தானியேல் – II
நாள்:19-04-2022 – தேவ செய்தி

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்;

அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது,

யோசு 5:9.


அடிமைத்தனம் ஒரு நிந்தையே.

இன்று அநேக மக்கள் நிந்தையில் இருக்கின்றார்கள்.


ஏழ்மை ஒரு நிந்தை
வேலை இல்லாமை ஒரு நிந்தை
ஒற்றுமையில்லாமல் இருப்பது நிந்தை
திருமணம் பிளவுபட்டால் அதுவும் நிந்தை
குழந்தைகளின் நடத்தை தவறாக இருந்தால் அது நிந்தை
விவாகரத்து ஒரு நிந்தை
பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது நிந்தை.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது நிந்தை
சரியான வாழ்க்கை துணை கிடைக்காமல் இருப்பது நிந்தை
பொருளாதார சிக்கனம் நிந்தை
கடன் வாங்குதல் நிந்தை

இவை அனைத்தும் பல வகையான நிந்தைகள். இவை அனைத்தும் ஆதாமின் பாவத்தின் பலனே. இந்த நிந்தைகள் அனைத்தும் ஒரு மனிதனை அழுத்துகின்றன, அவனை எழ விடாமல், அதிகாரத்தை கையில் எடுத்து தன் வாழ்க்கையை, சபையை, தொகுதியை, மாநிலத்தை, தேசத்தை ஆளவிடாமல் அவனை அமுக்குகின்றன.

உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழுத்தும் காரியங்களை பட்டியலிடமுடியுமா?

மத் 11:28-29
 இயேசு சொல்கிறார், - 

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.


அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.


ஒருவர் போராட்டத்தின் கீழ் இருந்தால்

சரீரத்தில் (நோயோடு)

ஆத்துமா (நிராகரிப்பு, தனிமை, கசப்பு, பகை, பொறாமை போன்றவை)

ஆவி (பாவத்தில்)


இந்த சுமைகளை அகற்றும்வரை அல்லது உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்வரை நாடுகளையும், மாநிலங்களையும், ஆத்துமாக்களையும் வெல்வதைப் பற்றி நினைக்க கூட முடியாது.

எனவே நாம் அனைத்து நிந்தைகளிலும் இருந்து வெளியேறுவோம்.
எந்த அடிமைதனத்தையும் அனுமதியாமல் இருப்போம்.
உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கின்றதா?
உங்களுக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்.
(உங்கள் தொடர்பு எண்ணைத் தரவும்)
நோய்வாய் பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்கு சுகம் உண்டு. (தொடர்பு எண்ணை தரவும்)
நீங்கள் வேறு எந்த சுமைகளில் இருக்கிறீர்களா?
அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த நிந்தைகளில் இருந்து வெளியேறுவோம், கர்த்தருக்காக ஊழியம் செய்வோம்.


SR. ANGELICA AOJ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *