தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-11-2023

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு நற்செய்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அந்தகாலத்தில் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு, நியாயப்பிரமாணத்தின் சில பகுதிகளை திரும்பவும் செய்ய வேண்டும் என்று ஒரு தவறான போதனை இருந்தது. பவுல் அதற்கு எதிராக நின்று, இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அல்ல வேறொரு சுவிசேஷம் என்று கூறுகிறார்.

அதே போல் இன்றைய நவீன நாட்களில் செழிப்பின் சுவிசேஷம் என்ற பெயரில் வேறொரு நற்செய்தி வெளிவருகிறது. இது கிறிஸ்துவின் உண்மையான நற்செய்தியைப் போன்றே இருக்கிறது. ஆனால் நற்செய்தியின் பாதி உண்மையை மட்டுமே கூறுகிறது. கிறிஸ்தவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடராக மாறுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்ப சாத்தான் இந்த நற்செய்தியைப் பயன்படுத்துகிறான். இந்த நற்செய்தி மறைக்கும் விஷயங்களைப் பார்ப்போம்.

  1. துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்

1 பேதுரு 4 : 13″ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். “

ரோமர் 8 : 18
” ஆதலால் இக்காலத்து பாடுகள் இனி
நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். “


உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்களில் பங்கு கொள்ள கர்த்தர் நம்மை அழைத்துள்ளார். இந்த துன்பங்கள் மூலம் தான் நாம் கர்த்திரிடம் நெருங்கி வருகிறோம். நமக்கு துன்பங்கள் இல்லையென்றால் நாம் கர்த்தரிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். பேதுரு , இது புதிதல்ல, நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். காரணம் இயேசுவை நேசிப்பவர்களுக்கு எல்லா விஷயங்களும் நன்மைக்காகவே இருக்கும் என்று கூறுகிறார். உங்களுக்கு ஒரு நோய் இருந்தால், அது உங்களை பணிவாக்கும், மேலும் கர்த்தரை சார்ந்திருக்கச் செய்யும். ஒரு ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தால், அது உங்களை கர்த்தர் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். நீங்கள் துன்புறுத்தப்பட்டால், நீங்கள் கர்த்தரிடம் இன்னும் நெருங்கி வருவீர்கள். துன்பங்கள் நம்மைப் பரிசுத்தமாக்கி, கர்த்தரிடம் நம்மை நெருங்கச் செய்யும்.

  1. நான் விரும்புவை அனைத்தும் எனக்குத் தேவையானவை அல்ல.

நம்முடைய கர்த்தர் உங்கள் விருப்பத்தை அல்ல உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார். நீங்கள் விரும்பும் அனைத்தையும் கர்த்தர் உங்களுக்குத் தருவார் என இந்த வசனம் அடிக்கடி தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டவர் நீங்கள் விரும்புகிற அனைத்தையும் தர மாட்டார். ஏனென்றால் அவர் நம்மை விட நமக்கு என்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருக்கிறார். நீங்கள் கேட்பது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு அது தேவையில்லை அல்லது உங்களுக்கு இப்போது தேவையில்லை என்று கர்த்தரை நம்புங்கள். சாத்தான் ஏவாளிடம் வந்தபோது, ​​இப்போதுவரை எல்லா விசுவாசிகளும் விழுந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய பொய்யைச் சொன்னான். தோட்டத்தில் உள்ள பழங்களை எல்லாம் கர்த்தர் சாப்பிடக் கொடுத்தாரா என்று ஏவாளிடம் சாத்தான் கேட்டான். அதற்கு ஏவாள் இல்லை என்று சொன்னபோது, ​​கர்த்தர் உன்னை நேசித்திருந்தால் அந்தப் பழத்தை உனக்கு கொடுத்திருப்பார் ஏனென்றால் நீ அதை உண்ணும்போது நீயும் கடவுளைப் போல் ஆகிவிடுவாய் என்று பொய் சொன்னான். ஆனால் கர்த்தரின் அன்பிலிருந்து எதுவும் நம்பை பிரிக்க முடியாது , கர்த்தர் நான் கேட்பதைக் கொடுக்கவில்லை என்றால், எனக்கு உண்மையில் அது தேவையில்லை அல்லது இப்போது எனக்குத் தேவையில்லை, எனக்கு தேவையானதை அவர் சரியான நேரத்தில் எனக்குத் தருவார் என்ற விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும்.

  1. “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். “

கொலோசையர் 3 : 2
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். “

இந்த செழிப்பின் சுவிசேஷம் நமக்குக் கற்பிக்கும் மற்றொன்று என்னவென்றால் பூமிக்குரியது மற்றும் பூமிக்குரிய சிந்தனை களில் கவனம் செலுத்தி கர்த்தர் விரும்புகிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் நம்மை திசை திருப்புவதாகும்.

இப்போதுள்ள போதனைகள் எல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்தே இருக்கிறது. இன்று நடக்கும் அனைத்து மாநாடுகளும், புதிய தேவாலயங்கள் கட்டப்படுவதற்கும் ,அதற்குரிய நிதி வசூலிக்கப்படுவது இன்றைய திருச்சபை தலைவர்களுக்கோ அல்லது போதகர்களுக்கோ கர்த்தர் கொடுத்த தரிசனத்தில் இது நடக்கிறதா அல்லது சபை தலைவர்களின், போதகர்களின் சொந்த விருப்பமா என்பது தெரியவில்லை. அவர்கள் பௌதிக ஆசீர்வாதங்களுக்கும் பூமிக்குரிய செல்வங்களுக்கும் பிரசங்கித்து, நம்முடைய கர்த்தர் அவருடைய சித்தத்தின்படி வாழ, சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு அளித்த நித்திய ஆசீர்வாதங்களையும் ஆன்மீக ஆசீர்வாதங்களையும் பிரசங்கிக்க மறந்து விடுகிறார்கள். எனவே நாம் சிந்தித்து உண்மையான கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு திரும்புவோம்.ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *