நாள்: 29-01-2023
1 பேதுரு 1 : 16 ” நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. “
மேற்கூறிய வசனத்திலிருந்து பரிசுத்தம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ளலாம்.
எண்ணாகமம் 20 : 12
” பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி : இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக , என்னை பரிசுத்தம் பண்ணும்படி , நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.”
இந்த வசனங்கள் நமக்கு , மோசேயும் ஆரோனும் கர்த்தரை நம்பவில்லை எனவே அவர்கள் கர்த்தரால் அனுமதிக்கப்படவில்லை என்பதை தெளிவாகச் சொல்கிறது. மோசேயும் எல்லா இஸ்ரவேலர்களும் கானானுக்குப் போகும் வழியில் மோசேயிடமும் ஆரோனிடமும் தண்ணீர் கேட்டு அவர்களுக்கு எதிராக புகார் செய்தார்கள். அதன் விளைவாக மோசேயும் ஆரோனும் கர்த்தரிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தர் அவர்களது வேண்டுகோளுக்கு செவிமடுத்து , மோசேயின் கோலை எடுத்து பாறையிடம் பேசும்படி சொன்னார்.
எண்ணாகமம் 20 : 8
” நீ கோலை எடுத்துக் கொண்டு , நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரை கூடி வரச் செய்து , அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்து பேசுங்கள் , அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும் , இப்படி நீ அவர்களுக்கு கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி , சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். “
எண்ணாகமம் 20 : 10 – 11
” மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச் செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி கலகக்காரரே, கேளுங்கள் , உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா என்று சொல்லி தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான் . உடனே தண்ணீர் புறப்பட்டது . சபையார் குடித்தார்கள், அவர்கள் மிருகங்களும் குடித்தது.
மோசே கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்படியவில்லை , பாறையிடம் பேசுவதற்குப் பதிலாக இரண்டுமுறை தட்டினான். இரண்டாவதாக அவர் இஸ்ரவேலர்களை கலகக்கார தேசம் என்று குறிப்பிட்டார். இஸ்ரவேலர்களுக்கு முன்பாக அவர்களுக்கு இரக்கம் காட்டியதற்காக மோசே கர்த்தருக்கு நன்றி செலுத்தவில்லை. அவர்களுக்கு இரக்கமோ அல்லது அவர்களை மன்னிக்கும் தன்மைமையையோ காட்டவில்லை. இதுவே கர்த்தருக்கு மோசே மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே கர்த்தரின் வழிகாட்டுதல்களை முழுமையாக சார்ந்திருந்த யோசுவா மற்றும் காலேப்பை இஸ்ரவேலர்களின் தலைவர்களாக தேர்ந்தெடுத்தார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு ஒருபோதும் எந்த அற்புதத்தின் புகழையும் தாம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் அற்புதத்தை தேடும் மனிதனுடைய விசுவாசத்திற்கும் கர்த்தருக்குமே அந்த புகழை கொடுத்தார். இயேசு எப்போதும் கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றியே போதித்தார். கர்த்தருடைய நீதியையும் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றும் இயேசு போதித்தார். உதாரணமாக இயேசு மரியாளின் சகோதரனாகிய லாசரை உயிர்ப்பித்தபோது , முதலில் பிதாவிடம் ஜெபித்தார், பின்னர் அவரை எழுப்பும்படி கேட்டார். அவ்வாறே நாமும் நம்மைத் தாழ்த்தி நன்றியுள்ள இதயத்துடன் ஜெபிக்க வேண்டும்.
ஜெபம்
பிதாவே, உம்மிடம் எப்படி பேசுவது , உம்மிடம் எப்படி ஜெபிப்பது என்பதை எங்களுக்கு காட்ட உமது மகன் இயேசுவை அனுப்பியதற்கு நன்றி செலுத்துகிறோம். தயவோடு பிறருக்காக பரிந்து பேசுவதை இயேசு நமக்கு காட்டினார். மற்றவர்களிடம் பணிவாகவும் அன்பாகவும் இருக்க எங்களுக்கு உதவும்படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
Sol. குஷி
