 37 ,39 ,40 ல் சிறுபிள்ளையை அவர்கள் நடுவிலே நிறுத்தி, சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினால் ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்கிறான் என்றார்.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் ராஜ்யத்தில் தங்களுடைய நிலையைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் , அவர் ஆலயத்திற்கு புதிய விசுவாசிகள் வருவதைக் குறிப்பிடுகிறார். மேலும் அவர்கள் கீழ்படிவதற்கு தனிப்பட்ட முறையில் தியாகங்கள் செய்ய வேண்டும் என்கிறார்.
மத்தேயுவும், லூக்காவும் உப்பில்லாதவர்கள் தூக்கி எறியப்பட்டு மிதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள்.
மாற்கு 9 : 38 யோவான் இயேசுவைப் பார்த்து போதகரே நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம். அவன் நம்மைப் பின்பற்றாததால் அவனைத் தடுத்தோம் என்றான். இயேசு அதற்கு அவனைத் தடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். அதிகாரமும் அவர்களது நிலையும் அவரை எவ்வளவு தூரம் பின்பற்றுகிறார்கள் என்பதைக் குறிக்கும் அடையாளம் அல்ல என்று விளக்குகிறார். மற்றவர்களிடமிருந்து மிகச் சிறந்த ஒன்றை வெளிக்கொணர்வதும் அமைதியைக் கொண்டுவருவதும் ஒரு சிறந்த பரிசோதனை.
ஜெபம்.
பரலோகத் தந்தையே, நாங்கள் உப்பைப் போல இருப்பதன்மூலம் எங்களைச் சுற்றி இருப்பவர்களிடமுள்ள மிகச் சிறந்ததை வெளிக்கொண்டு வர முடியும். பதவி, அதிகாரம் எங்கிருந்தாலும் ஆசைப்படாமலிருக்க கர்த்தரே உதவி செய்வீராக. எங்கள் வாழ்க்கைப் பாதையில் உம்மை நெருக்கமாகப் பின்பற்றவும் உமக்கு கீழ்படிந்து நடக்கவும் உதவுவீராக. உமது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுத்த கருவியாக எங்களை ஆக்கும். உமது வழிகாட்டியாகவும் எஜமானராகவும் இருக்க ஜெபிக்கிறோம் . ஆமென்.
Sol. Dr. மோகன் பர்மர்.
