நாள்: 18-05-2023
மீகா 2 : 13″ தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்து கடந்து போவார்கள்.அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகக் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார் .”
இந்த வாக்குத்தத்தத்தின் மூலம் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுகிறது. கர்த்தர் ஒரு தடையை உடைப்பவர். (அதாவது சங்கிலியை உடைப்பவர்), ஒரு வலுவான பிடியை அழிப்பவர் மற்றும் ஒரு வழியை உருவாக்குபவர். இஸ்ரவேலின் பாவங்கள் கர்த்தரின் கடுமையான தண்டனையை அவர்கள் மீது கொண்டு வரப் போகிறது என்று மீகா தீர்க்கதரிசனம் கூறினார். இது இன்று நமக்கு ஒரு எச்சரிக்கை.பாவம் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது.ஆனால் சுவிசேஷம் அறிவிப்பதில் நல்ல விஷயம் என்னவெனில், நம் பரலோகத் தந்தை ஒருவரை மக்களுக்கு ராஜாவாக நியமிப்பார் என்பதுதான். இந்த ராஜா கர்த்தரின் மக்களை சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். இந்த ராஜாவை நாம் “உடைப்பவர் அதாவது மீறுதல்களை திறப்பவர்” என்று அழைக்கலாம். அவர் தனது மக்களை சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். இது அவரது மக்களுக்கு, இரட்சிப்பின் தேவனுடைய வாக்குறுதி.
சில சமயங்களில் நாம் சில சவாலான அனுபவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடைத்துக்கொண்டு மக்களுக்கு முன்னால் செல்லும் அரசன் வேறு யாருமல்ல, கர்த்தரே. கிறிஸ்து பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மீகா தீர்க்கதரிசனம் கூறியது, இயேசு கிறிஸ்துவால் நிறைவேறியது. அவர் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கப் பிறந்தார்.
லூக்கா 4 : 18
”கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார். தரித்திரருக்குச் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையையும் , குருடருக்கு பார்வையையும் பிரசித்தப்படுத்தவும் மீட்டெடுக்கவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் அவர் என்னை அனுப்பினார்.”
ராஜாவாகிய நம் தலைவர் நம் பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு முன் செல்கிறார். நமது பாதையில் உள்ள தடைகளை நீக்கும் ஞானமும், சக்தியும், வலிமையும் அவரிடம் உள்ளது.
1 கொரிந்தியர் 1 : 24″ ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்து தேவ பலனும் , தேவனு ஞானமுமாயிருக்கிறார்.”
அவர் ராஜாவாகவும் பணியாளராகவும் இருக்கிறார். அவர் துன்பத்தின் பாதைகளில் நடந்து, நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார்.
ஒரு கதவு திறப்பதற்கு விசுவாசம் தேவை. இயேசு தம்மை நித்திய ஜீவனுக்கு வாசல், இரட்சிப்பின் வாசல் என்று அறிவித்தார். அவர் எல்லாவற்றையும் கடந்து வந்தவர், நம்மையும் அவ்வாறு கடந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு கஷ்டமும் சவாலும் கர்த்தர் நமக்காக உடைக்கும் வாயிலாகவும் கதவுமாகவும் இருக்கிறது.
யோவான் 14 : 6
“இயேசு அவனை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார்.
நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.இறுக்கமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அவர் தம்முடைய தூதர்களை நமக்கு அனுப்புவார். நாம் மற்றவர்களின் கருத்துகளை நம்பாமல் அல்லது உலகத்துடன் சமரசம் செய்துகொள்ளாமல் கவனமாக இருப்போம், மட்டுமல்லாது இறைவனின் வாக்குறுதிகளை முழுமையாக சார்ந்திருப்போம்.
ஜெபம்.
சவாலான அனுபவங்களை பொறுமையாக சகித்துக் கொள்ளவும், உமது வாக்குறுதிகளை மட்டுமே நம்பி வாழவும் எங்களுக்கு ஞானத்தையும், சக்தியையும், பலத்தையும் தந்தருளும்படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்
Sol. ஜிஜி ஜேக்கப்