தானியேல் – II

நாள் 26-04-2022 – தேவ செய்தி

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

-லூக் 14:1

எல்லோரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

பரிசேயரில் தலைவனாகிய ஒருவனிடமிருந்து இயேசுவுக்கு வந்த அழைப்பைப் பற்றி தியானிப்போம். மக்கள் மீது சுமத்தப்பட்ட யூத மதத்தின் தேவையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பலவற்றை ஒழிக்கவே இயேசு வந்திருக்கிறார் என்று பரிசேயர்கள் ஏற்கனவே ஒரு கருத்தை உருவாக்கை வைத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று இயேசு யோசித்திருப்பார். நானும் கூட சபைகளில் அல்லது குறிப்பிட்ட பிரிவினருடன் பயிற்ச்சி அளிப்பதற்காவோ அல்லது செய்தி கொடுப்பதற்காகவோ அழைக்கப்படும்போது அதை ஏற்கலாமா வேண்டாமா என்பதை யோசித்துதான் முடிவெடுப்பேன்.

ஏற்கனவே அவர்களுடன் கசப்பான அனுபவம் இருப்பதனால் இயேசு அழைப்பை நிராகரித்திருக்கலாம். அவர் எங்கு எப்போது சென்றாலும், அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக ஒரு கூட்டத்தை இயேசுவிடம் பரிசேயர்கள் அனுப்புவார்கள்.

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

-லூக் 6:7

இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

லூக் 11:53-54.

இயேசுவை ஆபத்தில் தள்ளுவதற்கு ஒற்றர்களைகூட அனுப்பினார்கள்

அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

-லூக் 20:20.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அழைப்பை ஏற்கிறார்.  இங்கு கூட அவரை கவனமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசு வேண்டுமென்றே தைரியமாக உண்மையை போதிப்பதற்கான சூழ்நிலைகளைத் தேடி உருவாக்கினார்.

பவுல் சொல்லுகிறார்,

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

2திமோ  4:2.

கொலோ 1:28-29, 1திமோ 2:11-12, 1தெச 5:14, தீத்து 1:13, தீத்து 2:15, எபி 13:22, வெளி 3:19

  1. இயேசு முழு பொறுமையோடு போதிக்கவும், கண்டிக்கவும், புத்திமதி சொல்லவும், திருத்தவும் வாய்ப்புகளைத் தேடினார்.
  2. அவரை அவமானப் படுத்துவார்கள், அவரில் குற்றம் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிந்து அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
  3. எங்கு நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதோ அங்கேயும் நற்செய்தியை அறிவிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
  4. நற்செய்தியை அறிவிப்பதற்கான சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் உருவாக தயாராக இருக்க வேண்டும்.
  5. நமக்கு நன்றாக தெரிந்த இடங்களில் கூட எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

ஜெபம்

பரலோக பிதாவே, எதிலும் கோபம் கொள்ளாமல், சுவிசேஷத்திற்காக எதிரான சூழ்நிலைகளை சந்திக்கவும், எதிரிகளின் மத்தியில் கூட நற்செய்தியை பிரசங்கிக்க இயேசுவைப் போல இருப்பதற்கு எங்களுக்கு தைரியத்தையும் மன வலிமையையும் தாரும்,

ஆமேன்.

–Sr. Angelica AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *