நாள் – 05-04-2022 – தேவ செய்தி
யோவா 1:1 –கிறிஸ்து இயேசுதான் கர்த்தர் என்று வேதம் முழுமையாக சொல்லுகிறது.

கொலோ 2:9 – ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
ரோம 9:5 – பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மையை முற்றிலும் தெளிவுபடுத்துவதற்காக, கிறிஸ்து இயேசு செய்த ஏழு இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களை யோவான் இந்த பதிவில் சேர்த்துள்ளார். அவர் தேவகுமாரன் என்பதற்கும், அவருடைய அதிகாரம் மற்றும் வல்லமைக்கும் சான்றாகும். இந்த ஏழு அடையாளங்களும் இணையற்றவை.
- தண்ணீரை திராட்சை ரசமாக்குதல்
- ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனுடைய வியாதியை குணமாக்குதல்.
- ஊனமுற்றவனை குணமாக்குதல்
- 5000 மக்களை போஷித்தது
- தண்ணீர்மேல் நடந்தது
- குருடனுக்கு பார்வை அளித்தது.
- மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது.
இயேசு தேவனுடைய தூதர், மனித உருஎடுத்த தெய்வம்,மேலும் தீர்க்கதரிசி மட்டும் அல்ல மாறாக அவர் கர்த்தர், குமாரன் மற்றும் பரிபூரண தேவன்.
யோவா 10:30 -நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவா 8:12 – மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து இயேசு தேவன், அவர் மனிதனாக ஒரு குறுகிய காலத்திற்கு இவ்வுலகில் வந்தார் ஆனால் அவர் நித்தியமானவர். அவரில் விசுவாசம் வைப்பதால் நமக்கு கிடைப்பது நித்திய வாழ்வு.
நற்செய்திகளில் தேவன் சொன்னது, தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் சொல்லப்பட்டது இன்று அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளி மற்றும் உருவாகு உருவாக்கு ஊழியங்களின் மூலம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
நாம் வயதாகி மரித்துபோவோம் ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது வைத்திருக்கும் விசுவாச்த்தின் மூலமாக மனித ஆத்துமாக்களுக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.

எனவே, தன்னுடைய உயிர்தெழுதலுக்கு முன்பே இயேசு தேவன் என்றும் தனது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொலோ 2:9 -ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
ஜெபம்:
பிதாவாகிய எங்கள் தேவனே, நீர் விரும்புகிறது போல உம்மை ஆவியில் ஆராதிக்க எங்களை உம்முடைய ஆன்மீக அடிமையாக்கும். நித்திய வாழ்விற்கான ஓட்டத்தில் எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே உம்முடைய தெய்வீக நடத்தைகளையும், வல்லமையையும் மக்கள் வாழ்வில் வெளிப்படுத்தவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், அபிஷேகத்தால் எங்களை நிறப்பும், ஆமேன்.
Sol.Kamalesh AOJ
