தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-03-2023

கண்ணீர், பயம்  மற்றும் சந்தேகங்களின் மத்தியில் கிறிஸ்துவில் நம்பிக்கை

“வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20 : 19 – 23

 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.”

யோவான்  20 ம் அதிகாரம்  மனித வாழ்க்கையின் மூன்று அடிப்படை  பிரச்சனைகளைப்பற்றி  குறிப்பிடுகிறது.

யோவான் 20 : 18 கண்ணீரைப் பற்றி குறிப்பிடுகிறது.

யோவான் 20 : 19 – 23 பயத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.

யோவான் 20 : 24 ம் வசனம் முதல் சந்தேகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.

இந்த அதிகாரத்தில் பயம், கண்ணீர், சந்தேகத்தின் மத்தியில் , நாம் அன்றாடம் வீட்டில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் இயேசு  நம்பிக்கையின் செய்தியைத் தருவதைக் காணலாம். இது உயிர்த்த இயேசுகிறிஸ்துவின் வல்லமையைப் பற்றியது. இதுவே பயம், கண்ணீர், சந்தேகம் ஆகியவற்றை மேற்கொள்ளுவதன் நம்பிக்கை.

 யோவான் எபேசு சபைக்கு

எழுதிய புத்தகம், இயேசு செய்தவற்றை புகழ்ந்து பாடுவதிலிருந்து  தொடங்குகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அவரது உடல் கல்லறையில் வைக்கப்பட்டது குறித்து இங்கு எழுதப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டும் சம்பவமாகும். இந்த சம்பத்திற்கு முதலில் இயற்கையான பதில் கண்ணீர். மேலும் கண்ணீரின் மத்தியில் எங்களுடன் சேர்ந்து கண்ணீர் விட்ட இயேசுவுக்காக பணி செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அனுபவிக்கின்ற வேதனையை அவர் புரிந்து கொள்வார். கண்ணீர், பயம், மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் இயேசு எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்ப்போம். நம் எதிர்பார்ப்பைத் தாண்டி அவர் செயல்படுகிறார்.

யோவான் 19 ல் மரிய மகதலேனாள் கல்லறையின் முன்பு அழுகிறாள். கல்லறை இருட்டாய் இருந்தபோதிலும் அதனுள் ஓடுகிறாள். இங்கே இருள் என்பது யோவான் நற்செய்தியில் சந்தேகத்தின் குறியீடு. அந்த சூழ்நிலையில் மரணத்தைத் தவிர அவள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. மரணத்தை தாண்டிய வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாமல் சுற்றயிருந்த அனைவரும் அதே , இயற்கையான ஒன்றையே எதிர்பார்த்தார்கள். மகதலேனாள் மூடியிருந்த கல்லறையை எதிர்பார்த்தாள் , ஆனால்  அது திறந்திருப்பதைக் கண்டாள். அவள் கண்ணீரிலும் சந்தேகத்திலும் இருந்த நிலையில் , இயேசு அவள் அருகில் வந்து அவள் பெயரைச் சொல்லி அழைத்தபோது அவள் இயேசுதான் அழைக்கிறார் என்று உணர்ந்து கொண்டாள். அவருடைய அந்த வார்த்தையிலிருந்து , இயேசு நம் ஒவ்வொருவருடனும் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சாதாரண சூழ்நிலையும் இயேசுவால் அசாதாரண சூழ்நிலையாக மாறமுடியும். உதாரணமாக தண்ணீர் திராட்சை ரசமாக மாறியது. பள்ளத்தாக்கிலுள்ள உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று சேனையாக மாறியது. பெதஸ்தா குளத்தருகே இருந்த மனிதன் குணமானான்.

எனவே நம்முடைய சாதாரண எதிர்பார்ப்புகளில் கர்த்தரின் வல்லமையை குறைக்கக் கூடாது.

கர்த்தர் நம் பயங்களுக்கு மத்தியில் உறுதியளிக்கிறார், ஆணையிடுகிறார் மற்றும் அதிகாரமளிக்கிறார். சீடர்கள் அச்சத்தில் இருந்தனர். என்ன நடக்கும் என்று தெரியாமல் கதவுகளுக்குப் பின்னால் இருந்தனர். ஆனால் முடிய கதவுகளை கர்த்தர் கவனிப்பதில்லை. கர்த்தர் மோசே , ஆபிரகாம், தானியேல் மற்றும் பலருடன் இருந்தார். அவர் நம்முடனும் இருப்பார் என்று உறுதியளிக்கிறார்.

அவர் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார்.  எப்படி?

மத்தேயு 28 : 20

” இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடு கூடவே இருக்கிறேன். ”  என்று

அவர் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.

தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க தன் காயங்களைக் காட்டுகிறார்.

பயமில்லாமல்  அதிகாரம் செலுத்தக்கூடிய , ஆணையிடக்கூடிய பயம் நிறைந்த சமூகத்தை நாம் பார்க்கிறோம் . பழைய ஏற்பாட்டில் ஆதாமுடைய நாசியில் சுவாசித்ததைக் காண்கிறோம் , இங்கே இயேசு சீடர்கள்மீது சுவாசித்ததைக் காண்கிறோம். எனவே பயத்தின் மத்தியில் கர்த்தர் அதிகாரம் மற்றும் ஆணையிடுதலின் மூலமாக தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்துகிறார்.

கர்த்தர் தம்மை வெளிப்படுத்தி  நம்முடைய சந்தேகங்களின் மத்தியிலும் அவர்மீது நம்பிக்கை வைக்க கேட்கிறார். தோமா மட்டுமே இயேசுவை சந்தேகப்பட்ட ஒரு மனிதன் என்பதை இங்கே காண்கிறோம். அந்த சந்தேகத்தில் இயேசு தோமாவுக்கு தன்னை வெளிப்படுத்தினார். வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானுக்கு தம்மை அல்பா, ஒமேகாவாக வெளிப்படுத்தினார்.  எனவே நம்முடைய  சந்தேகங்களின் மத்தியில் அவர்மீது நம்பிக்கை கொள்வது அவசியம்.

பரலோகத் தந்தையே, எங்களுடைய தினசரி வாழ்க்கையில்  எல்லா கண்ணீர்கள் , பயங்கள் , சந்தேகங்களின் மத்தியில் உம்மீது நம்பிக்கை வைக்க கிருபை புரியும். ஆமென்.

Sol.  ஷிபு ஷாலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *