ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.
உபா 7:9,10
கர்த்தருடைய இரண்டு குணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்த்தரில் அன்புகூர்ந்து அவரது கற்பனைகளை கைகொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் தயவையும் உடன்படிக்கையையும் காக்கிற உண்மையுள்ள தேவன் அவர்.
அவரை பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.
பத்தாவது வசனத்தில் யகோவா தேவனின் இரண்டாவது குணம் மூன்றுமுறை சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஏன் யகோவா தேவனை வெறுக்க வேண்டும்?
எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய தாயையும் தகப்பனையும் அன்பு செய்யும். தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு செய்யும் எல்லா காரியங்களாகிய– உணவளிப்பது, உடை அணிவிப்பது, குளிக்க வைப்பது, அன்பு செய்வது, கைபிடித்து நடத்திச் செல்வது, கூட விளையாடுவது, குழந்தை நன்கு வளரவேண்டும், மேலும் எப்பொழுதும் குழந்தையின் நலன் கருதுவது, போன்ற எல்லாவற்றையும் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக மாறியபின் தன்னுடைய பெற்றோர்களில் பெரிய குறை கண்டுபிடி அவர்களைக்கும்வரை தனது தந்தை அல்லது தாயை வெறுக்க வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு மனிதனும் கர்த்தரிடமிருந்துதான் ஜீவனை பெறுகிறான். வாழ்வை கொடுப்பதற்கும் அதை எடுப்பதற்கும் யகோவா தேவனுக்குத்தான் வல்லமை உண்டு. இந்த அதிகாரத்தை அவர் இயேசு கிறிஸ்துவிடமும் கொடுத்திருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
(யோவா 10:18).
ஜீவன் கொடுப்பவரை எப்படி மனிதனால் வெறுக்க முடியும்? நிச்சயமாக அவனால் முடியாது. வஞ்சகத்தால் அவனால் அப்படி செய்ய முடியும், அவனால் தன்னுடைய உண்மையான தகப்பனை காணமுடியாது. அவனுடைய இதயமும் மனமும் குருடாக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தை தனது தந்தை அல்லது தாயை அடையாளம் காண முடியாததுபோல, இந்த உலகில் பிறக்கும் எந்த குழந்தையும் கடத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.
2கொரி 4:4 – தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
மனிதனுடைய குருடாக்கப்பட்ட கண்களால் சிருஷ்டி கர்த்தாவை பார்க்க, மீண்டும் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டும். கர்த்தருடைய வேதத்தை அறிவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையை அறிந்துகொள்ள முடியும். கர்த்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் மீது இரக்கம் காட்டுவார்.
- தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.
பிரட்தியட்சமாய் அவர்களுக்கு பதிலளிப்பார்.
பூமியிலும், மனித குலத்திலும் நாம் காணும் அனைத்து அழிவுகளும் இந்தக் காரணத்தால் கண்டறியப்படலாம்.
யகோவா தேவனை வெறுப்பது;
கர்த்தரை எப்படி ஒருவரால் வெறுக்க முடியும் அல்லது தங்களது வெறுப்பை யகோவா தேவனை நோக்கி வெளிப்படுத்தமுடியும்?
இயேசுவில் நம்பிக்கை வைக்காததன் மூலம்.
பிதாவானவர் குமாரனில் (இயேசு) அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் (இயேசு) விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்;
குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.
யோவா 3:35,36
இயேசுவில் நம்பிக்கை வைக்காதது யகோவா தேவனை வெறுப்பதாகும்.
இயேசுவில் நம்பிக்கை வைக்காதவர்கள் மீது கர்த்தருடைய கோபம் வெளிப்படும். இன்றைய வசனம் சொல்லுகிறது. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.
உலகபிரகாரமான மனிதனுக்கு உயிரை கொல்லுவது, உயிரை எடுப்பது இதுதான் மிகப்பெரிய அழிவாக கருதப்படும், ஆனால் வேதம் இன்னும் அதிகமாக சொல்லுகிறது. அப்படிப்பட்டவர்கள் இரண்டாவது மரணத்திற்கு ஆளாவார்கள்.
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8
இரண்டாவது மரணம் என்பது ஒரு மனிதன் மரித்தப்பின் அக்கினி கடலில் அனாதி காலத்திற்கு போடப்படுவது.
நரகம் என்பது அக்கினியும் கந்தகமுமான நிறைந்த கடல் என்று இயேசு சொல்லுகிறார். (வெளி 20:10,15). அங்கு நெருப்பினால் மக்கள் வாதிக்கப்படுவார்கள். வெளி 14:10-11 – நித்திய நெருப்பு, அந்தகாரம், புழுக்கள், அழுமை மற்றும் பற்கடிப்பு.
மத் 8:12, 22:12, 25:30, லூக் 13:28, மத் 9:44,46,48, எசா 33:14
லூக் 12:5 – நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்..
இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒருவித பயம் என்னை சூழ்ந்தது. நம்முடைய தொகுதியில் இயேசுவை அறியாமல் நித்திய அழிவிற்கு போகும் மக்கள் எத்தனை பேர் என்று கணக்கிட்டு பார்ப்போமா? அவர்களுக்கு பரலோகத்தை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
Sol. Ann Rose AOJ
