நாள்: 12-02-2023
” நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.”
சங்கீதம் 27 :13
“ஆம். இது என் மக்கள் மீது நன்மை பொழியும் நேரம். இது திருப்புமுனையின் காலம். இது அற்புதங்களின் காலம். நீங்கள் என்னுள் நிலைதிருந்தால் என்னுடைய நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் ஊற்றப்படுவதை காண்பீர்கள். அது நீங்கள் எப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு அபரிமிதமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் என்னை சார்ந்தில்லை என்றால் எதையும் பார்க்க மாட்டீர்கள், என் நன்மையை சுவைக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் என்னுடைய அற்புதங்களை காண மாட்டீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒன்றையும் காணமாட்டீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்களோ அது முற்றிலும் உங்களுடையது. என்னுள் நிலைத்திருங்கள். பொழிந்துகொண்டிருக்கின்ற என் நன்மையை சுவையுங்கள் , நீங்கள் என்னுள் சார்ந்திருக்க மறுத்தால் ஒன்றுமே பெற முடியாது. “
தீர்க்கத் தரிசன வார்த்தைகள் அற்புதமான விஷயங்கள். நாம் அவைகளை நேசிக்கிறோம். இருப்பினும் , பெரும்பாலும் இவற்றில் நாம் பங்கு வகிக்கிறோம். ஆம்! கர்த்தர் தம்முடைய நற்குணங்களையும் அற்புதங்களையும் பொழிய விரும்புகிறார். இருப்பினும் நாம் அவரைத் தேடவில்லையென்றால் , அவருக்குள்ளும் அவரது வார்த்தைக்குள்ளும் நாம் நிலைத்திராவிட்டால் அவருடைய வருகையை தவறிவிடப் போகிறோம்.
நாம் திரும்பவும் பிறக்கும் போது , நம்முடைய இரட்சிப்பு பாதுகாக்கப்படுகறது. இருப்பினும் நம்முடைய வளமை,ஆரோக்கியம் போன்ற சில விஷயங்களை நாம் ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக நமக்குச் சொந்தமானதை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ , நம் எதிரி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவரை நாம் அனுமதிக்கும்போது அவரால் முடியும். என்றாலும் நாம் அழுத்தும் போது கர்த்தரின் வாக்குறுதிகள் நம் வாழ்வில் நிறைவேறுவதை தடுக்க , நிச்சயமாக எதுவுமில்லை.
மத்தேயு 11:12 “யோவான்
ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் படுத்தப்படுகிறது, பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதை பிடித்துக் கொள்கிறார்கள்.”
லூக்கா 19 : 44
” உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப் போட்டு , உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச்
செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார். “
கர்த்தரின் வருகை நேரத்தை நாம் உணர்ந்து கொள்ள தவறியதை மேற்கூறிய வசனம் கூறுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்புகிறோம். வருகையின் நேரத்தை நாம் அடையாளம் கண்டு கொள்வோமா? இந்த நேரத்தில் கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பெறுவதற்கு தேவையானதை நாம் செய்வோமா? நான் நிச்சயமாக நம்புகிறேன். அப்படியே வேண்டிக் கொள்கிறேன்.
நண்பர்களே, பாதையைச் செம்மைப்படுத்துபவர், இங்கு இருக்கிறார். அவர் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் நீங்கள் ஊக்கமாக அவரை சார்ந்து பெற்றுக் கொள்வீர்களா?
Sol. ஜோன்.
