யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
லூக் 21:9.
திகிலடைவது அல்லது பய்ப்படுவது என்பது உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அனுபவிக்கப்படும் இயல்பான ஒரு மனித உணர்ச்சியாகும். இந்த உண்மையை அறிந்த தேவன் வேதத்தில் 365 தடவை “பய்ப்படாதே” என்று நம்மை திடப்படுத்தியிருக்கிறார்.
ஏசா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
மேற்கண்ட வசனத்திலே கர்த்தர் முதலாவது நம்முடைய பயத்துக்கு பதில் தருகிறார். மத் 8:23-27 இங்கும் கூட இயேசு கடல் ஏற்பட்ட பெருங்காற்றை அமைதி படுத்தும் போதும் சீடர்களை திடப்படுத்துவதை காண்கிறோம். கடல் கொந்தளிப்பால் பெரிய அலைகள் எழும்பின, படகில் மோதின, சீடர்கள் பயந்தார்கள், பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள் ஆண்டவரே எங்களை காப்பாற்றும், நாங்கள் மடிந்து போகிறோம் என்று சொன்னார்கள்.
இந்த நிகழ்வில் கூட தேவன் முதலாவது அவர்களை பயப்பட வேண்டும் என்றார், பின்னர் சீடர்களை பயமுறுத்திய உண்மையான புயல் காற்றை கடிந்து கொண்டார். கர்த்தர் மனித பலவீனத்தை நன்கு அறிந்தவர் எனவே மனித உணர்வுகளை முதலில் நிவர்த்தி செய்கிறார் அதற்கு பின் அவருடைய வாக்குறுதியினால் நம்மை திடப் படுத்துகிறார்.
எபி 13:5 -, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
2008 ஆம் ஆண்டில் என் கணவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட போது, மரண பயம், என் குழந்தைகளின் எதிர்காலம், குறித்து நான் மிகவும் பயப்பட்டேன். நான் இவைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த போது பயம் என்னை ஆட்கொண்டது. ஆனால் என் உண்மையுள்ள தேவன் எனக்காக ஜெபிக்கவும் என்னுடன் இருக்கவும் பலரை எழுப்பி என் பயத்தை நீக்கினார். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டன் என் மனதில் ஜீவனுள்ள கர்த்தருடைய வார்த்தைகள் வேலை செய்ய ஆரம்பித்தன. கர்த்தருடைய வாகுறுதிகளை என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகளில் நான் பிரகடனம் செய்த போது என்னை திடப்படுத்தும் கர்த்தருடைய பிரசன்னைத்தை நான் உணர்ந்தேன்.
சங் 34:4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
பிதாவே, என் மனதை முறியடிக்கும் மற்றும் முடக்கும் என் அச்சங்களை உமது கர்த்தில் ஒப்படைக்கிறேன். உமது வாக்குறுதிக்கு ஏற்ப என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அனைத்திலும் உம்முடைய பிரசன்னத்தில் விசுவாசம் வைக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய வாக்குதத்தங்களுக்கும், உறுதிமொழிக்கும் நன்றி தகப்பனே. ஆமேன்.
Sol. Mini Renji, AOJ
