நாள்: 26-11-2022
சங்கீதம் 127 : 1 ” கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் , அதைக் கட்டுகறவர்களின் பிரயாசை விருதா. “
எபிரேயர் 3 : 4 ” ஏனெனில் எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”

இன்று , பாதுகாப்பாக வாழ்வதற்கும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு அவசியம். மக்கள் எல்லோரும் தங்களுக்கு ஒரு வீடு கட்டுவதற்கு மற்ற எல்லா வழிகளையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணியாளர்கள் கட்டுமானப் பணியை செய்து வீட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் கர்த்தர் அவரே கட்டினால் மட்டுமே வீடு கட்டப்படும். நம்மை உண்டாக்கிய கர்த்தர் தான் நமது வீட்டின் திடமான அஸ்திவாரமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 24 : 3 – 4 ” வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு , விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவித பொருள்கள்களும் நிறைந்திருக்கும்.
எசாயா 65 : 21 ” வீடுகளைக் கட்டி , அவைகளில் குடியிருப்பார்கள் , திராட்சைத் தோட்டங்களை நாட்டி , அவைகளின் கனியைப் புசிப்பார்கள். “
யார் ஒருவர் முழு இருதயத்தோடு கர்த்தரை நம்புகிறார்களோ , கர்த்தரை மட்டுமே சார்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தன் சொந்த வீட்டைக் கட்டுவதற்குரிய ஞானத்தையும் , புரிதலையும் , அறிவையும் தந்து அவர்கள் அதில் வசிக்கும்படி ஆசீர்வதிப்பார். அவர்கள் தன் சொந்த உழைப்பின் பலனை உண்பார்கள்.
எசாயா 32 : 16 ” வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும். செழிப்பான வயல்வழியிலே நீதி தங்கித் தரிக்கும். “
1 சாமுவேல் 25 : 6 ” உமக்குச் சமாதானமும் , உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும் உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானம் உண்டாவதாக “
கர்த்தர் நமக்கு தரக்கூடிய வீடு அமைதி நிரம்பியதாகவும் எந்த பிரச்சனைகளும் இடையூறும் இல்லாததாக இருக்கும். அங்கே சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா இடத்திலும் இருக்கும். கர்த்தர் உங்கள் வீட்டை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பார். அவரே உங்கள் வீட்டை கவனித்து, பாதுகாப்பார். ஏனென்றால் நீங்கள் உங்கள் வீட்டை, உண்மையான வாழும் கர்த்தராகிய பாறை மீது உருவாக்கியிருக்கிறீர்கள். கர்த்தரே நமது உண்மையான வீடு. அங்கே அமைதி காணப்படும். மகிழ்வுடன் ஓய்வெடுக்க முடியும் .
ஜெபம்
பரலோகத் தந்தையே, கர்த்தரே கட்டுபவராக இருக்கும்படியான வீட்டைக் கொடுக்கும்படி எல்லா மக்களையும் ஆசீர்வதியும் . அங்கே அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் உம்மையே சேவிக்கவும் உம்மை மட்டுமே ஆராதிக்கவும் ஜெபிக்கிறேன். கர்த்தரிடமிருந்து வரக்கூடிய ஞானத்தினாலும் புரிதலினாலும் பாறையாகிய உமது மீது வீட்டைக் கட்டுவதற்கு எல்லோரையும் ஆசீர்வதிக்கும்படியாக
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.
ஆமென்.
Sol. ஹிமாக்ஷி
