தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்
– நீதி 29:18
இஸ்ரவேலின் ஞானமுள்ள ராஜாவாகிய சாலமோன் தன்னுடைய நீதிமொழிகள் புத்தகத்தில் இவ்வாறாக எழுதியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக இந்த வசனத்தை மக்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள், ஏனென்றால் நமது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் தேசிய வாழ்க்கையில் மிக முக்கியமாக தேவையான தொலை நோக்கு பார்வையை இது குறிப்பிடுகிறது.
எங்கு எதிர்காலத்தை குறித்த தொலை நோக்கு பார்வை இல்லையோ அங்கு மக்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுபாடு போன்றவைகளை இழந்துவிடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
எதிர்காலத்தைப்பற்றிய கனவுதான் ஒரு தனிபட்ட மற்றும் பெருநிறுவன ஒழுக்கமாகும்.
பெரும்பாலான மனிதர்களுக்கு 20/20 பார்வை திறன் இருக்கும்போது, கழுகளுக்கு வியக்க வைக்கும் 20/5 பார்வைதிறனுடன் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். அதாவது 5 அடிதூரத்தில் நமக்கு கூர்மையாகவும் தெளிவாகவும் தெரிவது 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு கழுகுக்கும் தெளிவாகத் தெரியும். சிறந்த பார்வை திறன் கொண்டவர்களை நாம் “கழுகு கண்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.
நம்முடைய தொலைநோக்கு பார்வை(இலக்கு) நம்முடைய கண்களால் காணக்கூடிய வரம்புகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது மேலும் நம்முடைய இதயம் உணரும் சுதந்திரத்திற்குள் நுழைய நம்மை அனுமதிக்கிறது.
கண்ணுக்கு தெரியாததையும், அறியாததையும் சாத்தியமாக்குவது இந்த தொலைநோக்கு பார்வைதான்.

தொலைநோக்கு பார்வை
என்பது தைரியத்தின் அடித்தளம் மற்றும் விடாமுயற்சியின் எரிபொருளாகும்.
ரைட் சகோதரர்களை விமானத்தை கண்டுபிடிக்க தூண்டியது விமானத்தைப் பற்றிய அவர்களது தொலைநோக்கு பார்வை. ஒளி விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்குன் ஒளியைப் பற்றிய தொலை நோக்குபார்வைதான் உதவியது. டெஸ்க்டாப் கணணியை கண்டுபித்த ஸ்டீபன் ஜாப்ஸைத் தூண்டியது அதைப்பற்றிய அவரது தொலை நோக்கு பார்வைதான். எல்லா மக்களுக்கும் பயந்தர கூடிய மென்பொருளை வழங்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வைதான் மைக்ரோசாப்ட் உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க மற்றும் கண்டுபிடிக்க பில்கேட்ஸை ஊக்கப்படுத்தியது.
வளர்ச்சியின் ஆற்றல் தொலைநோக்குபார்வைதான்.
இன்றை உலகிற்கு மிக முக்கியமாக தேவைப்படு வதும் இதுவே.
ஆகார் கர்த்தரை “என்னை காண்கின்ற தேவன்” என்று பெயரிட்டாள்.
ஆதி 16:13 – அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
நம்முடைய இலக்கு அல்லது தொலை நோக்கு பார்வை தெளிவாக பலகையில் அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணமாய் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆபா 2:2 – அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
குழந்தை சாமுவேல் இஸ்ரவேல் மக்களுக்கு மத்தியில் தரிசனம் இல்லாத காலகட்டத்தில் வளர்க்கப்பட்டான்.
1சாமு 3:1 – சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக்கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலேகர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.
SOL. BINESH,AOJ
