தானியேல் – II 04-01-2022 – தேவ செய்தி

அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால், அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரிய்ப்பட்டார்கள்.

லூக் 4:32

இயேசு அதிகாரத்தோடு போதித்த இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். இயேசு அங்கிருந்த மலையின் மேல் ஏறி அங்கிருந்த மக்களுக்கு அநேக காரியங்களை குறித்து போதித்தார்.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்த போது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மத் 7:28-29.

இயேசு சாத்தானை கடிந்துகொண்டார் அது அவனை விட்டு வெளியே வந்தது.

மத் 10:1 மற்றும் லூக் 9:1 இல் அவர் செய்த அனைத்தையும் நாமும் செய்ய அவர் நமக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்துள்ளார்.

அவர் நமக்கு கட்டளை கொடுத்துள்ளார்,

மாற் 16:15 – … நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

இயேசு நமக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தையும் வல்லமயையும் பயன்படுத்தாமல் மக்கள் நற்செய்தியை நம்ப மாட்டார்கள். இயேசுவின் படை அணியின் வீரர்கள் மக்களுக்கு நற்செய்தியை கொடுக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் இந்த பெரிய கட்டளையை செயல்படுத்த இயேசுவின் படை அணியின் வீரர்களாகிய நமக்கு அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளி போல பல்வேறு வழிகள் உள்ளன. வீரர்கள் இவைகளை சரியாக பயன்படுத்தி, மக்களை கர்த்தருடைய காலடியில் கொண்டுவருவார்களாக.

இயேசு தன்னுடைய பனிரண்டு வயதில் எருசலேம் தேவாலயத்தில் வேதபோதகர்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர்கள் சொல்வதை கேட்டார் மேலும் அவர்களிடம் பல கேள்விகளையும் கேட்டார்.

லூக் 2:47 – அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

ஒவ்வொரு விசுவாசியும் இப்படிப்பட்ட அதிகாரத்தைதான் வெளிப்படுத்த வேண்டும் எனென்றால் கர்த்தருடைய ஆவி நம்மில் குடிகொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் சபையாகிய நாம் (நம்மில் அநேகம்பேர்), சபைத்தலைவர்கள், மற்றும் சிவிசேஷகர்கள் எனறு ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறோம்.. விசுவாசிகளாகிய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த அதிகாரத்தை கடந்த 2000 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் வீணாக்கிவிட்டோம். சபைக்கும், கர்த்தருடைய ராஜ்யத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு..

கர்த்தரின் கட்டளைப்படி தென்னிந்தியாவில் மணப்பாறையில்  AOJ சகோதரிகளான நாங்கள் முதல் அணிசபையை துவங்கியபோது துவக்க ஜெபம் மற்றும் AOJயின் உறுதிமொழியுடன் (2 கொரி 10:3-5).  துவங்கினோம். உடனடியாக அசுத்த ஆவிபிடித்த ஒரு பெண் தன்னுடைய இரண்டு காதுகளையும் மூடிக் கொண்டு  உரக்க கத்தினார், நிறுத்துங்க, நிறுத்துங்க, எந்த அணி சபையையும்  இங்கு துவங்க நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் நாங்கள் நிறுத்தாமல் உறுதிமொழியை உரத்த குரலில் சொல்லிமுடித்தோம். அதற்கு பிறகு அசுத்த ஆவி பலம் இழந்தது பின்னர் அந்த பெண்ணை விட்டு வெளியே வந்தது. அதற்குபின் அந்த பெண் சாதாரணமானாள்.  இயேசுவின் படை அணிக்கு  உறுதிமொழியாகக் கொடுக்கப்பட்ட இந்த வேதவாக்கியம் சாத்தானுடைய அரண்களை உடைக்கவும் சாத்தானை வெளியே கொண்டுவரவும் வல்லமை உள்ளது என்று நம்பினோம்.

எனவே இந்த வேதபகுதியை (2கொரி 10:3-5) உறுதிமொழியாக ஒவ்வொரு ஜெபகூட்டதிலும் துவக்க ஜெபத்திற்கு பின் சொல்லுகிறோம்.

ஜெபம்:

பிதாவே, எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட இந்த அதிகாரத்தைப் பயன்படுத பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை எங்களுக்கு தாரும் அப்போது இந்த உலகம் முழுவதும் உம்முடைய காலடியின் கீழ்வருவதை நாங்கள் காண்போம்.

Sr. Roger AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *