தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-11-2023

அணிசபை வீரர்களே கர்த்தரை மகிமைப் படுத்துங்கள்.

இன்று கர்த்தர் தானியேல் 1 ம் அதிகாரத்தின் வழியாக என்னுடன் பேசினார்.

தானியேல் 1 : 4

 ” அவர்களுக்கு கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக் கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கற்பித்தான்.”

இன்று இந்த நற்செய்தியைக் கேட்டு எமது படையணி வீரர்கள்  மகிழ்ச்சியடைவார்களாக.

தானியேல் 1 : 9

 ” தேவன் தானியேலுக்கு பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும்  கிடைக்கும் படிச் செய்தார். “

இங்கே தானியேல் அரசாங்க அதிகாரிகளின் தயவைக் காணும் அணி வீரராக உள்ளார்.   நீங்கள் எந்த அரசாங்க வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம், உங்களுக்கு அது மிகவும் சாதகமாக இருக்கும்.

தானியேல் 1 : 8

 ” தானியேல்  ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சை ரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு தன்னை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டான். “

தானியேல் 1 : 17

“இந்த நான்கு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். “

தானியேல் 1 : 20

” ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களை கேட்டு விசாரித்தானோ , அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களை பத்து மடங்கு சமர்த்தராகக்  கண்டான். “

ஏசாயா 60 : 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *