நாள்:11-04-2023
மனந்திரும்புதல்
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்.”
லூக்கா 5 : 32
நான் மேலும் செல்வதற்கு முன், மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது முக்கியம்.
பழைய ஏற்பாட்டில், மனந்திரும்புதலைப் புரிந்துகொள்ள இரண்டு எபிரேய வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. முதலாவது ” நாச்சம் ” அதாவது திரும்புதல் அல்லது மனதை மாற்றுதல். இரண்டாவது வார்த்தை
” சப் “. இதன் மொழி பெயர்கப்பட்ட வார்த்தைகள், “திரும்பு” , “தேடுதல்” அல்லது “மீட்பு “ போன்ற வார்த்தைகளாகும். “உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடம் திரும்புங்கள்” போன்ற வசனங்களை நாம் அடிக்கடி வேதாகமத்தில் பார்க்கலாம்.
நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது,
” மெட்டானொயா ” என்ற கிரேக்க வார்த்தையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் “மனதை மாற்றுவது” என்பதாகும். மனந்திரும்புதல் என்பது ஒரு விஷயத்தைப் பற்றிய ஒருவரின் மனதை மாற்றுவதைக் குறிக்கிறது . நீங்கள் முதலில் ஒரு வழியில் யோசித்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் எதிர் வழியில் யோசிக்கிறீர்கள். அதுதான் மனந்திரும்புதல் . அதாவது மனம் மாறுதல்.
2 நாளாகமம் 7:14
“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்போது பரலோகத்திலிருக்கிற நான் அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.
இன்று மக்கள் பாவம் செய்துவிட்டு புன்னகையோடு , கைகளை மேலே உயர்த்தி “ உங்களை அன்பு செய்கிறேன் கர்த்தாவே ” என்று வணங்குகிறார்கள். நீங்கள் பாலியல் குற்றங்களை செய்தீர்கள் என்றால் மீண்டும் கடவுள் பயம் இல்லை என்பதுதான் அர்த்தம்.
இதைத்தான் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. நீங்கள் ஒரு சபையின் உறுப்பினரை ஏமாற்றிவிட்டு, அந்த நபரை ஏமாற்றிய பணத்திற்கு நன்றி செலுத்துகிறீர்கள்.
“மனந்திரும்புதல்” வேண்டும். உண்மையான
மனந்திரும்புதல் என்பது தீய எண்ணங்களை நினைப்பதற்கு கூட, ஒருவர் வருந்த வேண்டும்!.
இதை எப்பொழுதும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வருந்தாத பாவம் உங்களை மூழ்கடிக்கும், அது உங்கள் விதியை மூழ்கடிக்கும். நீங்கள் பாவம் செய்து அதை மீண்டும் உணராத தருணத்தில், நீங்கள் நிச்சயமாக ஆபத்தில் இருக்கிறீர்கள். ஏனென்றால் அது உங்கள் மனசாட்சியைக் கொன்றுவிடும். மேலும் சரிக்கும் மற்றும் தவறுக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் மீண்டும் அறியமாட்டீர்கள்.
மனந்திரும்பு ! மனந்திரும்பு !
ஒவ்வொரு முறையும் நீங்கள் தீமை செய்யும்போது, உங்கள் மனசாட்சி உங்கள் மனதை உணர்த்தும் போது, கர்த்தாவே என்னை மன்னியும், மீண்டும் பாவத்தில் விழாமல் இருக்க எனக்கு அதிகாரம் தாரும் என்று சொல்லுங்கள்.
உங்களை நீங்கள் அறிவீர்கள். மனந்திரும்பி நிதானமாக இருங்கள்.
1 ராஜாக்கள் 21: 25-29 வரையுள்ள வசனங்களில் ஆகாப் என்று அழைக்கப்படும் ராஜாவின் கதை உள்ளது . வேதாகமம் , ஆகாபைப் போல அக்கிரம வேலைக்கு தன்னை விற்றுக்கொண்டவர் இல்லை என்று கூறுகிறது. அவர் துன்மார்க்க மனிதராக உருவகப்படுத்தப்பட்டார். மனைவி தீமை செய்வதில் ஆராய்ச்சி அதிகாரி.
ஆகாபுக்கு ஒரு பிரச்சனை வந்த போது அதை அவன் மனைவிக்கு கொடுக்க அவள் அதை முடித்துக் கொடுத்தாள். அவன் எப்படிப் போகிறான் என்று அவள் கணக்கிட்டு ஒழுங்கமைப்பாள். ஆனால் ஒரு நாள் தீர்க்கதரிசி ஆகாப்பைப் பார்த்து கர்த்தருடைய நியாத்தீர்ப்பு உன்மேல் வருகிறது என்று சொன்னார். ஆகாப் அந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவன் தன் ஆடைகளை கிழித்துக்கொண்டு, மிகவும் தாழ்த்தினான் . அவன் உண்மையாக மனந்திரும்பியதால், கர்த்தர் அவனை மன்னித்தார்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதது போல் பாசாங்கு செய்யாதீர்கள். நீங்கள் எப்படி பொய் சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உடல் முழுவதும் தெரியும் போது தீக்கோழி போல் தலையை திருப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
மனந்திரும்புங்கள். உண்மையான மனந்திரும்புதல் மீண்டும் வரட்டும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாதது போல் பாசாங்கு செய்ய தைரியமான முகத்தைப் பயன்படுத்த வேண்டாம். வாரயிறுதியில் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், ஞாயிற்றுக்கிழமை நடனமாட தேவாலயத்திற்கு வருகிறீர்கள்.
உண்மையான மனந்திரும்புதலுக்குத் திரும்புவோம்.
எசேக்கியேல் 18 : 24
” நீதிமான் தன் ஙநீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின் படியும் செய்வானேயாகியேல் அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.” உங்கள் இதயம் உணரும் தருணத்தில், ஆண்டவரே, மன்னியும் எனக்கு உதவும் கர்த்தாவே என்று நம்முடைய பாவத்தை நாம் ஒப்புக்கொண்டால், அவர் நம்மை மன்னித்து, நம்முடைய அநீதியிலிருந்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு உண்மையும் நீதியும் உள்ளவர்.
மாற்கு 11 : 25 “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது , ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருந்த உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி , அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். “
உங்களது ஜெபம் ஆவிக்குரிய வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மறுபுறம் பாவம் ஜெபத்தின் மீது மந்தமான அணுகுமுறையை உருவாக்குகிறது. அதனால்தான் ஜெபம் மக்களைப் பாவத்திலிருந்து காக்கிறது என்றும், பாவம் மக்களை ஜெபிக்கவிடாமல் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஜெபத்தின் வாழ்க்கையும் பாவத்தின் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. பாவம் செய்வதற்கான முடிவு ஜெபத்திற்கு எதிரான முடிவு . ஜெபிக்கும் முடிவு பாவத்திற்கு எதிரான முடிவு. உங்கள் ஜெப வாழ்க்கையைத் தாக்குவதே பாவத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதே இதன் பொருள்.
எனவே என் அன்புச் சகோதர சகோதரிகளே, ஜெபம் செய்யும் இடத்தில் ஆவிக்குரிய பிரசன்னத்தைக் காத்துக்கொள்வதற்காக, பாவ வாழ்க்கையை வாழாமல் இருக்க மனதை உறுதி செய்வோம்.பரலோகத்தில் நித்திய வாழ்வை உருவாக்குவதிலிருந்து நம்மைத் தடுக்கும் எந்தப் பாவத்திலிருந்தும் மனந்திரும்புங்கள். தவறான சகவாசத்தையும், நம் ஒவ்வொருவரையும் பாவத்திற்கு இட்டுச் செல்லும் ஒவ்வொரு சோதனையையும் தவிர்ப்போம்.
ஜெபம்.
கர்த்தாவே, என் ஜெப வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த எந்த பாவத்திற்கும் மன்னிப்பு கேட்கிறேன். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் ஒரு உற்சாகமான ஜெப வாழ்க்கையை உருவாக்கவும் அதை பராமரிக்கவும் எங்களுக்கு உதவும். ஆமென்.
Sol. ஃபியானா.
