நாள்: 22-02-2023
ரோமர் 10 : 10 வசனம் சொல்கிறது ,
” நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை . ”
அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.
மேற்கூறிய வசனங்கள் , கர்த்தரை இருதயத்திலிருந்து விசுவாசிப்பவர்கள் ஒருபோதும் வெட்கப்படுதில்லை என்று சொல்கிறது. இதனை நாம் வேதாகமத்தின் சில வசனங்களின் வழியாக நிரூபிக்கலாம்.
நாம் யோசுவா புத்தகத்தை படிக்கும் போது இரண்டு இஸ்ரவேலர்கள் எரிக்கோ நகரத்திற்கு வேவு பார்க்க செல்கிறார்கள். விபசாரத் தொழில் புரியும் ராகாப் என்ற பெண் அவர்கள் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்தாள். இந்த இஸ்ரவேலர்கள் அவளுடைய வீட்டில் தங்குகிறார்கள்.
யோசுவா 2 : 9 – 11
” கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும் உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும் , உங்களைக் குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்து போனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது , கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினதையும் நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததைப்பற்றி கேள்விப்பட்டோம் . கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்து போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே, உயரே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். ”
இதில் இந்தப் பெண் ராகாப் , யெகோவா கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தை தன் இருதயத்தினால் வெளிப்படுத்தி வாயினால் அறிக்கையிடுகிறாள். கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்தார் என்று உறுதியாக நம்புவதாக அவள் சொல்லத் தொடங்கினாள். எரிக்கோவில் குடியிருக்கக்கூடிய மக்கள் அனைவரும் பயந்தார்கள். ஏனென்றால் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வரும்போது கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக செங்கடலின் தண்ணீரை வற்ற வைத்தார் என்று கேள்விப்பட்டிருந்தார்கள். மேலும் யோர்தான் ஆற்றினருகில் வாழ்ந்த இரண்டு எமோரிய ராஜாக்களை வீழ்த்தியதையும் அறிந்து எங்கள் இருதயம் உருகிற்று . உங்கள் தேவனாகிய கர்த்தர் உயர்ந்தவர் என்று அறிக்கையிடுகிறாள் . அவளுடைய இந்த அறிக்கையினால் கர்த்தர் இந்த சகோதரிக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கையை அளித்தார். அவர் ராகாப் மூலம் போவாஸைப் பெற்ற சாலமோனின் மனைவியாவார். மேலும் கர்த்தர் அவளை இயேசுகிறிஸ்துவின் வம்சத்தில் இணைத்தார். இந்த வழியில் கர்த்தர் அவளுடைய அவமானத்தை அழித்து அந்தப் பெண்ணுடைய பெற்றோர் , சகோதர , சகோதரிகள் எல்லாரையும் காப்பாற்றினார்.
இதுபோலவே , ரூத்தின் வாழ்க்கையிலும் அறிக்கையிடுதல் என்ற வார்த்தையைப் பார்க்கிறோம்.
ரூத் 1 : 16 ” நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து , என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.”
அவளுடைய விசுவாசம் மற்றும் அறிக்கையினால் மட்டுமே அவள் ஆசீர்வாதத்தைப் பெற்றாள் , திருமணத்தாலும் குழந்தைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டாள்.
புதிய ஏற்பாட்டிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு தன் கிராமத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு சமாரியப் பெண்ணைப் பார்க்கிறோம். எல்லா வேத வசனங்களும் நமக்குப் போதிப்பது , நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது அவமானம் மற்றும் இகழ்ச்சியான வாழ்விலிருந்து மரியாதையும் கண்ணியமும் பெறக்கூடிய ஆசீர்வாதமான வாழ்க்கை கிடைக்கும் என்பதாகும். கர்த்தர் நம் கவலைகளையெல்லாம் எடுத்துப்போட்டு அவருடைய சந்தோஷத்தினால் நம்மை நிரப்புவார்.
மத்தேயு : 5 : 8
” இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.”
மத்தேயு 6 : 33
” முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். “
நன்றி இரக்கம் நிறைந்த தந்தையே , உமது ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. எங்களை ஆசீர்வதியும்.எப்போதும் உமது நீதியைத் தேட எங்களுக்கு உதவும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. குஷி.
