நாள்: 10-03-2023
கிறிஸ்துவுக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருந்து நம்முடைய சகோதரத்தை மேம்படுத்துதல்.
நாம் நல்லதோ, கெட்டதோ என்ன நடந்தாலும் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும். அப்பா பிதா நமக்கு கற்றுக் கொடுக்கிறார். சரியான நேரத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். சில சமயங்களில் நமக்கு சில சோதனைகளை துன்பங்களைத் தருகிறார். ஆனாலும் அவர் நம்மைவிட்டு விலகுவதில்லை.
மனிதகுலத்திற்கு நேரிடுகிற பொதுவான சிலவற்றைத் தவிர வேறு எந்த சோதனையும் நமக்கு நேரிடுவதில்லை. கர்த்தர் உண்மையுள்ளவர். உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர் உங்களை சோதிக்க விட மாட்டார். ஆனால் நீங்கள் சோதிக்கப்படும்போது அதை தாங்கிக் கொள்ள அவர் ஒரு வழியையும் தருவார்.
1 கொரிந்தியர் 10 : 13
மத்தேயு 4 : 1 – 11 வரையுள்ள வசனங்களை வாசிக்கும் போது, இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக பரிசுத்த ஆவியினால் பாலைவனத்திற்கு கொண்டுபோகப்பட்டார். நாற்பது பகலும் நாற்பது இரவும் உண்ணா நோன்பு இருந்ததால் பசியுடன் இருந்தார். பிசாசு அவரிடம் வந்து நீர் பிதாவின் குமாரனாக இருந்தால் இந்தக் கற்களை அப்பங்களாக மாறக் கட்டளையிடும் என்றான்.
எபிரேயர் 2 : 17 – 18
" அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக, தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால் அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருந்தார். "
எல்லா சூழ்நிலைகளிலும் எப்பொழுதும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.
1 தெசலோனிக்கர் 5 :18
” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. “
எபேசியர் 5 : 20 ” நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரித்து, “
சங்கீதம் 106 : 1 “அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள் , அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது “
பிலிப்பியர் 4 : 6 ” நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டிதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். “
சங்கீதம் 107 : 1
” கர்த்தரைத் துதியுங்கள் , அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. “
உங்களது சபையில் உடனிருக்கும் உங்கள் சகோதரர்களை மேம்படுத்துதல்.
சில நேரங்களில் நம்முடைய வழிகாட்டிகள் , உடன்பணிபுரிபவர்கள் , சகோதரர்கள், நம்மை கர்த்தருக்குள் வளர கடினமாக வேலை செய்தவர்கள் ஆகியோருக்கு நாம் நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம். உடலின் சகல பாகங்களும் சரியாக வேலை செய்யவேண்டும் என்பதால் நாம் ஒன்றிணைந்த சபையை உருவாக்க வேண்டும் .
நீங்கள் மற்றவர்களிடமிருந்து அல்லது சபையிலுள்ள சகோதரர்களிடமிருந்து ஒரு உதவியைப் பெற்றால் அவர்களுக்கு நன்றி செலுத்த, அவர்களுக்கு ஜெபிக்க மறந்து விடுகிறீர்கள். இது உங்களது கடமை . உங்களுக்கு பணி செய்யவேண்டும் , உங்களது கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஒரு பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் , நீங்கள் அவருக்கு எந்த உதவியும் செய்ய மாட்டீர்கள். எல்லா சுமைகளையும் அவர் மேல் சுமத்துகிறீர்கள். சுமை சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு சபையின் உறுப்பினராக அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களை கட்டமைக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ரோமர் 14 : 19 ” ஆதலால் சமாதானத்துக்கு அடுத்தவைகளையும், அந்நியோன்ய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.”
1 தெசலோனிக்கர் 5 : 11
” ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே , ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.”
2 தெசலோனிக்கேயர் 3 : 13. “ சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள்.”
ஜெபம்
அப்பா, பிதாவே , உங்களுக்கு நன்றி இல்லாமல் இருந்ததற்காக , எங்கள் பாவங்களுக்காக, எங்களது புறக்கணித்தலுக்காக, எங்கள் சகோதரர்களுடைய கடின உழைப்பு மற்றும் தியாகத்தை மதிக்காமல் இருந்ததற்காக , மற்றவர்கள் செய்த வேலையின் முழு பலனை நாங்கள் அனுபவித்ததற்காக , மற்றவர்களுடைய சுமையில் பங்குகொள்ளாமலும், அவர்களுக்கு உதவி செய்யாமலும் இருந்ததற்காக, எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு முதலாளியாக இருந்ததற்காக, பிறர் செய்தவைகளுக்கு நன்றி பாராட்டாமல் இருந்ததற்காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மன்னிப்பு கேட்கிறோம். மன்னியும் இயேசுவே.நன்றியின் ஆவியை எங்களுக்குத் தாரும். எங்கள் வாழ்க்கையில் மற்றவர்களை எழுப்ப பரிசுத்த ஆவியானவரே எங்களுக்கு கற்றுத் தாரும்.பரிசுத்த ஆவியானவர், கர்த்தருக்கும் , நம் சகோதரர்களுக்கும் நாம் செய்த எல்லா தவறுகளுக்கும் நம்மை உணர்த்துகிறார். ஒவ்வொருவர் வளரவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நல்ல பணியாளராக இருக்கவும் , நாம் ஒன்றிணைந்து இயேசுகிறிஸ்துவின் உடலாகிய சபையைக் கட்டவும் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுத் தருகிறார். ஆமென்.
Sol. ஷாஜி தாமஸ்.
