தானியேல்
07-03-2022 – தேவ செய்தி

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

(1சாமு 30:19).

சவுலுக்கு பயந்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள தாவீது காத் பட்டணத்திற்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கையில், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்த எல்லா வற்றையும் சூரையாடினார்கள். தாவீது அவர்களுடைய (காத்) இராணுவத்தோடு தங்க அனுமதிக்கப்பட வில்லை. அவன் அங்கிருந்து திரும்பி வந்தபோது தன்னுடைய மனைவிகள், பிள்ளைகள் மற்றும் அவனுடைய அனைத்து பொருட்களும் அமலேக்கியர்களால் கொள்ளையிடப்பட்டதை கண்டான். தாவீதும் அவனது கூட்டாளிகளும் அழுவதற்கு கண்ணீர் வற்றிப்போகும் மட்டும் அழுதனர்.

ஆனால் தாவீது தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 1சாமு 30:6

தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

1சாமு 30:8.


கர்த்தரிடமிருந்து பதில் பெற்றபின் தாவீது தன்னுடைய உடைமைகளை சூரையாடிய எதிரிகளை பின் தொடர்ந்தான், அவர்களோடு யுத்தம் செய்ய. அவன் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றான்.. சிறியவற்றிலிருந்து பெரியவை வரை தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் என எதிரி எடுத்துச் சென்ற அனைத்தையும் திரும்ப பெற்றான்.


கர்த்தருடைய பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்லாதீர்கள். முக்கியமாக யுத்த நேரத்தில்.

எதிரியின் கண்கள் உங்கள்மீது இருக்கும். நீங்கள் ஜாக்கிரதையாக இராவிட்டால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் அவன் திருடிக்கொள்வான்.
யுத்த களத்தில் நிற்கும் நீங்கள் உங்களுடைய குடும்பம், குழந்தைகள், வேலைத்தளம் மற்றும் உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் எதிரி கைவைக்காதபடிக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

தாவீது ‘காத்’க்கு செல்வதைப் பற்றி கர்த்தரிடம் ஆலோசிக்காமல் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே சென்றான். எதிரி உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் ஆதலால் எல்லா திசையிலிமிருந்து கர்த்தர் உங்களை பாதுகாக்கிறார். நீங்களும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறீர்கள். எதைப்பற்றியும் பயப்பட தேவை இல்லை.
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் 2திமோ 2:4.
எதிரி உங்களிடமிருந்து எதையாவது திருடிவிட்டானா?
கர்த்தருக்காக யுத்தம் செய்யவும், அவருக்கு ஊழியம் செய்யும் சுதந்தரம்?

பேய்களை ஓட்டவும், நோய்களை சுகமாக்கவும் கர்த்தர் உங்களுக்குகொடுத்திருக்கும் அதிகாரம்?
உங்களுடைய குழந்தைகள், அவர்களுடைய படிப்பு, அவர்களின் எதிர்காலம்?
அவர்களுடைய திருமண வாழ்க்கை?
அவர்களின் குடும்பத்தின் சந்தோஷம், அமைதி மற்றும் இரட்ச்சிப்பு?
நம்முடைய அடிப்படை அதிகாரமான நற்செய்தியை அறிவிப்பது, மற்றும் கற்றுக்கொடுப்பது?
உங்களிடமிருக்கும் நம்பிக்கை?
இயேசு கிறிஸ்துவில் உங்களுடைய விசுவாசம்?
நீங்கள் இழந்தவற்றிற்காக அழுதுகொண்டு, உடைந்து போய் இருக்கீற்களா?
கவலை வேண்டாம். எழுந்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு பச்சை கொடி காட்டுகிறார். உங்களுடைய எதிரியை நீங்கள் மேற்கொள்ளலாம்.
நம்முடைய தேசத்தை சூரையாடிக்கொண்டிருக்கிற எதிரியை நாம் அவன் மீண்டும் எப்பொழுதுமே இந்த தேசத்திற்குள் வராதபடிக்கு துரத்துவோம்.
கர்த்தரில் நாம் பலப்படுவோம். எதிரியோடு யுத்தம் செய்வோம், இழந்த அனைத்தையும் திரும்ப பெறுவோம்.

Sr. Anitta AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *