கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
(யோசுவா 3:7).
இஸ்ரவேலர்கள் மோசேவின் மீது அளவில்லா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், யோசுவாவின் மனதில் அநேக கேள்விகள் இருந்தன.
- மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்படிவார்களா?
- மக்களை கானான் தேசத்திற்கு வெற்றிகரமாக அவரால் அழைத்துச் செல்ல முடியுமா?
- மோசேவோடு கர்த்தர் இருந்ததுபோல அவரோடும் கர்த்தர் இருப்பாரா, மாட்டாரா?
கர்த்தர் இந்த எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். யோசுவாவுக்கு கர்த்தர் சொன்னார்,
யோசு 1:2 - என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்
யோசு 1:3 – நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்
யோசு 3:7 - என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.
யோசுவாவை உயர்த்துவதற்காக, சிவந்த சமுத்திரத்தைப் போன்ற இன்னொரு அனுபவத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் கர்த்தர் கொடுத்தார். ஆனால் அது இப்பொழுது சிவந்த சமுத்திரம் அல்ல மாறாக யர்தன் நதி. மோசேவோடு தேவன் இருந்ததுபோலவே இப்போது யோசுவாவுடனும் இருக்கிறார் என்பதை நிறுபிப்பதற்கு அதே போன்ற ஒரு அற்புதத்தை தேவன் நிகழ்த்தினார்.
யோசு 4:14 - அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
இயேசு சொன்னார் யோவா 12:26 – ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்போது, நான் தகுதியற்றவன் என்று நினைத்து அதனை ஏற்க தயங்குகிறார்கள். கர்த்தருடைய பிரசன்னத்திலே நம்முடைய தகுதி என்ன என்பதை நாம் உறுதியாய் இருக்க வேண்டும். யோசுவுவாவை ஒரு தலைவராக கொண்டுவர யோர்தான் நிகழ்வை அவர் உருவாக்கியது போல, உங்களுக்கும் இதுபோன்ற அனுபவத்தை தேவன் உருவாக்கலாம். கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காகவே.
நான் அணி சபையைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது, அணி சபைதான் உண்மையான சபை என்று ஏற்றுக்கொள்வதில் பலருக்கு சிரமம் இருந்தது. ஆனால் தேவன் கோவிட் 19 என்ற பெருந்தொற்றால் கர்த்தர் பெரிய காரியத்தை செய்தார். அணி சபைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட வீட்டு சபைதான் உண்மையான சபை என்று அறிவிக்க துவங்கினர். அப்போஸ்தலர் கால திருச்சபையில் மக்கள் வீடுகள் தோரும் ஒன்று கூடி தேவனை ஆராதித்தார்கள், அவர்களிடம் வேறு கட்டிடங்கள் இல்லை. கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு செய்தார்.
ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தலைவனே. நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம், உங்களுடைய திறமைகளை முழுமையாக ஊக்குவித்து, ராஜ்யத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஊழியத்தில் நீங்கள் குறித்த இலக்கை அடைய உறுதியளிக்கவும்.
விசுவாசத்தில் உறுதியாக அடி எடுத்து வைக்கவும். யோர்தான் நதியை கடக்க வைத்தபோது எப்படி யோசுவாவுக்கு சவாலாக இருந்ததோ உங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும்.உங்களுடைய விசுவாச பயணத்தில் அநேக யோர்தான்களுக்கு, எரிக்கோகளுக்கு, சிவந்த சமுத்திரங்களுக்கு கட்டளை கொடுக்க வேண்டும்.
நீங்கள் கட்டளை கொடுக்காவிட்டால், நீங்கள் புது முயற்சி செய்யாவிட்டால் உங்களோடு இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகரமாட்டார்கள்.
வேறு யாரிடமிருந்தோ வரும் கட்டளைக்கு காத்திருப்பார்கள்.
நீங்கள்தான் கட்டளை கொடுக்க வேண்டும். இலக்கை அடையுமாறு கட்டளை கொடுங்கள். யாரும் திரும்பிபார்க்கவோ, போரில் இருந்து விலகவோ, தொடராமல் நிற்கவோ அனுமதிக்காதீர்கள். நாம் யுத்த பூமியில் நிற்கிறோம். எதிரி நம்மை நிச்சயமாக தாக்குவான். யுத்தபூமியில் இரண்டு காரியங்கள் நடக்கும். நீங்கள் யுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீரகள். முழுமையாக தேசத்தை கைப்பற்ற நாம் முன்னேறுவோம். உங்களுடைய மாநிலத்திலோ, தொகுதியிலோ, கிராமத்திலோ, அல்லது வீட்டிலோ எந்த ஒரு அசுத்த ஆவியையும் இருக்க விட வேண்டாம். இல்லையென்றால் உங்களுடைய கண்களில் முள்ளுகளும், உங்கள் விலாக்களுக்கு கூர்களுமாயிருந்து நீங்கள் வாழும் இந்த தேசத்தில் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். நாம் விழித்திருப்போம்.
SR. ANGELICA AOJ
