நாள்: 24-11-2022
” அப்பொழுது இயேசு , பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே “
லூக்கா 23 : 24

எபிரேயர் 10 : 7 ல் அவர் மேலும் சொன்னது ” தேவனே உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன். புத்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார் “
இந்த வழியில் இயேசு இரண்டாவதை நிறுவுவதற்காக முதலாவதை தொலைக்கிறார்.
முதலில் சொன்னது என்ன? ஆதியாகமம் புத்தகத்தில் கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினார். சில காலத்திற்குப் பிறகு அவர்களுடைய கீழ்படியாமையினால் , அவர்களை உண்டாக்கின தேவன் , தெய்வீக பிரசன்னத்திலிருந்து அவர்களை பிரித்தார் என்பதை அறிகிறோம். மேலும் ஆதாம், கர்த்தருடைய பிரசன்னத்தில் நிலைத்திருந்ததால் கிடைத்த கர்த்தரின் தெய்வீகத் தன்மையை விட்டு பிரிக்கப்பட்டார் . நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது மனித குலத்தை மன்னிக்கும் தெய்வீகத் தன்மையைப் பார்க்கலாம். ஆதாமும் ஏவாளும் எப்போது நன்மை தீமை அறியக்கூடிய பழத்தை உண்டார்களோ , அவர்களுடைய நடத்தை ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் அளவிற்கு சென்றது.
அவர்கள் தங்களுடைய தவறினை ஒத்துக் கொள்ள தயாரில்லை. மேலும் கர்த்தருடைய தெய்வீக மன்னிப்பு அவர்களிடத்தில் காணப்படவேயில்லை. கர்த்தர் இந்த சுயநலத்தையும் , மனித குலத்தின் உடல்ரீதியான நடத்தைகளையும் கவனித்தார் . இது அவர்களது வரவிருக்கும் தலைமுறைகளில் தொடர்ந்தது . ஆனால் கர்த்தர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த , மனித குலத்தின் தெய்வீக தன்மையை திரும்பவும் கொண்டு வர முடியாமல் , அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும்படி வைத்தார்.
காயீன் , ஆபேலிலிருந்து இன்று வரை , தன்னுடைய படைப்புகளிடமிருந்து எதிர்பார்த்த இத்தகைய தெய்வீகத்தன்மையை யாரிடமிருந்தும் பெறுவது கடினமாகவே இருந்தது. நோவா நீதியுள்ள மனிதன். ஆனால் ஒரு சிறிய பிரச்சனைக்காக தன்னுடைய மகனை மன்னிக்கத் தவறி அவனுக்கு சாபமிட்டார். நோவா மதுபானத்தினால் நிர்வாணமாக கிடந்தார். அவருடைய மகன் காம் அந்த நிலையில் தன்னை பார்த்ததை விரும்பவில்லை. அதன் விளைவாக அவனை மன்னிப்பதற்கு பதிலாக சாபமிட்டார்.
இஸ்ரவேல் மக்கள்
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களை யாராலும் சாபம் கொடுக்க முடியாது என்பதை பாலாக்கின் விஷயத்தில் நாம் காணலாம். பாலாக் ராஜா பிலயாம் என்ற தீர்க்கத்தரிசியை அழைத்து , என்னுடைய ராஜ்யத்தின் வழியாக கடந்து செல்கின்ற இஸ்ரவேலர்களை சபிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் கர்த்தர் அவ்வாறு செய்யக்கூடாது என்று பிலயாமை எச்சரித்தார்.
எண்ணாகமம் 22 : 12 ” அதற்கு தேவன் பிலயாமை நோக்கி நீ அவர்களோடே போக வேண்டாம் , அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் “. அதன் விளைவாக பிலயாம் தீர்க்கத்தரிசி இஸ்ரவேலர்களை சபிக்க மறுத்தார். இதன் அர்த்தம் கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எல்லாம் வல்ல கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். யாரெல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்களோ அவர்களுக்கு தண்டனை இல்லை, அவர்கள் முழுவதுமாக மன்னிக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசு தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்காகவும், அதாவது நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்றும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்றும் பிதாவாகிய தந்தையிடம் மன்றாடுகிறார் . போதகர்கள் நமக்கு எதிராக நின்றாலும் கூட நம்முடைய கர்த்தர் ,அவருடைய பிள்ளைகளுக்கு சாதகமாக இருப்பார்.
இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் பழைய உடன்படிக்கையை நிராகரித்து தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்முடைய எல்லா சாபங்களையும் தானே எடுத்துக் கொண்டார்.
மத்தேயு 26 : 39 சொல்கிறது” சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து : என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியை ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.
தெய்வீக அன்பை, இரக்கத்தை , மன்னிப்பை நமக்கு காண்பித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமது ஆசீர்வாதம்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ,இந்த பூமியில் நாங்கள் இருக்கின்ற ஒவ்வொரு நொடியையும் உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தோடு செலவழிக்க கிருபை தாரும். நீர் உம்மையே தியாகம் செய்து, எங்கள் தவறுகளை மன்னித்து நித்திய வாழ்விற்கு எங்களை ஆசீர்வதித்தீர். எங்களிடம் அத்துமீறுகின்ற ஒவ்வொரு நபரையும் நாங்கள் மன்னிக்கும்படி உதவி செய்ய
இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம்.
ஆமென்.
Sol. குஷி
