நாள் 06-06-2022 – தேவ செய்தி
ஆகையால் உங்கள் ஜீவனுக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
மத் 6:25

இந்த வசனத்தில் இயேசு சொல்லுகிறார் உங்கள் ஜீவனுக்காக கவலைப்பட வேண்டாம், இவ்வுலகில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 16:33
கர்த்தர் நமக்கு கொடுக்கும் முழு ஒளியை அனுபவிக்கவிடாமல் தடை செய்ய சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்கள்தான் பயம், கவலை மற்றும் பதட்டம். இந்த உணர்வுகள் நம்மை முடக்கி வைக்கின்றன. நம்முடைய கவலைகளை கர்த்தர் மீது போட்டுவிட்டு கவலையற்ற வாழ்வை வாழா நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்.
ஏசா 35:4
ஏன் நாம் கவலைப்படகூடாது..
- உலக பொருட்களை விட இந்த வாழ்வு மிகவும் பெரியது.
- மனிதன் பொருட்களைவிட விலையேறப்பெற்றவன்.
- உடைகளைப்பற்றி கவலைப்படாத விலங்குகள் மற்றும் தாவரங்களைவிட மனிதன் மேன்மையானவன்.
- கவலைப்படுதல் ஒரு பாவம், அது நமக்குள் பயத்தை உண்டுபண்ணுகிறது.
- கவலை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
- துன்பங்களை உருவாக்குகிறது.
- நமக்காக கவலைப்படும், நம்மை தாங்கும் பரலோக பிதா இருக்கும்போதும் அனாதைகள் போல நம்மை வாழவைக்கிறது இந்த கவலை.
- நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பெறவிடாமல் கவலைபட வைக்கும்.
நம்முடைய எல்லா செல்வங்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார். இயேசு சிலுவையில் நமக்காக செலுத்திய இந்த ஆசீர்வாதங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் அதை பயன்படுத்த வேண்டும். நானும் “அரண்களை உடைப்பது எப்படி” என்னும் FRP வகுப்பில் பங்கேற்பதற்கு முன்பு என்னுடைய பிள்ளைகளைப்பற்றியும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் அதிகமாக கவலைப்பட்டேன். என்னுடைய எண்ணங்களை கர்த்தருடைய வல்லமைமிக்க கைகளில் ஒப்படைத்த போது அவர் என்னை வழிநடத்த ஆரம்பித்தார்.
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
சங் 46:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசா 41:10

ஜெபம்
பரலோக பிதாவே உமக்கு முன்பாக வருகிறோம், உம்முடைய பிரசன்னத்திற்காக நன்றி செலுத்துகிறோம், நாங்கள் கவலைப்பட கூடாது என்று சொல்லி கொடுத்தமைக்காக நன்றி சொல்லுகிறோம். உம்முடைய வார்த்தையை எப்படி பற்றிக்கொண்டு தியானிப்பது என சொல்லிதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமேன்.
Sol.G. Kamalin Viji
