தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-08-2023

நீதிமொழிகள் 19 : 21
” மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் : ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும். “

நீங்கள் தோல்வியுற்ற கனவுகளின் மத்தியிலும்
மெதுவான வளர்ச்சி, அல்லது திக்கற்ற நிலையில் குழப்பத்தின் நடுவில் இருப்பவரா?
ஒரு உண்மையுடன் உங்களை ஊக்குவிக்கிறேன்.
நீங்கள் எங்கிருந்தாலும், எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் கர்த்தருடைய நோக்கமே மேலோங்கும்.
கர்த்தரை நோக்கி , முன்னால் அடியெடுத்து வைப்பது அச்சுறுத்தலாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ தோன்றினாலும்,
இறுதியில் எல்லாமே நன்மையாகவே முடியும்.

நீங்கள் இப்போதைக்கு ஒரு சோர்வான பயணத்தில் இருக்கலாம், ஆனாலும், நீங்கள் மனம் தளராமல் இருக்க , கர்த்தருடைய இதயத்தை நோக்கி பார்ப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆண்டவரின் உண்மையான இருதயம் தம் பிள்ளைகளுக்கு வருகிற எந்த ஈவையும் தடை செய்யாது.

கர்த்தர் எல்லாவற்றையும் அதன் நோக்கத்திற்காக உண்டாக்கினார் நீதிமொழிகள் 16 : 4
” கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார். “பிரசங்கி 8 : 6 ” எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு. “
இக்கட்டான சமயங்களில், கர்த்தரை நோக்கிக் காத்திருக்கும்போது, அவர் நமது ​​இருதயங்களைப் பலப்படுத்துவது நிச்சயம். தம்மீது நம்பிக்கை வைப்பவர்களை அவர் நம்பி ஒப்படைக்கும் காரியங்களுக்காகத் தயார்படுத்துகிறார். அதே சமயம் மிக முக்கியமான காரியத்தைச் செய்கிறார். அதாவது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை நோக்கி ஒருவரின் குணத்தைச் செம்மைப்படுத்துகிறார்.

இக்காலத்திலும் இனிவரும் காலங்களிலும் கர்த்தருடைய மகிழ்ச்சி உங்களின் பலமாக இருக்கட்டும்.1 கொரிந்தியர் : 2 : 9
" தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை , காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.

Sol. யோலந்தா சவரிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *