தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-05-2023

கர்த்தரின்  பரிபூரண சித்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கு அடிபணிதல்

கலாத்தியர் 5 :24″கிறிஸ்துவினுடையவர்கள்  தங்கள்  மாம்சத்தையும்  அதின் ஆசை  இச்சைகளையும்   சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.”

நம்முடைய சொந்த விருப்பங்களையும் ஆசைகளையும் சிலுவையில் அறைவது பற்றி நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? 

நிறைய நேரங்களில் ,  நமது வாழ்க்கையில் கர்த்தரின்  நோக்கம் என்ன? அல்லது கர்த்தரின் விருப்பப்படி நான் என் வாழ்க்கையை நடத்துகிறேனா என்பது நமக்குள் இருக்கும்  ஒரு பெரிய கேள்வி.

வேதாகமத்தில் 1 யோவான் 5 :14 ல் இவ்வாறு  கூறுகிறது

” நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவி கொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். “

நமது ஜெபங்களில் , நாம்  கர்த்தரின் விருப்பப்படி ஜெபிக்கிறோமா? அல்லது நமது சொந்த  விருப்பத்தின்படி ஜெபிக்கிறோமா? அல்லது நமது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று ஜெபிக்கிறோமா ? என்று  நாம் அடையாளம் காண வேண்டும்.

நம்மில் சிலர் நினைக்கலாம் அல்லது கீழே உள்ள வசனத்தை மேற்கோள் காட்டி நான் கர்த்தரிடம் தவறாக அல்லது பாவத்திற்கேதுவான  எதையும் கேட்கவில்லை என்று கூறலாம்.

யாக்கோபு 4 : 3 ” நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் , ​​​​உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள். “

 நம் ஜெபம், தீமைகளைப் பற்றி அல்லாமல் நல்ல விஷயங்களைப் பற்றி இருக்கலாம், ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் நம் வாழ்வில் கர்த்தரின் விருப்பமாக இருக்காது.  இந்த புரிதல் இல்லாமல் சில சமயங்களில் நாம் கர்த்தரின் விருப்பத்தை விட்டு விலகி, நம் சொந்த விருப்பப்படி செயல்படுகிறோம் . சில சமயங்களில் இவைகள் நாம் எதிர்பார்த்தபடி நடக்காதபோது விரக்தியும் வருத்தமும் அடைகிறோம்.

ஒரு வேதாகம ஆசிரியர் ஒருமுறை கர்த்தருடைய  சித்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று  குறிப்பிட்டார் .  உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் நல்ல உறவை வைத்திருக்கும்போது ,  துணையுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். அதுபோலவே நாம்  ​​இயேசுவோடு அதிக நேரம் செலவழிக்கும்போது  அவருடன் நல்ல உறவை வைத்திருக்கிறோம். அதன்மூலம்  நம் வாழ்க்கையில் கர்த்தருடைய  விருப்பத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். 

என் வாழ்க்கையில் நான் திருமணத்திற்கு மணமகளைத்  தேடிக்கொண்டிருந்தபோது எனது  மனதில் நிறைய குழப்பங்கள் இருந்தன. இதனால் என் திருமணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. கர்த்தர்  என்னை சரியான நபருக்கு வழிநடத்துவார்  செல்வார் என்ற விசுவாசம்  எனக்கு இருந்தது, ஆனால் அது யாராக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க கடினமாக இருந்தது.

என்னுடைய உறவினர் ஒருவர் கர்த்தருடைய சித்தத்திற்கு என்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கவும், என்னுடைய ஆசைகள் அனைத்தையும் விட்டுவிடவும் எனக்கு வழிகாட்டினார்.  நான் இரட்சிக்கப்படுவதற்கு  முன்  நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன், மேலும் எனக்குள் நிறைய விஷயங்களை மனதில் வைத்திருந்தேன், மட்டுமல்லாமல் அதை  ரகசியமாக விரும்பவும் செய்தேன். வெளியில் எனக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை, ஆனால் என் இதயம்  அந்த விஷயங்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.  நான் இதற்கு முன்பாக நிறைய திருமணங்களில் கலந்து கொண்டேன்,  திருமணங்களைப் பற்றி நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டேன் . அது என்னை ஒரு அளவுகோல் நிர்ணயிப்பதற்கும், கர்த்தர் என்னிடம் என்ன விரும்புகிறார் என்று தெரிவதற்கும் அதற்காக ஜெபிப்பதற்கும் வழி நடத்தியது.

நான் இதைப் புரிந்துகொண்டபோது நான் கர்த்தரின் பரிபூரண சித்தத்திற்கு அடிபணிந்தேன், என் சொந்த ஆசைகள் அனைத்தையும் சிலுவையில் அறைந்தேன்.  எனது திருமணம் ஒரு பெரிய தேவாலயத்தில் இருக்க வேண்டும் என்றும் மேற்கத்திய பாணியில் இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன், மேலும் அனைத்து ஏற்பாடுகளும் எவ்வளவு சிறப்பாக செய்யப்பட்டன என்பதைக்குறித்து  அனைவரும் பெருமைப்படுத்த வேண்டும் என்று  விரும்பினேன்.  என் மனைவி உன்னத குணம் கொண்டவர்களாகவும் அதே சமயம் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.  ஆனால் கர்த்தரின் பரிபூரண சித்தத்திற்கு நான் அடிபணிந்தபோது, ​​இந்த ஆசைகளை எல்லாம் என் இருதயத்திலிருந்து விலக்கி விட்டு , அவற்றை  சிலுவையில் அறைந்து, என் திருமணம் நடக்க வேண்டும் என்று நீர் விரும்பும் வழியில் எனக்கு வழிகாட்டும்  என்று கர்த்தரிடம் கேட்டேன். ஆனால்  ஆச்சரியமாக கர்த்தர்  நான் முன்பு விரும்பிய அனைத்தையும் எனக்கு  கொடுத்தார். ஆனால் இந்த முறை நான் அதை விரும்பவில்லை, ஆனால் கர்த்தர்  எனக்கு கொடுத்தார்.  கர்த்தர்  எப்போதும் நம் வாழ்வில் சிறந்ததைத் தருகிறார், ஆனால் நம் வாழ்வில் நடக்கும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாம் எப்போதும் கோராமல், நம்முடைய எல்லா ஆசைகளையும் கர்த்தருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் வாகனம் வாங்கினாலும், வீடு வாங்கினாலும், ஊழியம் செய்தாலும் சரி, அன்றாட காரியங்கள் செய்தாலும் சரி, உங்கள் சொந்த ஆசைகளை விட்டுவிட்டு கர்த்தருக்கு அடிபணியுங்கள்.  கர்த்தர் உங்களை சரியான வழியில் வழிநடத்துவார், ஏனென்றால் அவர் நம் தந்தை மற்றும் நம் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார்.  அப்படியானால், நம்முடைய ஆசைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மைச் சமர்ப்பித்துவிட்டோம் என்பதை எப்படி அறிவது? .  நம்மிடம் முழுமையான உள்ளார்ந்த  அமைதி இல்லாதபோது, ​​நாம் கர்த்தரின் சித்தத்திற்கு முழுமையாக அடிபணிய முடியாது.  நாம் நமக்காக மரித்து, நம்முடைய ஆசைகள் அனைத்தையும் சிலுவையில் அறையும் போது, ​​நம்மில் பரிபூரணமான சமாதானம் இருக்கும், கர்த்தர்  தம் சித்தத்தின்படி நம்மை நடத்துவார்.  நாம் ஒரு கல்லறையைப் பார்க்கும்போது அதில் ஒரு பொதுவான வார்த்தை எழுதப்பட்டிருக்கும்.  RIP (அமைதியில் ஓய்வெடுக்கவும்).  அதே போல நாமும் நம் சுயத்திற்காக இறந்தால் நமக்கும் அதே அமைதி இருக்கும், மேலும்  நம் இதயங்களில் அமைதியின்மை இருக்காது.

 நம்முடைய சொந்த ஆசைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து சிலுவையில் அறையும்போது உள்ளார்ந்த ஆவிக்குரிய  அமைதி இருக்கும்.  நாம் நம் இருதயங்களிலிருந்து  நம்முடையவைகளை  ஒவ்வொன்றாக வெளியே  எடுக்கும்போது கர்த்தர்  அவருடைய சித்தத்தை ஒவ்வொன்றாக நம் இருதயங்களில் வைப்பார்.

பிலிப்பியர் 2 : 13″ஏனெனில் தேவனே  தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

Sol.லியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *