நாள் 12-05-2022- தேவ செய்தி
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான். கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.
2நாளா 30:18-20

தன்னுடைய ஆளுகையின் போது எசேக்கியா ராஜா பல நாட்களாக பழுதடைந்திருந்த கர்த்தருடைய தேவாலயத்தை புதுப்பித்தான். கர்த்தருக்கான ஊழியத்தை தொடர்ந்தான். அவன் ஆசாரியர்களுக்கு சொன்னதாவது.
என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள்கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.
2 நாளா 29:11.
ஆனாலும் அநேக ஜனங்கள் தங்களைச் சுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள். ராஜா எசேக்கியா இஸ்ரேல் மற்றும் யுதேயாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான், எருசேலேமிலிருக்கும் கர்த்தருடைய தேவாலத்திற்கு அனைவரும் வந்து பஸ்காவை அனுசரிக்க வேண்டும் என்று எழுதி அனுப்பினான்.
ராஜாவும் அவருடைய பிரபுக்களும் எருசலேமில் உள்ள மொத்த சபையும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவை கொண்டாட முடிவு செய்தனர், ஆனால் போதிய ஆசாரியர்கள் தங்களை அர்ப்பணிக்காததாலும், மக்கள் இன்னும் கூடிவராததாலும் அவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை.
எனவே ராஜா மீண்டும் ஒரு கடிதத்தை மக்களுக்கு அனுப்பி வைத்தான்.
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர்கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
இப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.
2 நாளா 30:9-10.
எசேக்கிய சோர்ந்து போகவில்லை. தங்களை பரிசுத்தம் பண்ணாதவர்களுக்காக கர்த்தரிடம் ஜெபித்தான், மேலும் கர்த்தர் அவர்களை மன்னித்தார். ராஜாவினுடைய பிரார்த்தனையை கர்த்தர் கேட்டு மக்களை சுகமாக்கினார்.
யூதா மற்றும் இஸ்ரவேல் இந்த இரண்டு ராஜ்யங்களையும் ஒன்றிணைத்து கர்த்தருடைய சந்நிதிக்குக் கொண்டுவர ராஜா எசேக்கியா ஏவ்வளவு பொறுமையாக இருந்திருப்பார்.
இந்தியாவில் உள்ள அனைத்து சபைகளையும் கர்த்தரிடம் கொண்டுவந்து தூய்மைப்படுத்துவது மிகப்பெரிய முயற்சியாகும். துரோகம், கேலி அவமானங்கள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் ஆனால் நல்ல முடிவுகளை கொண்டுவர விடா முயற்சி தேவை.
யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.
2நாளா 30:12.
கர்த்தருடைய கிருபை இந்திய சபையின் மீது இப்பொழுது இருக்கிறது. நாம் ஒருமனம் உள்ள இருதயாத்தோடு நாம் உழைக்க வேண்டும். கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புகொடுக்காதவர்களுக்காக நாம் ஜெபிப்போம். நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் நம் நாட்டையும் , நம் மக்களையும் சுகப்படுத்துவார்.
நமக்கு தேவையானது குணப்படுத்துதல்.
கடந்தகாலத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து குணமாக வேண்டும்.
நீண்ட காலமாக நம் நினைவில் இருக்கும் காயங்களில் இருந்து குணமாக வேண்டும்.
ஆத்துமா, ஆவி மற்றும் சரீரம் குணமாக வேண்டும்.
உடல் உணர்வு மற்றும் ஆன்மீக காயங்களிலி இருந்து நாம் குணமடைய வேண்டும்.
குற்ற உணர்வு, அவமானம் மற்றும் நாம் வெறுக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களிலிருந்து குணமாக வேண்டும்.
நம்முடைய தேசமும் குணமடைய வேண்டும். அதுவும் வியாதிப்பட்டிருக்கிறது.
நம்முடைய பொருளாதாரம் நோயுற்றுள்ளது.
நம்முடைய தொழில்களும் நலிவடைந்துள்ளன.
நம்முடைய மக்கள் நோயுற்று இருக்கிறார்கள்.
இளைஞர்கள், குழந்தைகள்ள், முதியவர்கள் தங்களுடைய ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தில் நோயுற்றிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய சபைகள் நோயுற்றுள்ளன.
சாட்சி
ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மும்பையில் நடந்த கூடுகையில் சபையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த அன்றே தேவன் அதிசயத்தை நடத்தினார். இரண்டு சபைகளின் தலைவர்கள் தங்களுடைய விசுவாசிகளை பயிற்சிக்கு அனுப்புகிறோம் என்று எங்களுக்கு போன் செய்தனர். நம்முடைய தேசத்திற்கு அதன் மக்களுக்கும் முழுமையான ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தேவன் தர வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைப்போம். இன்று 24 மணி நேரமும் உங்கள் நாவு இதை உச்சரித்துக்கொண்டே இருக்கட்டும். இன்றே இதற்கான பலனை நாம் காண்போம்.
–Sr. Angelica AOJ
.
