நாள்: 27-03-2022 – தேவ செய்தி
யோவான் 1:9 - உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
மின்சாரம் இல்லாதபோது, ஒருவர் இருளில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு நாள் சூரியன் கூட தன்னுடைய ஒளியை இழந்துவிடும். நம்முடைய வாழ்வின் முடிவில்லா ஒளி இயேசு கிறிஸ்து மட்டுமே. எங்கே இயேசு இருக்கிறாரோ அங்கு இருள் இல்லை.
யோவா 12:46 - என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
இயேசு உங்கள் வாழ்வில் வரும்போது, வறுமை, நோய், முறிவு, சாபம், எந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையும், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகள் அனைத்தும் உங்கள் வாழ்விலிருந்து சீராக வெளியேற்றப்படும்.
1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாலா என்ற பெயர் கொண்ட பையன் பிறந்தான். வருமையின் காரணமாக அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுடைய சித்தியுடன் பெற்றோர்கள் விட்டுவிட்டார்கள். அவனுடைய பெற்றோர்கள் மற்ற இரண்டு குழந்தைகளுடன் வேலைத்தேடி தில்லிக்குச் சென்றனர். பாலா ஆடுமாடுகளை மேய்த்துவந்தான், தினமும் மதிய உணவிற்காக மட்டும்தான் பள்ளிக்குச் சென்றான். அழுகையும் துன்பமும் நிறைந்த குழந்தைபருவத்தைதான் அவன் அனுபவித்து வந்தான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனும் தில்லி சென்றார், அங்கே குப்பையை பொறுக்குவதில் அவனுடைய பெற்றோருக்கு உதவி செய்தான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய வாழ்வில் வந்தார், அவனுடைய உடைந்து போன, நம்பிக்கையில்லாத வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். அவ்ர் இப்போது ஆராதனைபாடல்களை எழுதக்கூடியவராகவும், பாஸ்டராகவும் மாறி கர்த்தருடைய ஊழியமாகிய உடைந்த உள்ளங்களை மாற்றக்கூடிய ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறார்,
எலோஹிம் இந்த உருவமற்ற, வெற்றிடமான மற்றும் இருண்ட பூமியில் அடியெடுத்து வைத்தபோது இந்த உருவமற்ற பூமியை ஒரு அழகான வாழும் இடமாக மாற்றினார். இந்த பூமியில் உயிர்கள் தோன்றி பலனளிக்கத் தொடங்கியுள்ளன.
அதே தேவன் உங்கள் நம்பிக்கையற்ற இருண்ட சூழ்நிலையையும் மாற்றி ஒளியை கொடுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக அவரால் மாற்ற முடியும். நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் உங்கள் நம்பிக்கையில்லா சூழ்நிலையை மாற்ற அவர் போதுமானவர். உங்கள் குடும்பம், நண்பர்கள், மற்றும் பிறருக்கும் கூட ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
ஜெபம்
அன்பு பிதாவே, என்னுடைய வாழ்வை உம்கையில் ஒப்படைக்கிறேன். நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே ஏற்றுக்கொள்ளும், என்னில் கிரியை செய்யும், அப்போது உம்முடைய ஒளியை மற்றவர்களுக்கு முன் பிரகாசிப்பேன். நம்பிக்கை இழந்த மக்களுக்கு மத்தியில் உம்முடைய அன்பின் வாசனையை பரப்புவேன். மேலும் அவர்களை உம்முடைய ராஜ்யத்தி கொண்டு சேர்ப்பேன். ஆமேன்.
Sol.ஸ்டெல்லா தாஸ் AOJ
