தானியேல் – II 30-01-2022

கிறிஸ்துவின் சிந்தை

எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

(லூக் 18:32)

மேற்கண்ட வசனத்தை தியானிக்கும் போது இந்தியாவின் ஒரிசாவில் தொழு நோயாளிகள் மத்தியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகளும் அவரால் சேவை செய்யப்பட்டவர்கள் மூலம் வேனில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட ஒரு காட்சி என் நினைவுக்கு வந்தது. அவரது மனைவி கிளாடிஸ் மிகுந்த வேதனையில் இருந்தாலும் கொலையாளிகளை மன்னித்து அவர்கள் மத்தியில் எந்த புகாரும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பவுல் பிலிப்பியர் 3:7 இல் சொன்னது போல, “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.”

இதுதான் கிறிஸ்துவின் சிந்தை.

லூக் 18:32 இல் இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி சொன்னது இங்கு நிறைவேறி இருக்கிறது. இது மத் 20:18-19 ல் உள்ளது, அவர் ஏற்கனவே சீடர்களுக்கு அவர் அனுபவிக்கப்போகும் துன்பங்களிப்பற்றி சொல்லியிருந்தார். ஆனால் இந்த வசனத்தில் உள்ளதைப்போல ஒருபோதும் தெளிவாக  சொல்லவில்லை. அவர் தான் எப்படி மரிக்கபோகிறோம் என்பதைப் பற்றிகூட சொல்லியிருந்தார். எவ்வாறு அவருடைய மக்களே அவரை புறஜாதியினரிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவர்கள் அவரை கொல்ல எல்லா தீய வழிகளையும் செய்வார்கள் என்றும் ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார், எதிரியை தோர்க்கடிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசு நம்முடன் இருந்தால் நாம் எந்த துன்பங்களை அனுபவித்தாலும் இறுதி வெற்றி நமக்கே என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. அவர் நமக்காக பலியானது போல நாமும் உயிருள்ள ஜீவபலியாக கிறிஸ்துவுக்காக மாற வேண்டும். (ரோம 12:1).  மத் 20:22 இல் அவர் சொன்னது போல, நம்முடைய அர்பணிப்பு, ஒப்புகொடுத்தல் மற்றும் பக்தி முழுமையானதாக இருக்க வேண்டும்,   அவருக்காக துன்பகலத்தை நாமாக முன்வந்து குடிக்க தயாராக இருக்க வேண்டும்.  அவருக்காக துன்பப்படுவதற்கு நமக்கு கர்த்தருடைய சிந்தை இருக்க வேண்டும், பிலி 2:5.

என் கணவரின் இதயக் கோளாறுகளாலும் பக்கவாதத்தாலும் இருபது வருடங்கள்    நான் துன்பத்தை சந்தித்தேன். ஆனால் எபே 3:16 வசனத்தால் நான் பலப்படுத்தப்பட்டதால் நான் சோர்வடையவும் இல்லை, குறை கூறவும் இல்லை. கீழ்காணும் பல்வேறு வசனங்களால் நான் என்னை திடப்படுத்திக்கொண்டேன். 

எபி 13:5 –  நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை

ஏசா41:10 – நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;

ஏசா 43:2 – நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்….

இப்பொழுதும் இது எனக்கு ஒரு மிகப் பெரிய சாட்சி. சங் 119:71 – நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

ரோமி 5:3-4 பிரச்சனைகள் மற்றும் சோதனைகளை சந்திக்கும் போது நாம் மகிழ்ச்சியடையலாம் ஏனென்றால் அவை நமக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறது, பொருமை நல்ல குணத்தையும், நல்ல குணம் இரட்சிப்பின் நம்பிக்கையும் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றாது.

ஜெபம்: உம்முடைய மகிமைக்காக துன்பத்தை தாங்கும் வரத்தை எங்களுக்கு தாரும் பிதாவே. ஆமேன்.,

Sol Gigi Jacob

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *