தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-02-2023

” என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. “

சங்கீதம் 103 :1


நாம் எல்லோரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காரணம் நமது கர்த்தர் இரக்கமும், கருணையும் , கோபத்தில் தாமதப்படுபவராகவும் , அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார். அவர் எல்லா நன்மைகளாலும் நம்மை திருப்திப்படுத்துகிறார். கழுகைப் போல நம் இளமையை புதுப்பிக்கிறார்.

இரு மாதங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிடும்போது உணவு ஒவ்வாமை காரணமாக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாயின் வழியாக சுவாசிக்க கடினமாக இருந்தது. நான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு என் குடும்ப உறுப்பினர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமலிருக்க சாப்பாட்டு மேசையைவிட்டு வேகமாக வெளியேறினேன். நான் என் அறைக்குச் சென்று முற்றிலும் உதவியற்ற அந்த நிலையில் கர்த்தரிடத்தில் ஜெபித்தேன்.
சங்கீதம் 118 : 7 ” கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் காண்பேன். “ என்ற வசனத்தை பரிசுத்த ஆவியானவர் வாக்குறுதியாக தந்தார். அதன்படியே நான் சாக மாட்டேன், ஆனால் வாழ்ந்து கர்த்தருடைய செயல்களை அறிவிப்பேன் என்று கூறினேன்.
யோவான் 10 :10 “திருடன்
திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் , அது பரிபூரணப்படவும் வந்தேன். “

இந்த வாக்குத்தத்த வசனங்கள் , நாம் வாழவும் , நிறைவான வாழ்வு வாழவும் கர்த்தர் விரும்புகிறார் என்று கூறுகின்றன. எனவே நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டி ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் , சுவாசக்குழாய் வீக்கம் குறைந்து என்னால் சகஜமாக சுவாசிக்க முடிந்தது. அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

நம்மை பலப்படுத்துகின்ற , உதவுகின்ற, தம்முடைய நீதியினால் தாங்குகின்ற அற்புதமான வல்லமைமிக்க கர்த்தரை நாம் கொண்டிருக்கிறோம்.
எசாயா 41 : 40 ” நீ பயப்படாதே , நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் , என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என உணர்ந்து என் அறைக்கு வந்தனர். அப்போது நான் ஒவ்வாமைக்கான மருந்து எடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தால் நான் நிவாரணம் பெற 20 – 30 நிமிடங்கள் ஆகியிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. இரண்டாவது , சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் முடிவு நன்றாக இருந்திருக்காது. என் குடும்பத்தினர் என்னைச்சுற்றி இருந்தாலும் உதவியற்ற நிலையில் தான் இருந்தேன்.
சங்கீதம் 60 : 11 – 12
” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா. தேவனாலே பராக்கிரமம் செய்வோம் , அவரே எங்கள் சத்ருக்களை மிதித்துப் போடுவார்.
ரோமர் 8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் , நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “
எசாயா 54 : 17 ” உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”
மிக ஆச்சரியமான அற்புதத்தை என் வாழ்வில் செய்தார். நான் எந்த மருந்தும் எடுக்கவில்லை. எந்த மருத்துவரையும் கூட சந்திக்கவில்லை. கர்த்தருடைய வசனம் என்னை குணமாக்கி காப்பாற்றியது. இவ்வளவு வல்லமையான அற்புதமான கர்த்தர் நமக்கு இருக்கிறார். அவர் நம்மிடம் கேட்கிறார், ” நானே கர்த்தர், எல்லா மனிதகுலத்துக்கும் நானே கர்த்தர். எனக்கு ஏதாவது கடினமாக இருக்குமா? “

ஆம். கர்த்தாவே உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உம் வழியாக உம்மால் மட்டுமே சாத்தியமாகும். ஆமென்.

நாம் நம்முடைய ஜெபங்களில் வாக்குத்தத்த வசனங்களை பெற்றுக் கொண்டால் , அது நமது ஜெபத்தை வல்லமையாக்கும்.
எபேசியர் 6 : 17 “ தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

நான் பயந்து உதவியற்ற நிலையிலிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் எனது சிந்தனையில் எல்லா அதிசயமான, வல்லமையுள்ள வாக்குத்தத்த வசனங்களைத் தந்தார் . என்னால் ஜெபிக்க முடியாத, சரியாக பேச முடியாத நிலையிலும் , இந்த வாக்குத்தத்த வசனங்களை பெற்றேன். சர்வவல்ல கர்த்தர் உடனடியாக என்னை குணப்படுத்தினார். அத்தகைய அன்பான கருணை.

எனவே கர்த்தருடைய வார்த்தையான வேதாகமத்தை படிப்பது அவசியம் . ஏனென்றால் நாம் கர்த்தருடைய வார்த்தையை படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் , அவருடைய சித்தத்தின்படி எப்படி ஜெபிக்க முடியும்.? நாம் வசனங்களை படித்து தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் இந்த அழகான வாக்குத்தத்த வசனங்களின் வழியாக நம்முடன் பேசுகிறார். ஏனென்றால் யோவான் 14 : 26 ல் இயேசு இவ்வாறு கூறுகிறார். ” என் நாமத்தினாலே பிதா ஆனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து , நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். “

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மை நம்புகிறோம். நாங்கள் எங்கள் சொந்தபுரிதலில் சாய்ந்து கொள்ள மாட்டோம். எங்கள் எல்லா வழிகளிலும் உம்மை ஏற்றுக் கொள்ளுவோம். எங்கள் பாதைகளை நேராக்குவீர். ஆம் , கர்த்தாவே , நாங்கள் எதற்கும் கவலைப்பட மாட்டோம். எல்லாவற்றிற்கும் நன்றியுடன் ஜெபிப்போம். மனித புரிதலைக் கடந்த உம்முடைய சமாதானம் எங்களுக்கு வந்து ,எங்கள் இருதயத்தையும் எண்ணங்களையும் காத்து கிறிஸ்துவுக்குள் வாழ கிருபை புரியும்.

Sol. ரும்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *