ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
(ஏசா 45:1)
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர் தகுதிபடுத்துகிறார் மேலும் அபிஷேகிக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தமது கிருபையாலும், வல்லமையாலும் நம்மை மேம்படுத்துகிறார். தேசங்களை ஆளவும், அவைகள் மீது அதிகாரம் செய்யவும் அவர் தனது வலது கரத்தை நீட்டி நம்மை பலப்படுத்துகிறார். கர்த்தருடைய அபிஷேகம் அல்லது அதிகாரத்தினால் அந்தகாரத்தின் அரசர்களையும் அனைத்து நாடுகளிலும் உள்ள அவர்களீன் பூமிக்குரிய பிரதிநிதிகளையும் அவர்களின் தற்காப்பு கவசத்தையும் உடைத்தெறிய முடியும். அழிவை விளைவிக்க கூடிய் அவர்களின் ஆயுதங்களிலிருந்து நாம் அவர்களை நிராயுதபாணியாக்க முடியும்.
எவராலும் பூட்டமுடியாத கதவுகளை நமக்காக தேவன் திறந்து வைப்பார். யாராலும் பறிக்கவோ தடுக்கவோ முடியாத கர்த்தரின் வல்லமையையும் அதிகாரத்தையும் பூமியில் நிரூபிக்க அவர் நமக்கு வாய்ப்புகளை கொடுப்பார். நமக்கு ராஜா கோரேசைப் போல ஒரு மண்புடைய மற்றும் நித்திய இலக்கு உள்ளது. கோரேசு மன்னன் தன்னை ஒரு வேலைகார ராஜாவாக கண்டார் மேலும் உயிருள்ள தேவனை சேவித்தார். அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வழியில் நாம் அனைவரும் ஊழியகார ராஜாக்கள். கோவிலையும் எருசலேமையும் மீண்டும் கட்டுவதற்கு கோரேசு அபிஷேகம் செய்யப்பட்டது போல பூமியில் கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு நாமும் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய அழைத்தலை முழுமையாக்குவதற்கு பரலோகத்தின் வளங்கள் மற்றும் கர்த்தருடைய சேனை நம்மோடு உள்ளது.
தம் மக்களுக்கு முன்னே செல்வதற்கும் மலைகள் போல பெரியதாக கடக்க முடியாத தைடைகள் வந்தாலும் அவைகளை அகற்றுவதற்கு கர்த்தர் உறுதியளிக்கிறார். எவ்வளவு பலமான கதவுகளாக இருந்தாலும் அவருடைய வல்லமையை தாங்க முடியாது. மறைக்கப்பட்ட பொக்கீஷங்களை நம் கைகளுக்கு கொடுக்க வெண்கல கதவுகள் வழியாககூட அவரால் போக முடியும். இஸ்ரவேலின் தேவனைப் பற்றி எதுவும் தெரியாதபோதும் கர்த்தர் கோரேசை அழைத்ததுபோல தனிப்பட்ட முறையில் நம்முடைய முதல் பெயரைச் சொல்லி நம்மை அழைக்கிறார். அவர் யார், எப்படிப்பட்டவர், அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் அளவு, அவரை நம்புபவர்கள் மீது அவரின் மிகுந்த அன்பு ஆகியவற்றை மிக விரிவாககூறவும் அவரை அறிந்து கொள்ளவும் கர்த்தருடைய வார்த்தை நமக்கு மிகவும் நன்மையாக உள்ளது.
நமக்கு எதிராக எழும்பக்கூடிய எந்த சாத்தானுடைய தீய சக்தியாக இருந்தாலும் அமைதியின் ராஜகுமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் நம்மால் தோற்கடிக்க முடியும். நம்முடைய உள்ளார்ந்த அரண்களாகிய பயம் மற்றும் சந்தேகத்தால் இந்த சக்திகள் நம்மை கொல்லவும் அழிக்கவும் பலவீனபடுத்தவும் முயற்சிக்கின்றன. சில தீய சக்திகள் நம்மைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது இதனால் நமக்கு உள் காயங்கள் ஏற்படுகின்றன. சில நமக்குத் தெரியாமல் தந்திரமாக நம்மிடம் இருந்து ஆசீர்வாதங்களை திருட முயல்கின்றன. சாத்தானின் சக்திகளின் வரிசை 666 அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள், நமக்கு எதிரான தீய செயல்கள் என எண்ணிக்கொண்டே போனாலும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இவை ஒன்றுமே இல்லை. கர்த்தரின் பிரசன்னம் ஒரு மேகத்தைப் போல நம்மைச் சூழ்ந்து கொண்டு, நெருப்பைப் போல நம்மை பாதுகாப்பதாலும், அவர் நம் வலகரத்தைப் பிடித்து நம்முடைய வாழ்வின் எல்லா முக்கியமான பகுதிகளிலும், முடிவுகளிலும் நம்மை வழிநடத்துவதால் 666க்கு மேல் நம்முடைய வெற்றியை நாம் உறுதியாக நம்பலாம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் சராசரியாக ஒன்று முதல் இரண்டு அந்தகார ராஜாக்கள் நம்மை தாக்குகிறார்கள். இவ்வுலகில் நாம் இருக்கும் போதே இந்த தீய சக்திகளின் ஆயுதங்களை உரித்துப் போடலாம், நமக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அவைகளின் சக்தியை செயலற்றுப் போகச் செய்ய முடியம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
கர்த்தரால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ராஜாக்களின் அதிகாரத்தை நாம் பயன்படுத்தும் போது சாத்தானின் கோட்டைகள் இடிந்து விழும், நம்முடைய மன அல்லது உணர்வுகளின் அமைதியை திருட அருகில் கூட அதனால் வர முடியாது, நம்முடைய முழு ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தின் ஆரோக்கியதிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. நம்முடைய வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது, நம்முடைய நற்பெயர், உள் உணர்வுகள், உறவுகள் நம்முடைய நிகழ்காலத்தையோ, எதிர் காலத்தையோ அல்லது நித்திய காலத்தையோ எந்த பாதிப்பையும் அவைகளால் ஏற்படுத்த முடியாது.
Bro. Prateep Philip IPS, DGP(Rtd) Chennai
