தானியேல் – II

நாள் 14:05-2022 – தேவ செய்தி

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு:நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

லூக் 17:10

நாம் அனைவரும் ஊழியகாரராக இருந்திருக்கலாம் அல்லது ஊழியகாரரை நியமித்த அனுபவம் நமக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவன் தான் ஊழியகாரன். ஊழிய காரனுக்கு போதிய சுதந்திரம் கிடையாது, மிக குறைந்த அளவே அவன் தன் சுதந்திரத்தை பயன்படுத்த முடியும். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போல மற்றவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்ய வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணத்தின் மூலமாக இயேசு சொல்லுகிறார், ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஊழியகாரன் என்று, மேலும் அந்த ஊழியகாரனுக்கு யாரையும், எப்போதும் ஏன் என்று கேட்கும் அதிகாரம் இல்லை மாறாக தன்னுடைய எஜமானன் சொல்வதை தாழ்மையுடன் கேட்டு அதற்கு கீழ்படிய வேண்டும். தன்னுடைய கூலியை தவிற வேறு எதன் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் கர்த்தருடைய ஊழியத்தில், ஒரு விசுவாசியானவன் தான் பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி பேய்களை ஓட்ட வேண்டும் நோய்களை சுகமாக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரத்தை தனக்காக எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது.

ஊழியத்திற்கு பிறகு மிகவும் களைப்பாக வீடு திரும்பும் போது நிறை பொருட்கள் அலங்கோலமாக வைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

அநேக அசுத்த ஆவிகளை விரட்டியப்பின் நாம் வீடுவருவோம், வீட்டிலும் சிலர் அசுத்த ஆவி பிடித்தவர்கள் போல செயல்பட்டால் அவர்கள் மீது கோபப் பட நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு ஊழியகாரனின் கடமை எல்லாம்  தன் எஜமானனுக்கு சேவை, சேவை, சேவை மட்டுமே.

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பால் இயேசுகிறிஸ்து நம் அனைவரையும் பிதாவின் உண்மையான பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். ஆனால் நம்முடைய எஜமானனுக்கு சேவை செய்யும் தாழ்மையான மனம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.  ஒரு எஜமானன் மற்றும் சேவகன் மூலமாக இயேசு நமக்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியகாரன் அவருடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றியபின் நாம் ஒரு அபிரயோஜனமான ஊழியகாரர் என்று சொல்ல வேண்டும். உங்களுடைய அடிப்படை தேவையான உணவும் நீர், இருப்பிடம் போன்றவற்றிற்கும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சேவகர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று வாசிக்கின்றோம்.

ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

மாற்கு 13:34

அந்த எஜமானனுடைய வீட்டை கட்டி காப்பதில் இந்த அதிகாரத்தை அவன் பயன்படுத்த வேண்டும். ஆனால் எஜமானனிடம் நம்முடைய நடத்தை எப்பொழுதுமே லூக் 17:10 போல இருக்க வேண்டும்

.

ஒரு முறை ஜெபிப்பதற்காக ஒரு அரசு ஊழியரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த ஓட்டுநர் தனது எஜமானன் மீது கொண்டிருந்த மதிப்பு மரியாதையை கண்டு நான் வியந்தேன். காரின் என் ஜினை நிறுத்திவிட்டு காரின் கதவை திறக்க வந்த விதம், நாங்கள் அவருடைய விருந்தினராக இருந்ததால் அவர் எங்களுக்கும் அவ்வாறே செய்தார். நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த, நம்முடைய வாழ்க்கையையும் கொடுத்த எல்லாம்வல்ல தேவனுக்கு முன்பாக நாம் எப்படி தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த வாழ்வில் நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் நமக்கு கொடுத்தவை. நம்முடைய சுவாச காற்றைகூட அவர் எப்பொழுதும் நிறுத்திவிடலாம்.

ஜெபம்

பரலோக பிதாவே, உமக்கு சேவை செய்வதில் பணிவுடனும் மனத்தாழ்மையுடனும் இருக்க எங்களுக்கு கிருபைதாரும். வருடங்கள் கடக்கும்போதும், ஊழியத்தில் அனுபவம் பெருகும்போது உம்மீதுள்ள பயபக்தியை ஒருபோதும் நாங்கள் இழந்துவிடக்கூடாது. எப்போதும் “பிரயோஜனமற்ற வேலையாட்களாக” நாங்கள் இருப்போம்.

SR. ANGELICA AOJ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *