நாள்: 18-11-2023
அணிசபை வீரர்களே கர்த்தரை மகிமைப் படுத்துங்கள்.
இன்று கர்த்தர் தானியேல் 1 ம் அதிகாரத்தின் வழியாக என்னுடன் பேசினார்.
தானியேல் 1 : 3″ அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜ குலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும் ‘ அழகானவர்களும் , சகல ஞானத்தில் தேறினவர்களும் ‘ அறிவில் சிறந்தவர்களும் , கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையில் சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டு வரவும் “
இன்று நாம் சிறுபான்மையினரை ஒடுக்கும் உலக அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோம். அவர்கள், சிறுபான்மையினர் தங்கள் வழிகளைக் கற்றுக் கொள்ளவும், தங்கள் மன்னர்களுக்கு சேவை செய்யவும் விரும்புகிறார்கள்.
தானியேல் 1 : 4
” அவர்களுக்கு கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக் கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கற்பித்தான்.”
இன்று இந்த நற்செய்தியைக் கேட்டு எமது படையணி வீரர்கள் மகிழ்ச்சியடைவார்களாக.
தானியேல் 1 : 9
” தேவன் தானியேலுக்கு பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும் படிச் செய்தார். “
இங்கே தானியேல் அரசாங்க அதிகாரிகளின் தயவைக் காணும் அணி வீரராக உள்ளார். நீங்கள் எந்த அரசாங்க வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம், உங்களுக்கு அது மிகவும் சாதகமாக இருக்கும்.
ஊழல்/ அசுத்தம்/ கலப்படம்/ பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் மத்தியில் கர்த்தரின் வேலையைச் செய்ய நீங்கள் அந்த பதவிகளில் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானியேல் விரும்பியபடி உங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தானியேல் 1 : 8
” தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சை ரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு தன்னை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டான். “
இயேசுவை உங்கள் பலமாகவும் , அறிவு மற்றும் ஞானமாகவும் கொள்ளுங்கள். முடிவுகளை தருவதிலும், அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்வதிலும், அணிசபைகள், மற்றும் வரங்களின் பயிற்சி பள்ளிகளில் செயல்பட்டு ஆவிக்குரிய வரங்களை பெறுவதன்மூலம் உங்கள் குழுவிலுள்ள சக மனிதர்களை விட சிறப்பாக செய்வீர்கள்.
தானியேல் 1 : 17
“இந்த நான்கு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். “
தானியேல் 1 : 20
” ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களை கேட்டு விசாரித்தானோ , அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களை பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான். “
எனது இளம் படையணி வீரர்களே கர்த்தர் உங்களை விரும்பும் இடம் இதுதான். உங்களது முதலாளியாகவோ / அரசு அதிகாரிகளாகவோ / கலெக்டர்களாகவோ / ஐஏஎஸ் அதிகாரிகளாகவோ / இராணுவ ஜெனரல்களாகவோ அமைச்சர்களாகவோ / முதல்வராகவோ / பிரதமராகவோ / ஜனாதிபதியாகவோ இருக்கலாம். இவர்கள் உங்களின் கருத்து மற்றும் ஆலோசனைக்காக உங்களிடம் வருவார்கள்.
ஏசாயா 60 : 3
” உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.” இந்த ஆசீர்வாதம் இயேசுவின் நாமத்தில் நமது வீரம் நிறைந்த படையணி வீரர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். படையணி வீரர்களே நீங்கள் நமது தேசத்திற்கு ஒரு ஆசீர்வாதம். ஆமென்.
Sol. ஆல்பர்ட் ஜோன்ஸ்


