நாள்: 09-05-2023
” வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.”
மத்தேயு 5 : 20
மேற்சொன்ன வேதாகம் வசனமான மத்தேயு 5:20 ன் அர்த்தம் என்ன?
அந்த நேரத்தில் பரிசேயர்கள் மத போதகர்களாக இருந்தார்கள். அவர்கள் மோசேயின் சட்டங்களை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தார்கள். அவர்கள் இப்போதுள்ள மத குருக்களைப் போலவே இருந்தார்கள்.
அவர்களுக்குரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பெரும்பாலும் நயவஞ்சகர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அப்படி இல்லை என்றாலும் , அங்கிருந்த பெரும்பாலோர் அவ்வாறே இருந்தார்கள். ஆனால் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மோசே வழங்கிய சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமும் , விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும் உங்கள் நீதியை உங்களுடைய கிரியைகளினால் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று போதித்தார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் தனது வாழ்நாள் முழுவதும் எந்த பாவமும் அதாவது ஒரு சிறிய பாவம் செய்தால் கூட யாரும் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதாகும்.
யாக்கோபு 2 : 10 கூறுகிறது,
” எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக் கொண்டிருந்தும் , ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் .”
இயேசு வந்தபோது, மக்களுக்கு நற்செய்தியைக் கூறினார். நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்குப் பிரயாசப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவரே அதைச் செய்ய வந்திருக்கிறார் என்று கூறினார். அவர் வந்ததால் நம் தலைவிதி நம் செயல்களால் தீர்மானிக்கப்படாது, ஆனால் கர்த்தரின் கிருபையினாலே நடக்கும்.
அவர்களின் நீதியை எப்படி மிஞ்சுவது?
அது இயேசுவின் மூலம். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தபோது, கர்த்தர் தமது கிருபையினாலேயே இயேசு கிறிஸ்துவை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜெருசலேமில் இருந்தவர்கள் மட்டுமல்ல அவரைக் கொன்றது . அவர்களுடன் நான், நீங்கள் மற்றும் எல்லா மனிதர்களும் இருந்தோம். நம்முடைய பாவங்களால் அவரைக் கொன்றோம். ஆனால் அவர் கூறினார்:
” பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் .”
லூக்கா 23 : 34
இயேசுவின் தியாகத்தின் மூலம் மட்டுமே நாம் நீதியைப் பெற முடியும். நீதிமான்களாவதற்கு அவர் நமக்குக் கொடுத்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து மூலமாக கர்த்தருடைய கிருபையினால் மட்டுமே நாம் நீதியுள்ளவர்களாகும்படி, பாவம் செய்யாத அவரை கர்த்தர் நமக்காக உண்டாக்கினார்.
அதை எப்படி செய்வது? நாம் பாவிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாவிகளுக்காவே இயேசு வந்தார். நீதிமான்களுக்காக அல்ல.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் விசுவாசத்தினால் இந்த நீதி வழங்கப்படுகிறது. யூதருக்கும் மற்றும் புறஜாதியாருக்கும் வித்தியாசம் இல்லை, ஏனென்றால் எல்லாரும் பாவம் செய்து கர்த்தருடைய மகிமையை இழந்துவிட்டார்கள், மேலும் வந்த மீட்பின் மூலம் அவருடைய கிருபையால் அனைவரும் சுதந்திரமாக இயேசு கிறிஸ்துவாலே நீதிமான்களாக்கப்படுகிறார்கள் .
ரோமர் 3 : 22 – 24 ” இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தாலே பலிக்கும் தேவ நீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மீதும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகி ,இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். “
அப்படியானால், இயேசு நமக்குக் கொடுத்ததை, அவருடைய தியாகத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுங்கள், அவர் உங்கள் ஆண்டவராகவும், உங்கள் வழிகாட்டியாகவும், உங்கள் ஆசிரியராகவும், மிக முக்கியமானவராகவும், உங்கள் மேசியாவாகவும் இருக்கட்டும்.
ஜெபம்
இயேசுவே, நாங்கள் பாவிகள் என்று எங்களுக்குத் தெரியும், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய சொந்த செயல்களால் எங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் வாழ்க்கையில் நீர் வந்து அதை மாற்றும் . நாங்கள் ஒரு புதிய மனிதனாக புதிய படைப்பாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் உமக்கு எங்கள் வாழ்வைக் கொடுக்கிறோம், அதைக் கொண்டு நீர் உமது சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றும் . ஆமென்.
Sol. டாக்டர் மோகன் பர்மர்.
