தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-02-2023

கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.

பிலிப்பியர் 4 : 6 – 7

” நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் , எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொள்ளும். “

கவலை என்றால் என்ன?

அகராதியின்படி கவலை என்ற வார்த்தையின் பொருள் பயத்தையோ அல்லது கவலையையோ உணர்வது .குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றிய உணர்வு.

மருத்துவ அறிவியலின்படி கவலை நம்முடை மன ஆரோக்கியத்தை ஒழுங்கற்றதாகச் செய்கிறது. நம்முடைய நாளை கடினமாக்குகிறது. பதட்டம் ,பீதியுணர்வு , பயம் போன்ற உணர்வுகள் , வியர்த்தல் , விரைவான இதயத்துடிப்பு போன்றவை பயத்தின் அறிகுறிகளாகும். இதற்கு தியானம் மற்று அறிவுசார்ந்த ஆலோசனை  முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

கவலையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? இதைப் பற்றி நிறைய சொல்கிறது. அடிக்கடி இந்த வார்த்தை பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆங்கில வேதாகமத்தில் இந்த வார்த்தை 8  முறை பயன்படுத்தப்படுகிறது.

யாக்கோபு புத்தகத்தில் பயம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக பிரச்சனை, கடினம், துன்பம் , கவனம் போன்ற வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டன. கவலைக்கான குறிப்பிட்ட காரணங்கள் கணக்கிடப்படுவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால் வேதாகமத்திலிருந்து சில பொதுவான காரணங்களை மட்டும் பார்க்கலாம்.

ஆதியாகமம் 32  ம் அதிகாரத்தில் யாக்கோபின் கவலை  உடைக்கப்பட்ட உறவு , மற்றும் குற்ற உணர்வினால்  ஏற்படுகிறது.

1 சாமுவேல் 1 ம் அதிகாரத்தில் அன்னா தன்னுடைய நிறைவேறாத ஆசைகளினாலும் தன்னுடைய சக்களத்தியின் துன்புறுத்தலினாலும்  கவலை கொள்கிறாள்.

எஸ்தர்4 ம் அதிகாரத்தில்  எஸ்தர் ராணி தன்னுடைய மக்களுக்காக தன் உயிரை பணயம் வைக்க திட்டமிட்டதால் கவலை கொள்கிறாள்.

மரணபயம்  என்பது நாம் தெரிந்துகொள்ளாத பயத்திற்குரிய சாவியாகும்.

எல்லா கவலைகளும் பாவம் அல்ல.   1கொரிந்தியர் 7 : 32 ல் பவுல் ” நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாமென்று , கர்த்தருக்கு உரியவைகளுக்காக கவலைப்படுகிறான். ” திருமணமாகாத ஒருத்தன் கர்த்தரை பிரியப்படுத்துவதில்

” கவலைப்படுகிறான் ” , அதே சமயம் ஒரு திருமணமான மனிதன் தன் மனைவியை பிரியப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறான்.

இந்த விஷயத்தில் கவலை ஒரு பாவமான விஷயம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் , நாம் அனைவரும் நம் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் கவலையுடன் போராடுகிறோம். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும்  மிக சிறந்த ஒரு ஆலோசகரான பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

நாம் கவலையாக உணரும்போது அல்லது சில விஷயங்கள் நம்மை பிரச்சனைக்கு உள்ளாக்கும்போது , நம் இருதயங்களில் நிறைய கவலைகள் இருக்கும் போது மிகச் சிறந்த வழி பரிசுத்த ஆவியானவரை நோக்கி , நமது கவலைகள் தீரும் வரை ஜெபிப்பதாகும். அந்த நேரத்தில் கர்த்தருடைய பிரசன்னம் நமக்கு அமைதியை தரும். நம்முடைய வேண்டுதல்கள் கர்த்தருக்கு தெரிய வரும்.  கர்த்தரிடம் பேசுங்கள். என்ன தவறாக நடக்கிறது , எது நம்மை இந்த கவலையை  உணர வைக்கிறது , நம் ஆழ் மனதில் என்ன நினைக்கிறோம் என்று கர்த்தரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என்றால் தேவனை ஆராதிப்பதை தொடங்குங்கள் . கர்த்தருடைய பிரசன்னத்தை பெறுவீர்கள். அவருடைய ஆடையின் விழிம்பை தொடும் இடத்திற்குச் செல்லுங்கள். கவலையின் போர்வை விலகிவிடும். கர்த்தர் கவலையை நீக்கி அதற்கு பதிலாக அமைதியைத் தருவார்.

கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் உங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி அவைகளுக்காக நன்றி சொல்லுங்கள்.  அவை உங்களை உயர்த்தும்.

ஆமென்.

Sol. நீலிமா சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *