நாள்: 05-06-2022 – தேவ செய்தி
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; …..தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத் 6:24.

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் சிதறாத(முழு) கவனம் தேவை. உங்களுடைய வேலை, படிப்பு, தொழில் அல்லது வாழ்வில் நீங்கள் செய்யகூடிய எதுவாக இருந்தாலும் பிரிக்கப்படாத கவனம் தேவை. உணவு சமைக்கும்போது கூட நம்முடைய கவனம் வேறு எங்காவது இருந்தால் உணவு சுவையாக இருக்காது. இயேசு நமக்கு இங்கு இதைத்தான் சொல்லுகிறார்.
ஒருவன் உலகப்பொருள் மற்றும் கர்த்தருக்கு ஒன்றாக ஊழியம் செய்ய முடியாது. ஒருவருடைய விசுவாசம் கர்த்தர் மேல் அல்லாமல் செல்வத்தின் மீது வைப்பதைப் பற்றிதான் இயேசு சொல்லுகிறார். உலகப் பொருளை சம்பாதிப்பது தவறு இல்லை ஆனால் உலக பொருட்கள் மீதும் கர்த்தர் மீதும் ஒரே நேரத்தில் நம்பிக்கை வைப்பதுதான் தவறு. ‘ஊழியம் செய்வது’ என்ற வார்த்தைதான் மிக முக்கியமானது.
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
1 திமோ 6:17.
அடுத்த வசனத்தில் பவுல் சொல்லுகிறார், தாராளமாகவும், மனமுவந்தும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; ..கவலைப்படாதிருங்கள்,
மத் 6:25.
எதிர்காலத்தைப்பற்றிய கவலை, சிந்தனை நம்மை பணத்தின் மீது சார்ந்திருக்கச் செய்கிறது, கர்த்தர் நமக்களித்த வாக்குறுதிகளை நம்பாமலும், கர்த்தர் நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் இழந்து விடுகிறோம்.
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்,
மத் 6:21
மக்களுக்கு நல் வழி காட்டுவது, நற்செய்தியை அறிவிப்பது அல்லது வேதத்தை ஆழ்ந்து தியானிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். உலக செல்வம், பொருட்செல்வம் நம்முடைய மனதில் வரக்கூடாது, நம்முடைய எண்ணம் எல்லாம் கர்த்தருடைய காரியத்தின் மீதுதான் இருக்க வேண்டும். அநேக சபை தலைவர்கள் ஊழியகாரர்கள் இன்று கர்த்தருக்கு ஊழியம் செய்வதாக சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய கவனம் எல்லாம் பொருட்செல்வங்களை சேர்ப்பது பற்றித்தான் இருக்கிறது. யாத் 20:3 – என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். நம்முடைய சிருஷ்டிகராகிய தேவனுக்கு நாம் ஊழியம் செய்யும் போது பணத்தை தேவனாக்க கூடாது. சாத்தான் தன்னுடைய சாதுர்யமான வழிகளால் கர்த்தருடைய பிள்ளைகளை செல்வத்தின் மீதும் பொருட்களின் மீதும் நம்பிக்கை வைக்கத் தூண்டுகிறான்.
சாட்சி
நான் கர்த்தருக்குள் வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ஐதராபாத் சென்று சபை ஆராதனையில் பங்கு கொள்ளவும், கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கவும் செல்வது வழக்கம். அங்கு இருப்பவர்கள் என்னைப்பார்த்து சொல்வது வழக்கம், நான் ஒவ்வொரு மாதமும் எப்படி வருகிறேன், வருவதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறேன் என கேட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நான் வேலையை விட்டேன், கர்த்தருக்காக காத்திராமல் எல்லாவற்றையும் இழந்தேன்.என்னுடைய தவறை உணர்ந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டேன் மேலும் கர்த்தர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தேன். 6 மாதத்திற்குப் பின் கர்த்தர் எனக்கு கதவுகளை திறந்தார். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை உலகத்தாரின் இரக்கத்திற்கு விட விரும்பவில்லை மாறாக, இவ்வுலகில் நாம் இருக்கும்போது முழு உள்ளத்தோடும் ஆன்மாவோடும் கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தர் எனக்கு சொல்லிகொடுத்த இந்த பாடத்திற்காக நன்றி.
ஜெபம்
கர்த்தாவே, நாங்கள் செல்வத்திற்கு அடிமைகளாக வாழாமல் எங்களிடம் இருக்கும் எல்லாவற்றாலும் உமக்கு ஊழியம் செய்ய கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
Sol.Neha
