அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். –
லூக் 14:33
பரிசுத்த ஆவியினால் ஞானஸ்ஞானம் பெறும்வரை எருசலேமை வீட்டு போகவேண்டாம் என்று தன்னுடைய சீடர்களுக்கு இயேசு கட்டளை கொடுத்தார். (அப்போ 1:4,5).
நாம் உலகபிரகாரமாக வாழாமல் ஆவியின் வழிநடத்துதலால் வாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். (2கொரி 10:3,4, ரோம 8).
பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுதல் என்றால் என்ன?
இயற்கைக்கும், எல்லா விதிகளுக்கும், அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டு, சுகமாதல், அமைதி, விடுதலை, அற்புதங்கள், முற்றிலும் புதிய வாழ்க்கையை பெறுதல் மேலும் நாம் அதற்கு என்ன தலைப்பு கொடுத்தாலும் அதற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்கையை வாழ்வது.
இது அற்புதங்களின் வாழ்க்கை – நாள்தோறும் நடைமுறையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மூட்டுவலி, ஆஸ்துமா, ஒவ்வாமை, காய்ச்சல், வலிப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து மக்களை குணமாக்குவது, பலரை உலக சிக்கலில் இருந்து அவர் நாமத்தால் விடுவிக்கப்பது.
வேலைதளத்தில் நான் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டேன் என்பதற்கான ஒரு உதாரணத்தை உங்களுக்கு முன் வைக்கிறேன். ஒரு முறை என்னை பிரசவத்திற்காக அழைத்தார்கள். நான் அன்று ஒபிடி யில் இருந்தேன் மேலும் எனக்கு அழைப்புவிடுத்த மருத்துவமனை 3 கிமீ தூரத்திலிருந்தது. நான் அவசர அவசரமாக எனது மருத்துவமனையிலிருந்து கிளம்பிகொண்டிருக்கையில் என்னை முன்பு அழைத்த அதே மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. குழந்தை பிறந்துவிட்டதாகவும், பிறந்தவுடன் குழந்தை அழவில்லை என்றும் சொல்லினர். பத்து நிமிடத்தில் நான் குழந்தை இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தையின் மூச்சு விடவில்லை மேலும் உடல் இரத்தம் இன்றி வெள்ளையாமாறியிருந்தது. ஒரு மருத்துவராக நான் அந்த இடத்தில் Resuscitation அதாவது குழந்தையை உயிர்பிக்க முதலுதவியை தர வேண்டும். இதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் பை மற்றும் வெண்டிலேட்டர் மூலம் அதன் நிலை மேம்பட்டது ஆனாலும் குழந்தை தன்னிச்சையாக சுவாசிக்கவில்லை. ஒரு மணிநேரபோரட்டத்திற்கு பின்னும் குழந்தை குணமடையவில்லை மேலும் இதய துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. குழந்தையின் கண்களில் எந்த அசைவும் இல்லை. குழந்தையின் தந்தையை அழைத்து குழந்தை மூச்சு இழுப்பதற்கு வெண்டிலேட்டரை சார்ந்திருக்கிறது என்றும் அதன் மூளை எவ்வாறு இறந்துவிட்டது என்பதையும் கூறினேன். தந்தை நிலைகுலைந்து போனார். எல்லா உதவியாளர்களையும் நான் வெளியே அனுப்பினேன். திடீரென்று ஒரு சிசிடிவி கேமராவின் பார்வையில் அறையைப் பார்த்தேன். கர்த்தர் எதையோ செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். உடனே நான் தேவனிடம், “ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டேன்.
உடனடியாக வேதத்தின் இரண்டு நிகழ்வுகள் என் ஞாபகத்திற்கு வந்தது. முதலாவது நிகழ்வில், இயேசு மரித்துபோன பெண் அருகே இருந்த அனைவரையும் வெளியே அனுப்புகிறார் மேலும் அந்த பெண்ணுக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார் என்றும், இரண்டாவது நிகழ்வில் எலியா தீர்க்கதரிசி குழந்தையை மேல் அறைக்கு கொண்டுச் சென்று ஜெபித்து அதை உயிர்பித்தது. நான் தேவனைப் பார்த்து, “கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்?” என்றேன்.
“உயிர்பெற வேண்டி குழந்தை மீது தீர்க்கதரிசனம் உரை!” என்றார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உயிர் பெற நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். உடனடியாக குழந்தை தன்னுடைய முதல் மூச்சை இழுத்தது, மேலும் அழ ஆரம்பித்தது. “அசைந்திடு” என்று நான் மீண்டும் தீர்க்கதரிசனம் உரைத்தேன். உடனடியாக குழந்தை அசைந்தது, காலை உதைத்தது. குழந்தை இப்போது தானாக சுவாசித்தது. நான் resuscitate செய்வதை தொடர்ந்தேன்.
இதை குழந்தையின் தகப்பனுக்கு எடுத்துச் சொன்னேன், அவரோ மிகவும் கோபப்பட்டார், “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்னுடைய குழந்தை மறித்துபோனது என்றீர்கள் இப்போதோ உயிருடன் இருக்கிறது என்கிறீர்கள். என்ன இது, நீங்கள் எங்களோடு விளையாடுகிறீர்களா? என்று கோபமாக கேட்டார்.
நான் அவரிடம் சொன்னேன், என்னுடைய எந்த செயலாலும் அல்ல மாறாக உயிருள்ள ஒரே தேவனாகிய இயேசு கிறிஸ்து வின் வல்லமை தான் மரித்துபோன இந்த குழந்தைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது. குழந்தையை மேல் நிலை பராமரிப்புக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து போகும்படி சொன்னேன், அப்படியே அந்த குழந்தை உயிருடன் உயர் மையத்திற்கு மாற்றப்பட்டது.
பெயரளவில் (உலகபிறகாரமாக) வாழும் கிறிஸ்தவ வாழ்வை விட்டு விட்டு, நமக்காக தேவன் நியமித்திருக்கிற திட்டத்தின்படி (பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுதல்) வாழும்போதுதான் இது நடக்கும். உலக வாழ்க்கை என்பது அசுத்த ஆவியின் ஆட்சி, அதிகாரம், மற்றும் ஆதிக்கத்திற்கு அடிமையாக இருப்பது. இவைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் அற்புதங்களை காண விடுவதில்லை.
ஆனால் நாம் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும்போது (பிலேமோன் 1:6) கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கர்த்தருடைய வார்த்தை நம்மை ஆட்கொள்ளகூடிய ஒரு நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.
அவருடைய வெற்றியிலிருந்தும், அவருடைய ஒப்பற்ற வல்லமையின் மகா மேன்மையான மகத்துவத்திலிருந்தும் விசுவசிக்கிறவர்களாகிய நாம் வேலை செய்ய துவங்குவோம்.
உலகம் நமக்கு கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு, அவர் நமக்கு சொல்லி கொடுப்பதை பிடித்துக்கொள்வோம். நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். (லூக் 8:31)
Dr. Albert Jones AOJ
