தானியேல் – II
நாள் – 17-03-2022 – தேவ செய்தி

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்;
லூக் 21:11

வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
பிரியமான தேவ ஜனங்களே, இந்த வேத வசனத்தில் சீடர்கள் இயேசுவுவோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கேள்விக்கு, இயேசஇவ்வாறாக பதிலளித்தார்,
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
இந்த உலகத்தல் வஞ்சிக்கப்படாமல் இருக்க இரவும் பகலும் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான ஒன்று, இந்த நிகழ்வுகளைப்பற்றி கேள்வி படும்போது நாம் பயப்படகூடாது, மாறாக கர்த்தருடைய பிரசன்னத்தில் அமர்ந்து, இந்த உலகிற்கு அவர்கொடுக்க விரும்பும் வெளிப்பாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டு நற்செய்தியை அறிவிக்க வேண்டும். நம்மோடு இருக்கும் பலர் நம்மை ஏமாற்ற முயற்சி செய்யலாம். இதைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம்முடைய ஆன்மீக கண்களால் காண வேண்டும். ஆண்டவருடைய ஐக்கியத்தில் இருக்கும் போது , அவர் நமக்காக ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் திட்டங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இது எரேமியா 29:11 இல் எழுதப்பட்டுள்ளது,

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


நம்முடைய எதிர்காலம் கர்த்தருடைய கையில் இருக்கிறது, அவரே நமது நம்பிக்கையும். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். மத்தேயு எழுதுகிறார், சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் உலக முடிவிற்கும் அவர் வருவதற்கும் என்ன அடையாளங்கள் என்று கேட்டதற்கு அவர் பதில் கொடுத்திருக்கிறார்.


மாத் 24:4-28 உள்ள வசனங்களில் அநேக முறை எச்சரித்துள்ளார், அந்த உபத்திரவத்தின் நாட்களில் உண்மையான மேசியாவாகிய இயேசுவிடம் இருந்து மனிதர்களின் கவனத்தை திசைதிருப்ப பலர் வருவார்கள். அவர் வரபோகும் நேரத்தையோ, நாளையோ ஒருவரும் அறியாததால், நாம் எப்பொழுதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.


இயேசுவின் ராஜ்யம் வரும்போது அநேக மக்களுக்கு என்ன நடக்கும் என்று பத்து கன்னிகைகளின் உவமை மூலமாக இயேசு நமக்கு விளக்குகிறார்.

நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், பாவிகளை தண்டிக்கவும், நீதிமான்களுக்கு பரிசளிக்கவும் அவர் வருவார். அதற்கு பின் வேறு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாது. மக்கள் ராஜ்யத்தின் கதவை எவ்வளவு வேண்டுமானாலும் தட்டலாம் ஆனால் கதவு மூடியே இருக்கும். மத் 25:1-13.


அன்பின் பரலோக பிதாவே,
இந்த வெளிப்பாட்டை புரிய வைத்ததற்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம். உம்முடைய சித்தத்தின்படியே என்னுடைய இந்த வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஒரு நாள் உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்று “நல்லது, உண்மையும் உத்தமுமான சேவகனே” என்று நீர் சொல்லும் வார்த்தைகளை கேட்க வரம் தரும்படியாய் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் பிதாவே,

ஆமேன்.

Binesh Kumar
Bihar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *