நாள் – 21-03-2022 – தேவ செய்தி
பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்;
லூக் 21:16
நாம் ஒரு கடினமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வசனம் வரவிருக்கும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் உள்ளேயும், வெளியேயும் நம்மைத் தாக்கக்கூடிய பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நாம் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியது. வருகின்ற காலங்களில் நம்முடைய உறவினர்கள் மூலமாக கூட நாம் காட்டிக்கொடுக்கப் படலாம், கர்த்தரைப் பற்றி போதனை செய்ய வருபவர்கள் கூட நம்மை ஏமாற்றலாம் அல்லது கர்த்தர் பெயரைச் சொல்லி நம்முடைய கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்க்கலாம் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனவே விழிப்பாய் இருப்பதும், தேவனை பற்றிக்கொள்வதும், ஜெபிப்பதும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும் மிக அவசியமாகும்.
இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, நாம் பார்த்துக்கொண்டு இருக்கிற ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஒரு முடிவே இல்லை என்று தோன்றுகிறது அல்லது போரை முடிவுக்கு கொண்டுவர எந்த மத்தியஸ்தர்களாலும் ஈடுபட முடியவில்லை.
அநேகா நாடுகளில் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் நம்முடைய அண்டை நாடான இலங்கை போல பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியையும் நாம் காண்கிறோம். இந்த காலகட்டத்தில் நமக்கு என்ன நடக்கும் என்ற கவலை நம் அனைவரையும் வாட்டலாம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் எதை குறித்தும் கவலைப்பட தேவை இல்லை, அவருடைய வார்த்தையை கைகொண்டு, அவரில் விசுவாசம் வைப்பது போதுமானது. அவர் நமக்கு அடைக்கலமாகவும், கோட்டையாகவும் இருப்பதால், அவர் மீது நம்பிக்கை வைப்பதும்,அவரில் விசுவாசம் கொள்வதும் நம்மை எந்த ஆபத்திலும் தள்ளாது.
சங் 91:2 -நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
இயேசு கிறிஸ்துவின் பாதையில் நாம் நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அவர்தான் நம்மை வழிநடத்துகிறார், நம்மைச் சுமக்கிறார், என்ற நம்பிக்கை, வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் சந்திக்க உதவி செய்யும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வசங்களை மீண்டும் மீண்டும் அறிக்கையிட்டது, வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை கடந்துச் செல்ல உதவியது, மேலும் இந்த பிரச்சனைகளை நான் எப்படி தைரியமாக மேற்கொண்டேன் என்று மற்றவர்களை வியக்க வைத்ததுமவர் நமக்கு அடைக்கலமும் கோட்டையாகவும் இருப்பதால், அவரில் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பது எந்த விதமான ஆபத்திலும் தள்ளாது.
சங் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
தேவன் மீது நம்பிக்கை வைப்பது, அவர் நம்மை வழிநடத்துவார் என்ற அதீத நம்பிக்கையுடன் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பது, குடும்பத்துக்குள்ளும் வெளியிலிருந்தும் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவும். நம்மைப் படைத்தவர் நம்மை பாதுகாப்பார், அவருடைய பாதையில் நம்மை வழிநடத்துவார்.
நீதி 3:5-6
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
உலகமே உனக்கு எதிராக நின்றாலும், கர்த்தர் உன்னோடிருந்தால், எதுவுமே உங்களை சேதப்படுத்தாது.
Sol. Geraldine Viji Cruz Xavio
